இலக்கியத்துறையில் தடம் பதித்த ஆளுமை மிக்க அதிபர் எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா

  • 16

மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையுடன் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட  “கலை இலக்கிய திறந்த மட்டப் போட்டி 2021” நிகழ்வில் மீரிகம பிரதேச செயலகப் பிரிவில்  பஸ்யாலயைச் சேர்ந்த அதிபரும் எழுத்தாளரும் கவியரசியுமான எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா மூன்று முதலிடங்களையும் (தமிழ் – கவிதை, சிறுவர் கதை மற்றும் ஆங்கிலம் – கவிதை) ஒரு இரண்டாம் இடத்தினையும் (தமிழ் – பாடலாக்கம்) தனதாக்கி வெற்றியீட்டியுள்ளார்.

இவர் கடந்த 2019 மற்றும் 2020 களில் பிரதேச மட்டத்தில் ஒன்பது முதலிடங்களை தனதாக்கி சாதனை படைத்துள்ளார்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக மீரிகம பிரதேச செயலகத்திலேயே மிகவும் அழகான முறையில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் டப்.பீ.பிரசாத் இந்திக அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  அதிபரும் கவியரசியுமான பஸ்யாலயைச் சேர்ந்த எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா சான்றிதழ்கள் பரிசில் களைப் பெறுவதையும் காணலாம். அருகே உதவிப் பிரதேச செயலாளர் ரசிகா மல்லவாரச்சி மற்றும் கலை இலக்கிய போட்டி நிகழ்வுகளின் பொறுப்பாளர் புஷ்பா விஜேதுங்க அவர்களையும் படத்தில் காணலாம்.

இலங்கை அதிபர் சேவை, தரம் ஒன்றில் பதவி வகிக்கும் இவர்,  பஸ்யால எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராவார். இளவயது முதல் எழுத்துத் துறையில் ஆர்வம் காட்டி வருமிவர்  2017ஆம் ஆண்டு “இரண்டும் ஒன்று” என்ற தனது முதலாவது கவிதை நூலை வெளியிட்டதன் மூலம் இலக்கிய உலகில் பெயர் பதித்தது மட்டுமல்லாமல், “புதையல் தேடி” என்ற கவிதை நூலை 2019 ல் வெளியிட்டு அதனை நிலைநாட்டினார். இயற்கை,  சமூக அவலம், பெண்ணியம், சர்வதேச பார்வை என்பன இவரது கவிதைகளில் காணக்கூடியதாக இருப்பதோடு தனது எழுத்தாண்மையினால், குறுகிய காலத்தில் மிகப் பெரியளவில் பேசக்கூடிய ஒருவராகவும் மாறியுள்ளார்.

இவரது இரண்டாவது கவிதை நூல் “புதையல் தேடி” என்ற நூல் மத்திய கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் 2020 ஆம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று நூல்களில் ஒன்றாக இருப்பது இவரது கவிதைகளின் கனதியை எடுத்தியம்புகின்றது. இந்த நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

அத்தோடு அதிபரும் கவியரசியுமான எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா இந்த கொரோனாக் கால விடுமுறையின் போதும் தனது பாடசாலை மாணவர்களை ஆசிரியர்களது உதவியுடன் ஊக்குவித்து கலை இலக்கிய போட்டிகளில் பதினொரு மாணவர்களைக் கலந்து கொள்ளச் செய்து அவர்களது வெற்றிக் களிப்பில் இவர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறார். இவ்வாறான ஆளுமைகளையும் மாணவர்களையும் இன்னும் சாதிக்க ஊக்குவிக்க நாமும் போற்றுவோம்  மனம் திறந்து வாழ்த்துவோம்.

இடமிருந்து வலமாக மாணவர்கள் அஸ்பா தஸ்ரிப், மன்ஹா மஹ்ஜப் ஸல்மான், மனால் ரிஸ்வி, அனா ஸஹ்லான், இமான் ஸஹ்லான், நஸ்ரான் அக்ரம், அதிபர் எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா, மாணவர்கள் ஆஸியா அலி, ஹிக்மா கரீம், ஹுமைரா அப்துல்லாஹ், ஆதிகா பலீல் நைனார், மன்ஹா நஸ்ருதீன்.

IMG-20211126-WA0083
IMG-20211126-WA0078
IMG-20211126-WA0076
IMG-20211126-WA0085
IMG-20211127-WA0022
previous arrow
next arrow

மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையுடன் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட  “கலை இலக்கிய திறந்த மட்டப் போட்டி 2021” நிகழ்வில் மீரிகம பிரதேச செயலகப் பிரிவில்  பஸ்யாலயைச் சேர்ந்த அதிபரும் எழுத்தாளரும் கவியரசியுமான…

மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையுடன் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட  “கலை இலக்கிய திறந்த மட்டப் போட்டி 2021” நிகழ்வில் மீரிகம பிரதேச செயலகப் பிரிவில்  பஸ்யாலயைச் சேர்ந்த அதிபரும் எழுத்தாளரும் கவியரசியுமான…