புன்னகை
-
by admin
- 1
மொழிகளால்
நொறுக்கப்படாத
பொது மொழி
புன்னகை!
வார்த்தைகளால்
இறுக்கப்படாத
வாய் மொழி
புன்னகை!
உள்ளத்தின் விதைகளை
உதட்டில் விரிக்கும்
உன்னத மொழி
புன்னகை!
மகிழ்வின்
வாடைக் காற்றைத் தொட்டு
மொட்டுப் பூட்டை உடைத்து,
பட்டென்று வரும்
பரவசப் பூ தான்
புன்னகை!
ஒரு வார்த்தையில்
சொல்லும்
நட்பின் வரலாறு தான்
புன்னகை!
உதடுகளை விரியுங்கள்
புன்னகை புரியுங்கள்
சிரிப்புக்கு அது தான்
தாய் வீடு!
மகிழ்ச்சிக்கு அது தான்
மறு வீடு!
கை இல்லாதவர்
ஊனமானவரல்ல
புன்ன”கை” இல்லாதவரே
உள்ளுக்குள் ஊனமானவர்!
புன்னகை
ஒரு வரிக் கவிதையாய்
உருவாகட்டும்,
புரட்டிப் படிக்கும்
புத்தகமாக்கிட வேண்டாம்!
பல் இல்லாக்
குழந்தைக்கும் அழகு
புன்னகை!
வயோதிப
பாட்டிக்கும் அழகு
புன்னகை!
புன்னகையுடன் இவள்
Shahna Safwan
Dharga Town
மொழிகளால் நொறுக்கப்படாத பொது மொழி புன்னகை! வார்த்தைகளால் இறுக்கப்படாத வாய் மொழி புன்னகை! உள்ளத்தின் விதைகளை உதட்டில் விரிக்கும் உன்னத மொழி புன்னகை! மகிழ்வின் வாடைக் காற்றைத் தொட்டு மொட்டுப் பூட்டை உடைத்து, பட்டென்று…