சித்தியும்மாவின் முகத்திலிருந்த பதற்றத்தை அவதானித்தவள்,
”எந்தேன் விசயம் உம்மா… இவ்ளோ அவசரம்? ”
”இல்ல… மாப்ள ஒன்ன நாளேக்கி பாக்க வாராம்… இன்டேகி அவர் நாட்டுக்கு வாராம்… அப்டியே நாளேக்கி ஊட்டுக்கு வாரன்ட…. அதுதான்… ஒனக்கு நல்லொரு கிட் எடுக்கோணுமேன்…. வா டௌனுக்கு போக…”
அவளுள்ளம் சற்று அதிர்ந்து நின்றது.
”அவசரமா…. இப்பவேவா?”
”ஓ…. வா போம்….”
அவள் மௌனியாக நின்றுகொண்டிருந்தாள்.
”தாத்தா…. வாசி தான் அப்ப…. போ… போ….”
”இவளொன்டு…. எப்ப பாத்தாலும் அவள கொளப்பி கொண்டு…. போ… ”
சித்தியும்மமா பரீனாவை கடிந்து கொண்டார். அவளுள்ளமோ ஆயிரமாயிரம் எண்ணப் பிரளயத்தினுள் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது.
…………………………………………….
சிப்னாவினால் அவளது கடந்த காலத்தை மறக்காமல் இருக்க முடியாமல் போனதையிட்டு மேலும் கவலை அதிகரித்தது.
‘உம்மாவோ தெரிய இந்த பொம்புளய மறுபடி வரசென்ன? ‘
அவளுள்ளம் கேள்வி கேட்டுக் கேட்டே அவளை குடைந்து கொண்டிருந்தது.
உள்ளே சென்ற ஷரீபதாத்தா
பெருமூச்சுடன்,
”அவள்ட முன்னுக்கு இத பத்தி பேசீச்சபடாதுடி…. அவள் இன்னும் அப்டியே தான்… எனக்கு பயம் அவள பத்தி…. அல்லாவே….”
அழ ஆரம்பித்தவளது தோள்களை தடவிக் கொடுத்து,
”நீ யோசிச்சாத மிச்சம்… எல்லம் அவன்ட நாட்டமேன்… அவன் சரியாக்கியோண்டும்… நீ அழாத…”
”நீ செல்லியது சரி தான்… அத அவளுக்கும் வெளங்கபடுத்தோணுமேன்… ”
”அவளுக்கு வெளங்கபடுத்த தேவில்ல… அவள் மௌலவியா…. எங்களேம் விட அவளுக்கு அல்லாவ பத்தி நல்லா தெரீம்…”
பஹீமாவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த சிப்னாவின் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
தொடரும்.
M.R.F Rifdha…..
You should take part in a contest for one of the best blogs on the web. I will recommend this site!