மூடும் நிலையில் UTV

  • 19

மீடியா உலகில் கால்பதித்த UTVக்கு நடந்தது என்ன?

2015ஆம் ஆண்டு UTV தொலைக்காட்சி மீடியா உலகுக்கில் பிரவேசித்து டிஜிட்டல் முறையிலான முதல்தர தொலைக்காட்சியாக பரிணமித்தது. அதேநேரம் Facebook வாயிலாகவும் அதன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

2017 ஆம் ஆண்டு டயலாக் வழியாகவும் 2018ஆம் ஆண்டு Telestrial ஊடாகவும் அதன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியமை மற்றுமொரு முக்கிய திருப்பமாக அமைந்தது. Pure TV மூலமாகவும் UTV ன் நிகழ்ச்சிகள் ஒளிப்பாகி வந்தன.

கடந்த காலங்களில் அது பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தது.

ரமழான் காலத்தில் ரமழான் கரீம், அழகிய தொனியில் அல்குர்ஆன் ஓதல், மன்ஹஜுல் இஸ்லாம், சஹர் நேர இப்தார் நேர நேரடி நிகழ்ச்சிகள் போன்றவற்றோடு ஐவேளை அதான், ஜும்ஆ நேரடி நேரடி நிகழ்ச்சி என்பனவும் ஒளிபரப்பாகி வந்தன.

உஸ்ரதுல் இஸ்லாம் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் அது நாளாந்தம் ஒரு மணித்தியாலம் ஒளிபரப்பப்பப்பட்டு வந்தது. அதில் இந்த நாட்டின் மிக முக்கியமான உலமாக்கள் அழைக்கப்பட்டு அதிமுக்கியமான தலைப்புக்களில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடாத்தப்பட்டு வந்தது. இந்திகழ்ச்சியில் சிங்கள மொழி மூலம் பேசக்கூடிய உலமாக்களது நிகழ்ச்சிகளும் தயாரித்து வழங்கப்பட்டன.

அரசியல்துறை விற்பன்னர்கள் அரசியல்வாதிகள் சமூக சேவையாளர்கள் போன்றவர்களை அழைத்து அவ்வப்போது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது.

நாளாந்தம் ஒளிபரப்பாகி வந்த செய்தியறிக்கை சமநிலை தன்மை கொண்டதாகவும் உண்மை நிலவரங்களை தெளிவு படுத்துவதாகவும் அமைந்தது. இந்த நாட்டின் இறைமைக்கு பாதகமாக அமையும் எந்தவொரு நடவடிக்கையாக இருப்பினும் அதனை UTV இனம்காட்டியது. முஸ்லிம் சமூகத்தினது மட்டுமல்லாமல் அனைத்து சமூகங்களது உரிமைகளுக்காக அது குரல் கொடுத்தது.

சினிமா மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் என்பன முற்றாக தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மைக்காலத்தில் வபாத்தான உலமாக்கள் பற்றிய நிகழ்ச்சி ஒன்று நீங்கா நினைவுகள் எனும் தலைப்பில் ஒன்றரை மணித்தியால நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, வசந்தம் டீவி, நேத்ரா டீவி என்பவற்றின் மூலமாகவும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை சமூகத்தவர்கள் பார்த்தும் கேட்டும் வந்தாலும் UTV நிகழ்ச்சிகள் HD மூலமாக ஒளிபரப்பாகியதால் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் இருந்தன. அச்சூடகத் துறையில் நவமணி, விடிவெள்ளி போன்ற பத்திரிகைகள் பெரும் பங்களிப்பைச் செய்தாலும் Electronic media துறையில் UTV க்கு பலமான செல்வாக்கிருந்தது. முஸ்லிம் சமூகம் தனது இஸ்லாமிய அறிவு மற்றும் சமூக விவகாரங்களை அதன் நிகழ்ச்சிகள் வாயிலாக அறிந்து கொண்டது. எனவே மக்களை நல்வழிப்படுத்துவதில் UTV க்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது. மக்கள் மிகவும் விருப்பத்தோடு அந்த நிகழ்ச்சிகளை பார்த்துவந்தார்கள்.

சரிவை நோக்கி

மிகச் சிறப்பான வரவேற்பை பெற்று சமூகத்தின் அடிப்படையான இஸ்லாமிய தேவைகளை பூர்த்தி செய்து வந்த இந்த ஊடகம் அண்மைக்காலத்தில் ஸ்தம்பித்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது கவலையான விஷயமாகும்.

இதற்கு பிரதான காரணம் நிதி நெருக்கடியாகும் என அறியமுடிகிறது.

அங்கு பணிபுரிந்த பல தொழிலாளர்கள் இடைநிறுத்தப்பட்டருக்கிறார்கள். மேல் மாகாண எல்லைக்குள் இருப்பவர்களால் சாதாரண அன்டனா பார்க்க முடிந்த Pelestrial இன்னும் சில மாதங்களில் நிறுத்தப்பட இருக்கிறது. டயலாக் நிறுவனத்துக்கு உரிய காலத்தில் பணம் செலுத்தப்படாததன் காரணமாக கடந்த இரு வாரங்களாக அதன் மூலமான ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத் தொகை செலுத்தப்படாத போது நிகழ்ச்சிப் ஒளிபரப்பை முழுமையாக நிறுத்துவதாக டயலொக் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஆனால் எமது சமூகத்தில் விளம்பரதாரர்களுக்கு தனவந்தர்களும் பஞ்சம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிறுவனம் சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கின்ற பொழுது யார் தான் கை கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வியை சமூகத்திலுள்ள நேயர்களும் சாதாரண பொதுமக்களும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நவமணி பத்திரிகைக்கு நடந்த அதே கதி இந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் நடந்து விடாதிருக்க முயற்சிப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும். UTV HD UTV News – Tamil

மீடியா உலகில் கால்பதித்த UTVக்கு நடந்தது என்ன? 2015ஆம் ஆண்டு UTV தொலைக்காட்சி மீடியா உலகுக்கில் பிரவேசித்து டிஜிட்டல் முறையிலான முதல்தர தொலைக்காட்சியாக பரிணமித்தது. அதேநேரம் Facebook வாயிலாகவும் அதன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. 2017…

மீடியா உலகில் கால்பதித்த UTVக்கு நடந்தது என்ன? 2015ஆம் ஆண்டு UTV தொலைக்காட்சி மீடியா உலகுக்கில் பிரவேசித்து டிஜிட்டல் முறையிலான முதல்தர தொலைக்காட்சியாக பரிணமித்தது. அதேநேரம் Facebook வாயிலாகவும் அதன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. 2017…