இளம்கீறல்

ஆயிரம் ஆட்டம் போட்டாலும்
அன்புக்கு அவள் அடிமைதான்
என்னைப் பொருத்தமட்டில்

இளம் கீறலாய் இருக்கும் அவளை
இழுத்து சீண்டிப்பார்த்தால்
இழப்பு உனக்குத்தானே ஒழிய
அவளுக்கல்ல
அர்த்தங்கள் புரிகிறதா?

அழகு நிலாவைத் தாண்டி
அமாவாசையிலும் கூட
ஒளியூட்ட அவளால் முடியுமென்பேன்

எல்லாமே அறிந்தபோதும்
அவளுக்கானவர்களிடம்
அடக்கமாய் இருந்து
அவர்களை உயர்த்திப்பார்த்து
ஊமையாயேனும் சந்தோஷப்படுத்தி
அழகிய வாழ்வை அர்த்தப்படுத்துவாள்.

ஏனெனில் அவள் உலகமோ
அடுத்தவர் உலகம்
அவர்களே இவளுக்கு சொர்க்கம்
அவளுக்கு அன்பு காட்டுவதை
ஒருபோதும் நிறுத்துவிடாதீர்கள்

பின்த்அமீன்
மாவனல்லை
Tags: