முயற்சி செய்
-
by admin
- 2
முடியும் என்று முயற்சி செய்தால்
முடியாதது எதுவும் இல்லை.
முயலாமல் இருந்து இயலவில்லை
என்றால் ஏது பயன் மனிதா
நாளைய விடியலுக்கு நீ முயற்சி
முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்
ஒருநாள் முயலாமை வெல்லாதே
இதை மறந்து விடாதே மனிதா!
நீ முயற்சியுடன் எட்டி வைக்கும்
ஒவ்வொரு எட்டும் – உன்
எதிர்காலத்தினை ஒளியேற்றும்
ஒளி விளக்கே!
தொட்ட காரியத்தை இடையில்
விட்டு விடாது முயற்சித்தால்
நாளைய விடியலும் பொன்மயமாகுமே!
முடியவில்லை என முடங்கிக்
கிடக்காமல் முழு முயற்சியுடன்
செயற்பட்டால் உன் எண்ணம்
ஒருநாள் நிறைவேறுமே!
Faslul Farisa Asadh
SEUSL
முடியும் என்று முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. முயலாமல் இருந்து இயலவில்லை என்றால் ஏது பயன் மனிதா நாளைய விடியலுக்கு நீ முயற்சி முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஒருநாள் முயலாமை வெல்லாதே…
முடியும் என்று முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. முயலாமல் இருந்து இயலவில்லை என்றால் ஏது பயன் மனிதா நாளைய விடியலுக்கு நீ முயற்சி முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஒருநாள் முயலாமை வெல்லாதே…