62,682,880ரூபா துஷ்பிரயோகம் – கோப் அறிக்கை

  • 5

62,682,880ரூபா  துஷ்பிரயோகம்  செய்யப்பட்டுள்ளது கோப் அறிக்கை மூலம் புலனாகிறது.

களுத்துறை கால்பந்தாட்ட மைதானத்தை நிர்மாணிப்பது தொடர்பில் இத்தாலி கால்பந்தாட்ட வீரர்களின் சங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 40,400 யூரோ (6,287,670 ரூபா) நிதி, ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் போட்டி நடத்துவதற்காக வழங்கப்பட்ட 60,000 டொலர் (6,415,290 ரூபா) நிதி, தனியார் நிறுவனம் ஒன்றினால் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி, ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 200,000 டொலர் நிதி என்பன கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மணிலால் பர்னாந்து அவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கோப் குழுவினால் கவனம் செலுத்தப்பட்டது.

103, 704 சிறுவர்கள் ஆபத்தான தொழில்களில்

மேலும் கால்பந்து சம்மேளனத்தின் இறுதியாக இடம்பெற்ற வாக்கெடுப்பை நடத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு குழுவின் தலைவருக்கு 750,000 ரூபா நிதி மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு தலா 600,000 ரூபா நிதி வழங்குவதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் நேற்று (03) இடம்பெற்ற அரசங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இவ்வாறு நிதி வழங்கப்பட்டமை தொடர்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி கோப் குழுவில் எந்தவொரு அதிகாரியும் குறிப்பிடவில்லை எனவும், இந்நிலையில் ஏப்ரல் 20ஆம் திகதி இந்நிதி வழங்கப்பட்டதாக தற்பொழுது கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயம் என்றும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஆராய்வதுடன், இதற்காக தற்பொழுது பின்பற்றப்படும் நடைமுறையை ஒழுங்குபடுத்துமாறும் கோப் குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார். இது தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு விளையாட்டு அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன் அவர்களுக்கு கோப் குழு அறிவித்தது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த விடயங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை துரிதமாக கோப் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் அவர்கள் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன் அவர்களுக்கு அறிவித்தார்.
SLParliament

நீதிமன்ற கட்டமைப்பை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்ற மூன்று வருட விசேட திட்டம் – நீதி அமைச்சர் அலி சப்ரி

62,682,880ரூபா  துஷ்பிரயோகம்  செய்யப்பட்டுள்ளது கோப் அறிக்கை மூலம் புலனாகிறது. களுத்துறை கால்பந்தாட்ட மைதானத்தை நிர்மாணிப்பது தொடர்பில் இத்தாலி கால்பந்தாட்ட வீரர்களின் சங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 40,400 யூரோ (6,287,670 ரூபா) நிதி, ஆசிய கால்பந்தாட்ட…

62,682,880ரூபா  துஷ்பிரயோகம்  செய்யப்பட்டுள்ளது கோப் அறிக்கை மூலம் புலனாகிறது. களுத்துறை கால்பந்தாட்ட மைதானத்தை நிர்மாணிப்பது தொடர்பில் இத்தாலி கால்பந்தாட்ட வீரர்களின் சங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 40,400 யூரோ (6,287,670 ரூபா) நிதி, ஆசிய கால்பந்தாட்ட…