மதுவுக்கு மாயாதீர்

  • 26

மாந்தருக்கு மனுவொன்று
மதுவென்று மாய்ந்தலையாதீர்
மானம் கெட்ட செயலொன்று
செய்ய துணியாதீர்
மனிதம் தொலைத்து
மனம் கெடாதீர்

ஆறுதலென்றாலும் வேண்டாம்
ஆடம்பரத்திலும் வேண்டாம்
அது தான் அழகென்றாலும் வேண்டாம்
அந்நியோரின் வழியொன்றும்
நமக்கு வேண்டாம் விலகிடு

போதையிலே ஆடுபவன்
ஆடவனும் அல்லi
பெரும் ஆணவத்திலாடுபவன்
போதையிலில்லாமலும் அல்ல

மது இழக்கச் செய்யும் அறிவீரோ
மதியின்றி மயங்கிடச் செய்யும்
மாந்தரை மாய்த்திடவே துணியும் அறிவீரோ

குடி கெடுமாம் குடியாலே
பெரும் குணமெல்லாம் குன்றிடுமாம்
பெரும் விளக்கமெல்லாம் கேட்கிறாய்
பெருமுள்ளம் கொண்டே விலகிடலாமல்லவா?
மதுவை விலக்கிடலாமல்லவா?

வாழ்விழக்கச்செய்யும்
வலுவிழக்கச்செய்யும்
வார்த்தைகளும் மீறிச்செல்லும்
அதன் வாசமென்றாலும் வேண்டாம்

வாழ வரும் சந்ததி
வழிகெட வேண்டாம்
வாழ வேண்டிய நீயும்
பெரும் சாபம் தனை
சுமந்தலையவும் வேண்டாம்

கெடுத்துக்கொள்ளாதே
பெரும் கேடுதனை நீயே
விலை கேட்டுக்கொள்ளாதே
உடலே கேடு பெறுமாம்
உளமே பெரும் பாடுபடுமாம்
மதுவுக்கு வேண்டாம் மறு ஜென்மம்
மாற்ற முடிந்திட்டால் அதுவே பெருந்தர்மம்

மாந்தரே உமக்கு மனுவொன்று
மதுவென்று மாய்ந்தலையாதீர்
மானம் கெட்ட செயலொன்று செய்ய துணியாதீர்

இஷாதா முஹம்மத்
ஏரூர்

மாந்தருக்கு மனுவொன்று மதுவென்று மாய்ந்தலையாதீர் மானம் கெட்ட செயலொன்று செய்ய துணியாதீர் மனிதம் தொலைத்து மனம் கெடாதீர் ஆறுதலென்றாலும் வேண்டாம் ஆடம்பரத்திலும் வேண்டாம் அது தான் அழகென்றாலும் வேண்டாம் அந்நியோரின் வழியொன்றும் நமக்கு வேண்டாம்…