கொரோனா மீண்டும் இலங்கை மரத்தில் ஏறுமா?

  • 72

சுமார் கடந்த மூன்று காலப்பகுதி பயணக்கட்டுப்பாடுகளுடன் இருந்து மீண்டும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் ஜனநாயக உரிமைகளைக் கோரி அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், மதகுருமார்கள், இளைஞர்கள் வீதி ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வந்த நிலையில் மீண்டும் மறுபுறம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் களுபோவில வைத்தியசாலையில்‌, கொரோனா தொற்றாளர்கள்‌ முகங்கொடுக்கும்‌ பிரச்சினைகள்‌ தொடர்பில்‌ ஊடகவியலாளர்‌ திலக்ஷனி மதுவத்த, சமூக வலைத்தளங்களில்‌ எழுத்தியுள்ளமை மனதை உருக்குவதாய்‌ அமைந்துள்ளது.

தன்னுடைய தாய்‌ கொரோனா வைரஸ்‌ தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்‌. அவரை வைத்தியசாலையில்‌ அனுமதிப்பதற்காக, நீண்ட நேரம் நிற்கின்றேன்‌.

என்னுடைய கண்களுக்கு முன்பாக இருவர்‌ மரணமடைந்துவிட்டனர்‌. இன்னும்‌ சிலர்‌ திடீரென மயக்கமடைந்து கீழே விழுவதையும்‌ அவதானித்தேன்‌.

இந்தியாவில்‌ கொரோனாவின்‌ கோரத்தாண்டவம்‌ தொடர்பில்‌ வாசித்ததை இன்று நான்‌ நேரில்‌ கண்டேன்‌.

தற்போது நேரம்‌ அதிகாலை 1 மணி 20 நிமிடம்‌ (இன்று அதிகாலையில்‌ எழுதியது) இது களுபோவில கொவிட்‌ விடுதி

விடுதியில்‌ இருக்கும்‌ ஒவ்வொரு கட்டில்களிலும்‌ இரண்டு அல்லது மூன்று தொற்றளர்கள். அவர்கள்‌ அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளர்கள்‌.

அந்த விடுதியின்‌ தரையில்‌ படுத்திருந்தவாறு, கட்டில்களுக்கு கீழே படுத்திருந்தவாறு ஒட்சிசன்‌ பெற்றுக்கொண்டு, உயிரைக்‌ காப்பாற்றிக்கொள்வதற்காக இன்னும்‌ சிலர்‌ போராடுகின்றனர்‌. ஓர்‌ அடிக்கூட நகர முடியாத அளவுக்கு பயமாக இருக்கிறது. அந்தளவுக்கு தொற்றாளர்கள்‌ படுத்திருக்கின்றனர்‌.

ஏனைய சகல தொற்றாளர்களும்‌ (100க்கும்‌ மேற்பட்டவர்கள்‌) திறந்த வெளியில்‌, நீண்ட மேசைகள், கதிரைகளில்‌, மரங்களின்‌ கீழே அமர்ந்திருக்கின்றனர்‌. அல்லது படுத்திருக்கின்றனர்‌.

மற்றவர்கள்‌ மணல்‌ தரையில்‌ ஒரு போர்வையுடன்‌ அல்லது இல்லாமல்‌ இருக்கின்றனர்‌ என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் செயற்பாட்டு பணிப்பாளர்  டாக்டர். ஷெல்டன் பெரேரா மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாகவும், சிக்கல்கள் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகமாக இருப்பதாகவும்  குறிப்பிட்டார்.

எரியும் நெருப்பில் வைக்கோலை போடும் செயல்’: விசேட வைத்தியர் சங்கம் எச்சரிக்கை

அனைத்து மருத்துவ அதிகாரிகள் மற்றும் துறைகளின் தலைவர்களுக்கு உரையாற்றிய கடிதத்தில், டாக்டர். சிக்கல்கள் உள்ள கொவிட் தொற்றாளர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஷெல்டன் பெரேரா கேட்டுக்கொண்டார்.

இலகுலான அறிகுறிகளைக் காண்பிப்பவர்கள் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் சிகிச்சை வசதிகளில் தங்க வைக்கப்படும் வரை, அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் இன்று வௌியாகியுள்ள புகைப்படங்களை அவதானிக்கையில் அதிகமானோருக்கு ஓட்சிசன் வழங்கப்பட்ட வண்ணமுள்ளது. இது இலங்கையில் கடந்த காலங்களை விட மிக மோசமான நிலையில் கொரோனா பரவுவதையும், அதன் கொடிய தாக்கத்தையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

மேலும் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியமையை கடுமையாக விமர்சனத்துக்கு உட்படுத்தியுள்ள விசேட வைத்தியர் சங்கம், இது எரியும் நெருப்பில் வைக்கோலை போடும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளது.

வைத்திய நிபுணர்களான வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ, வைத்திய ஆர். ஞானசேகரன் ஆகியோர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உயிரோடு இருக்கும் நோயாளி இறந்தவரை விட குணமடைய அதிக வாய்ப்புள்ளது.” என்றும் தங்களுடைய அறிக்கையில் அவ்விருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் பெருக்கத்தால், நம் நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது மற்றும் இது குறிப்பாக ஆபத்தானது, ஏனெனில் ஒக்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அதிகபட்ச திறனை நாங்கள் ஏற்கெனவே அடைந்துவிட்டோம்.   இது மென்மேலும் வளர, வளர மிகவும் ஆபத்தான சூழ்நிலையை ஏப்படுத்தும் என்றும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஒக்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தால், சிகிச்சைக்கான  அதிகபட்ச திறனும் சில நாள்களில் அதிகமாகிவிடும் என்பது மிகவும் தெளிவாக உள்ளது. ஒக்சிசன் பற்றாக்குறையால் மட்டுமல்ல, நோயாளிகளுக்கு கிடைக்கும் வசதிகளை மீறுவதால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும் எனத் தெரிவித்துள்ள அந்த சங்கம் இது அரச மற்றும் தனியார் துறை வைத்தியசாலைகளை பாதிக்கும்.

இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது ” எரியும் நெருப்பில் வைக்கோலை போடுவதற்கு” ஒப்பாகும். எனவே,  கட்டுப்பாடுகளை தளர்த்துவது அரசாங்கத்தின் வரப்பிரசாதமாக கருதலாம். ஆனால், இந்த நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பை சந்தேகமின்றி இது பெரிதும் அதிகரிக்கும்.

“அனுபவம் வாய்ந்த மற்றும் பொறுப்பான மருத்துவ அமைப்பாக, நாம் இருக்கும் இந்த ஆபத்தான சூழ்நிலையை, அத்தகைய முடிவுகளை எடுக்கும் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டுவது நமது கடமையாக பார்க்கிறோம்” என்றும் குறிப்பட்டுள்ளது.

தடுப்பூசி திட்டம் எதிர்பார்த்த புள்ளிவிவர இலக்குகளை அடையும் போது இந்த பயண விதிகளை தளர்த்த வேண்டும் என்பதே எங்களுடைய இலக்காகும்.   ஒரு நாளைக்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையும் காட்டுகிறது. இந்த காலம் இன்னும் நான்கு அல்லது எட்டு வாரங்கள் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

“நாட்டின் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் நேரத்தில், அதை விரைவில் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எவ்வாறாயினும், இந்த செயலாக்கத்தின் சாத்தியமான பாதகமான விளைவுகளால் நோய் பரவுவதும் அதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்தால் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி நடக்காது என்று நாங்கள் நம்புகிறோம்”

விரைவான வளர்ச்சிக்காக, பொது மக்களும் பொருளாதார நிபுணர்களும் முதலில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதை நிபுணர்களாக நாங்கள் வலியுறுத்துகிறோம். நாட்டில் சுகாதாரத் துறை பலவீனமடைந்து, கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்தால், எதிர்பார்க்கப்படும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் கனவு நனவாகாது.

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விசாரிக்க ஒரு தினம்

இந்த உண்மையை முக்கியமான முடிவெடுக்கும் அதிகாரிகளுக்கு விளக்க வேண்டிய தகவலை சுகாதார அதிகாரிகள் மறைக்கிறார்கள், அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு தைரியம் இல்லை என்பதால் அவர்கள் அதை செய்யவில்லை என்ற உண்மையால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அனைத்து காரணிகளையும் ஆராய்ந்த பிறகு, தற்போதைய சூழ்நிலையை மறுபரிசீலனை செய்து, நாட்டை உயிர்ப்பிக்க தேவையான சுகாதாரம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு தயவுசெய்து அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

நாடு இவ்வளவு கடுமையான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நேரத்தில், மிகவும் நடைமுறை மற்றும் அறிவியல் ரீதியான முடிவுகளை எடுப்பது முக்கியம், மேலும் நாட்டின் மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது மிக முக்கியமான காரணி என்று நாங்கள் நம்புகிறோம்.

பொருளாதாரம், எங்கள் குடிமக்களின் வருமான ஆதாரங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் அவர்களை உயிருடன் வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்றும் நாங்கள் உணர்கிறோம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் கடந்த மூன்று காலப்பகுதி பயணக்கட்டுப்பாடுகளுடன் இருந்து மீண்டும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் ஜனநாயக உரிமைகளைக் கோரி அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், மதகுருமார்கள், இளைஞர்கள் வீதி ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வந்த நிலையில் மீண்டும் மறுபுறம்…

சுமார் கடந்த மூன்று காலப்பகுதி பயணக்கட்டுப்பாடுகளுடன் இருந்து மீண்டும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் ஜனநாயக உரிமைகளைக் கோரி அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், மதகுருமார்கள், இளைஞர்கள் வீதி ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வந்த நிலையில் மீண்டும் மறுபுறம்…