அகுறஸ்ஸ நகரில் ஆர்ப்பாட்டம் – தென்மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் இருவர் கைது

  • 9

அகுறஸ்ஸ நகரில் இன்று (12.07.2021) மக்கள் விடுத​லை முண்ணனியினால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஜோன் கொத்தலாவ சட்டமூலம், இராசாயன உரம் இறக்குமதி செய்யத்தடை, எரிபொருள் விலையேற்றம், மாணவர்களின் கல்விச் சீர்குலைவு போன்றவற்றை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைய ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளமையினால், குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜேவிபி தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட 12 பேரை அகுறஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போராட்டம் நடைபெறுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவை பொலிஸார் பெற்றிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் புறக்கணித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள DDG (PHS) 1/DO2/713/2017/20 எனும் கடிதத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை என்பது குறிப்பிடத்தக்கது. Ibnuasad

அகுறஸ்ஸ நகரில் இன்று (12.07.2021) மக்கள் விடுத​லை முண்ணனியினால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஜோன் கொத்தலாவ சட்டமூலம், இராசாயன உரம் இறக்குமதி செய்யத்தடை, எரிபொருள் விலையேற்றம், மாணவர்களின் கல்விச் சீர்குலைவு போன்றவற்றை…