கடந்திடும் காயங்கள்

எவரோ ஒருவர் கூறும்
யதார்த்தமான வார்த்தைகளுக்கே
கண்கலங்கும் நான்
எனக்கானவர் மத்தியில்
உண்மையில்
ஒரு குழந்தை தான்

அடுத்தவர் முன் அழகாய்
சிறு புன்னகை பூத்து
புதிராய் நான் நின்றாலும்
என்னைப் புரிந்தவர் முன்னிலும்
நான் ஒரு புதிர் தான்

ஆழமான வார்த்தைகளில் கூட
கண்கலங்காது
காரியத்தை முடிக்கும் எனக்கு
இன்று நானா இது? என
ஏங்க வைத்ததும்
நான் செய்த தவறுகள் தான்

தவறுகள் ஒன்றும் புதிதில்லை
என் வாழ்வில் – எனினும்
அந்தந்த நொடி கடந்து செல்கையில்
கனமாய் வலிக்கிறது
புது காயங்கள் போல
அது தான் நான் கண்ட
தவறுகளின் ஆச்சரியம்

காண்பவை புது காயங்களோ
கண் பட்டு இறந்தவையோ
கடக்கையில் கனப்பவை தானே
காயங்கள்
இதையும் கடக்கலாம் எனும்
நம்பிக்கையில் கடக்கின்றன
ஒவ்வொரு நொடியும்
புன்னகையும் போலியும்
கலந்த முகசாயல்களில்

Shima Harees