உலக நாடுகளை ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிவிடாமல் பாதுகாக்கின்ற நாடு சீனா

  • 10

சீனாவில் 1919இல் ஆரம்பிக்கப்பட்ட மே 04 திட்டம், மாக்சியவாதம் போன்று சிரேஷ்ட ஒக்டோபர் புரட்சி பண்புகளால் அதிகமாக பாதிப்புக்குள்ளான திட்டமாகும். மே 04 திட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில் சென் துக்ஸிஹு மற்றும் லை தா சோ போன்ற அறிவியலாளர்கள் நேர்மறையாக அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள். அதன் காரணமாக 1921 ஓகஸ்ட் 01 ஆம் திகதி நவீன உலகின் ஏகாதிபத்திய வாதத்துக்கு எதிரான ஒளிவிளக்கு எனப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது. அது சீன மக்களின் வெற்றியை விட உலக மக்களின் வெற்றி என தேசிய சுதந்திர முன்னணி கருதுகிறது என்பதை பெருமையுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றோம்.

எமது கருத்தின்படி சீன சுதந்திரப் போராட்டம் 1949 ஒக்டோபர் 01 ஆம் திகதி கிடைத்த வெற்றியின் மூலம் முடிவுக்கு வந்தது. சீன பொதுவுடமை அரசாங்கம் எனப்படும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வலுவான தூணின் மேல் அரசு அமைந்தது. அன்று தொடக்கம் சீனா உலக சரித்திரத்தில் பதித்த தடங்கள் மற்றும் பெற்றுக் கொண்ட வெற்றிகள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கோ சீன மக்களுக்கோ கிடைத்த வெற்றியை விட முழு உலக மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று கருதலாம்.

புத்தர் பெருமானின் போதனைகளால் உருவான மனித பண்புகள் நிறைந்த இலங்கை கலாசாரத்துக்கு சோசலிசம் வானத்திலிருந்து வந்த கொள்கையல்ல. மேற்கு ஏகாதிபத்திய இனங்கள் 500 வருட காலமாக எமது நாட்டை ஆட்சி செய்துள்ள போதிலும் ஆன்மீக ரீதியில் அவர்களால் அடக்கியாள முடியாமல் போனது. இலங்கையின் கம்யூனிஸ்ட் கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே உறவினை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அது மாத்திரமல்ல சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீன மக்கள் குடியரசை அமைப்பதற்கு முன்னரே எமக்கிடையான தொடர்புகள் இருந்தமை உறுதிப்படுகின்றது.

இலங்கை 1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. ஆனால் இலங்கை சரித்திரத்தில் முதற் தடவையாக 1956ஆம் ஆண்டில் எஸ் .டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க தேசியவாத ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் சக்திகளின் உதவியுடன் அரசாங்கம் ஒன்றை அமைத்தார். அந்த அரசாங்கம் முதன் முதல் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட அரசாங்கங்களில் மக்கள் சீனக் குடியரசு அரசாங்கம் முதலிடம் பெற்றது. அதன் மூலம் இலங்கையர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு வலுவானது என்பதை கூறாமல் இருக்க முடியாது.

இதன் பிரகாரம் 1957இல் எமது இரு நாடுகளையும் இணைத்தது 2000 வருடங்களுக்கு முன்பாக எம்மிடையே காணப்பட்ட சரித்திரபூர்வமான உறவே என்பது எமது நம்பிக்கையாகும். பல தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்த தெரிவு செய்யப்பட்டார்கள். அரச நிர்வாகத்தையும் கட்சியையும் சமநிலைப்படுத்த பல பரிசோதனைகள் செய்துள்ள வெற்றிகரமான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரே மக்கள் சீனக் குடியரசின் ஜனாதிபதியாவார்.

தற்போதைய சீன ஜனாதிபதி க்ஷி ஜீன் பின்னுக்கு 2012ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது மத்திய செயற்குழு சம்மேளனத்தினால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையும் சீன மக்கள் குடியரசின் தலைமையும் வழங்கப்பட்டன.

21வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏகாதிபத்தியவாதிகளால் சீன மக்கள் குடியரசுக்கும் உலக மக்களின் வாழ்க்கைக்கும் எதிராக எடுக்கப்பட்ட தீர்மானங்களை சீனா தலையிட்டு வெற்றிகரமாக தடுத்தது. ஜனாதிபதி க்ஷி ஜீன் பின் சவால்களை வெற்றி கொண்டுள்ளதாக ஏகாதிபத்திய நாடுகளின் அறிஞர்கள், நிபுணர்கள் அவர்களின் ஏகாதிபத்திய ஊடகங்கள் மூலம் சாட்சி பகர்கின்றனர். ஏகாதிபத்திய நாடுகளில் சில பொருளாதார நிபுணர்கள் சீனப் பொருளாதாரம் உலக பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ளதாக கூறுவதோடு அமெரிக்க பொருளாதாரத்தையும் தோற்கடித்து உள்ளதாகக் கூறுகின்றனர். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மக்கள் சீனக் குடியரசு தோற்கடித்து நீண்டகாலம் என்பது எமது ஏற்றுக் கொள்ளலாகும்.

covid-19 தொற்றால் முதலில் பாதிப்படைந்தது சீன ஆகும். வைரஸை கட்டுப்படுத்த சீன சம்பிரதாய அறிவு, மேற்குலக வைத்திய விஞ்ஞான அறிவு மற்றும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் மக்கள் பெற்றுக் கொண்ட கற்கைகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்க மக்கள் சீன ஜனாதிபதி பெற்றுக் கொடுத்த சரியான தலைமையே உதவியது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. அத்துடன் நின்று விடாமல் ஜனாதிபதி க்ஷி ஜீன் பின் தலைமையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய அறிவை அனைத்து நாடுகளிலும் உள்ள கொவிட் 19 இல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் அளவிற்கு அவர் பரோபகாரியாக உள்ளார்.

ஜனாதிபதி க்ஷி ஜீன் பின் தலைமையில் எட்டு வருட குறுகிய காலத்தில் சீனாவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்த்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றி அளித்துள்ளன.

சீன மக்களுக்கு அவ்வாறான பாரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து எம் போன்ற உலக நாடுகளை ஏகாதிபத்தியவாதிகளின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பதற்கும், அம்மக்களின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் வழங்கும் ஒத்துழைப்பை ஒப்பிடுவதற்கு உலக வரைபடத்தில் சமனான ஒருவர் கிடைக்க மாட்டார்.

வீ.ஆர்.வயலட்

சீனாவில் 1919இல் ஆரம்பிக்கப்பட்ட மே 04 திட்டம், மாக்சியவாதம் போன்று சிரேஷ்ட ஒக்டோபர் புரட்சி பண்புகளால் அதிகமாக பாதிப்புக்குள்ளான திட்டமாகும். மே 04 திட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில் சென் துக்ஸிஹு மற்றும் லை தா…

சீனாவில் 1919இல் ஆரம்பிக்கப்பட்ட மே 04 திட்டம், மாக்சியவாதம் போன்று சிரேஷ்ட ஒக்டோபர் புரட்சி பண்புகளால் அதிகமாக பாதிப்புக்குள்ளான திட்டமாகும். மே 04 திட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில் சென் துக்ஸிஹு மற்றும் லை தா…