உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு

  • 11

G.C.E உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளிவந்த நிலையில் பல மாணவர்கள், மாணவிகள் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றிருக்கும் நிலையில், இது போன்ற ஒரு பகுதி மாணவர்கள், கெட்டித் தனமாக படித்த மாணவ மாணவியர்கள் துரதிர்ஷ்டவசமாக சிறிய புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக நுழைவை இழக்கின்றனர்.

வேறு வழிகள்

இவ்வாறாக குறைந்த புள்ளிகள் பெற்ற மாணவ மாணவியருக்கு பல விதமான பல்கலைக்கழக பட்டத்திற்கு ஒப்பான, சில வேளை அதைவிடமவும் உயர்ச்சியான கல்வித்தரத்தை வழங்கக்கூடிய வேறு அரச அமைப்புக்கள் கல்விக் கல்லூரிகள் நாட்டில் பல உள்ளன.

இவை பற்றி எமது சமுகம் இன்னும் அறியாதுள்ளது. நாட்டில் முழு இளைஞர்களின் அறிவு விருத்திக்கும் எதிர் கால முன்னேற்றத்திற்குமாக அமைக்கப்பட்டிருக்கும் இவற்றில், முழுமையான பிரயோசனத்தை மாற்று சமூகமே அனுபவித்து வருகிறது.

இது சம்பந்தமான ஆய்வுகளை அறிவுகளை தெரிந்து கொள்ள அண்மையில் நான் இவற்றில் சில இடங்களுக்குச் சென்ற போது மிகவும் கவலைக்குரிய விடயம், அங்கு நம் முஸ்லிம் மாணவ மாணவியகள் பூச்சியமாகவேககாணப்பட்டனர்.

சிறு அளவில் இருக்கின்றனர் என அதிகாரிகள் சொன்ன போதிலும், அவ்வாறாக யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

உதாரணமாக கடுபெத்தையில் உள்ள நைட்டா (NAITA) நிறுவனம் பல ஏக்கர் அளவு விசலாமானது.

இங்கு கணனி பொறியியல் துறை மின்சார பொறியியல் துறை உற்பட இன்னும் சகல வசதிகளைக் கொண்ட பல்வேறு பட்ட துறைகள் இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

மேலும் இரத்மலானையில் உள்ள ஜோன் கொத்தலாவ பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (General Sir John Kotelawala Defence University) இது பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்காக நிறூவப்பட்டுள்ள, தங்கும் வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான பல்கலைக்கழகம். இதிலும் மிக குறைந்த புள்ளிகளை உடைய வெளி மாணவர்களும் இனைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதிலும் மருத்துவம், பொறியியல், கணணி உற்பட இன்னும் பல துறைகள் காணப்படுகின்றன. இங்கு அவர்கள் மிக குறைந்த புள்ளிகளுக்கே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

உதாரணமாக, அவர்கள் எதிர்பார்க்கும் குறைந்த புள்ளிகள் இல்லாத மாணவ மாணவ மாணவியர் சிறு தொகை கட்டணத்தை செலுத்துவதன் முலம் பத்து வருட காலம் இராணுவ வைத்தியசாலைகளில் வைத்தியர்களாகவும், மேலும் பாதுகாப்புத் துறைகளின் பொறியியல் பிரிவுகளில் வேலை செய்யவேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் கற்கை நெறிகளில் இணைந்து கொள்ளலாம்.

மேலும் இது போன்ற இன்னும் பல ஜேர்மன் தொழில்நுட்ப கல்லூரி, தெஹிவளை கவ்டான வீதியில் உள்ள தொழிற் பயிற்சிக்க ல்லூரி, வெள்ளவத்தை வைத்திய வீதியிலுள்ள தொழில்நுட்ப கல்லூரி. கொழும்பு கங்காராம மோட்டார்   தொழில்நுட்ப கல்லூரி, மற்றும் ரைன்கோ நிறுவனத்தால் அமைக்கபட்டிருக்கும் சுற்றுலா விருந்தோம்பல் கல்லூரி (Hotel Svhool) இது போன்ற நிறையவே இடங்கள் உள்ளன.

சில இடங்களில் அவர்களே உறிய துறைகளில் தொழில் வசதிகளையும் பெற்றுத் தருகின்றனர். மேலும் வசதியற்ற மாணவர்களுக்கு படிப்பிற்கான வட்டியற்ற கடன்களையும் ஏற்படுத்தித் தருகின்றனர்.

படிப்பின் பின் வெளிநாடுகளில் சென்று படிக்க புலமைப் பரிசில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தித் தருகின்றனர்.

இது போன்ற வழிகளை எம் சமூகம் அறியாமலே இருக்கின்றது. படிப்பில் முன்னேற பல வழிகள் உள்ளன. கூடுதலான இடங்களில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கான தற்போது மாணவர்களை சேர்க்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

எனவே எமது சமூகத்தில் உள்ள துறை சார்ந்த படித்தவர்கள், கல்விசார் ஆலோசகர்கள் போன்றவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, கருத்தரங்குகளை நடாத்தி, எதிர்கால சமூகத்திற்கு வழிகாட்ட முன்வர வேண்டும்.

தந்தை அதிபர் அதனால் மகன் வைத்தியர். தாய் ஆசிரியை அதனால் மகன் பொறியாளர் என்று இன்று இருக்கும் நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இன்று சமூகத்தில் அறிவில் அடிமட்டத்தில் உள்ள தரப்பும் படித்து முன்வர வேண்டும்.

கையால் கொடுப்பதும், பள்ளி கட்டுவதும் கிணறு காட்டுவதும் மாத்திரம் ஸதகதுல் ஜாரியா அல்ல. தெரிந்த அறிவை இன்னொருவருக்கு சொல்லிக் கொடுத்து, அதில் அவர் அவரை சார்ந்தவர்கள் பயன் அடையும்வரை சொல்லிக் கொடுத்தவருக்கு நன்மை வந்து கொண்டே இருக்கும். இதில் சொல்லிக் கொடுத்தவருக்கு நட்டம் ஏற்பட்டபோது இல்லை. முயற்சிக்கு கூலி நிச்சயம்.

நாம் ஒருவருக்கு ஒரு வழி காட்டினால், இறைவன் நமக்கு ஒன்பது வழிகளை காட்டுவான்.

பல நூல் வடித்து
நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து
நீவழக்கும் செல்வம்
பிரர் உயர்வினிளே
உனக்கிருக்கும் இன்பம்

பேருவளை ஹில்மி

G.C.E உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளிவந்த நிலையில் பல மாணவர்கள், மாணவிகள் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றிருக்கும் நிலையில், இது போன்ற ஒரு பகுதி மாணவர்கள், கெட்டித் தனமாக படித்த மாணவ மாணவியர்கள் துரதிர்ஷ்டவசமாக…

G.C.E உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளிவந்த நிலையில் பல மாணவர்கள், மாணவிகள் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றிருக்கும் நிலையில், இது போன்ற ஒரு பகுதி மாணவர்கள், கெட்டித் தனமாக படித்த மாணவ மாணவியர்கள் துரதிர்ஷ்டவசமாக…