அவள் தான் என் “அம்மா”

உயிர் கொடுத்து
உருவம் கொடுத்து
ஊணும் கொடுத்து
தன் உடம்பில்
இடமும் கொடுத்து
பூமியிலும் கொடுத்தாய்!

எனக்கு உணவாக
தாய்பாலும் கொடுத்து
அழுகின்ற பொழுதெல்லாம்
தாலாட்டும் கொடுத்து
சிரிக்கின்ற பொழுது
முத்தங்கள் கொடுத்தாய்!

படிப்படியாக வளரும் பொழுது
ஆனந்தத்தைக் கொடுத்து
பருவம் அடையும் பொழுது
அரவணைப்பையும் கொடுத்து
மனம் தடுமாறும் பொழுது
ஆதரவும் கொடுத்தாய்!

வளர்ந்து வரும் பொழுது
தவிப்பைக் கொடுத்து
இளமையில்,
தனிமையைக் கொடுத்து
உன்னை பிரியும் பொழுது
கண்ணீரைக் கொடுத்து
அடிக்கடி கண் எதிரே
நிழலையும் கொடுத்தாய்!

அவள் தான் என் “அம்மா”

இளம் தாரகை
ஷஹ்னா ஸப்வான்

உயிர் கொடுத்து உருவம் கொடுத்து ஊணும் கொடுத்து தன் உடம்பில் இடமும் கொடுத்து பூமியிலும் கொடுத்தாய்! எனக்கு உணவாக தாய்பாலும் கொடுத்து அழுகின்ற பொழுதெல்லாம் தாலாட்டும் கொடுத்து சிரிக்கின்ற பொழுது முத்தங்கள் கொடுத்தாய்! படிப்படியாக…

%d bloggers like this: