காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 02

  • 11

“இந்த மோதிரத்தை இதுக்கு முன்னாடி வேற எங்கயோ பார்த்து இருக்கேனே!”

“என்னடி யோசிக்குறே?…ஆமா இதென்னெ ரிங் ஒன்னு?”என கேட்டாள் மீரா.

“ப்ரொபெஸர் போகும் போது கீழே விழுந்திச்சி…”என்று சொன்னாள் ஜெனி.

“எங்க காட்டு…”என்றவள் அதை வாங்கிப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.

“ஹேய் இது… இது  சிட்டி மியூசியத்துக்கு சொந்தமான பழங்கால மோதிரம். கிங் கில்கமேஷ் அவரோட பெஸ்ட் பிரண்ட் என்கிடுவுக்கு பரிசாக கொடுத்தது.”

“என்னடி சொல்லுறே?”

“உனக்கு நியாபகம் இல்லியா? போனவாட்டி நாம சிட்டி மியூசியம் போனபோது ப்ரொபெஸர் இதை பத்தி சொன்னாரே டி…

அப்பறம்  மறுநாளே இதை காணும் என்னு சொல்லி பேப்பர்ல எல்லாம் நியூஸ் வந்ததே!”

“ஆமா… ஆமா… எனக்கு நியாபகம் இருக்கு… ஆனா அதெப்படி… நம்ம ப்ரொபெஸர் கிட்ட… நோ சான்ஸ்… அப்படி என்னா…”என்றவள் அப்படியே நிறுத்தி கொள்ள… மீரா மீதியை சொல்லி முடித்தாள்.

“ப்ரொபெஸர் இதை திருடிட்டாரா?”

“ஷ்…சத்தமா பேசாதே!.எல்லோரும் கேட்டுடுவாங்க. அதோட இதோட உண்மையான விபரம், எப்படி இது சேர் லாரன்ஸ் கிட்ட வந்தது என்னு தெரியாம… நாமளே எதையும் பரப்ப கூடாது.”என்றாள் ஜெனி.

“நீ சொல்றதும் சரிதான். வரட்டும் அவர்… அவர் வாயாலேயே வர வைப்போம்.”என்றாள் மீரா.

பஸ்ஸும் ரிப்பயார் பண்ணி முடிந்து இருந்தது. சாப்பாடு வாங்க போனே குழுவும் வந்துவிட்டது.

“அப்போ எல்லோரும் சாப்பிட்டுட்டு பயணத்தை ஆரம்பிப்போம்.” என்கிறார் ப்ரொபெஸர்.

மீராவும் ஜெனியும் கொஞ்சம் கடுப்புடன் சாப்பிட்டு முடித்தனர். அவரை சுற்றி மற்றவர்கள் இருந்ததால் லோரன்ஸ் கிட்ட அவர்களால் எதுவும் கேட்கமுடியவில்லை. எல்லோரும் கைகழுவிட்டு வர அப்போது பஸ்ஸிற்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தார் லோரன்ஸ்.

“என்ன சேர் எதையோ தேடுற மாதிரி இருக்கு?” என்று மீரா வேண்டுமென்றே கேட்டாள்.

அவர் கொஞ்சம் தடுமாறி கொண்டே, “அதெல்லாம் ஒன்னுமில்லை… சும்மாதான்.”என்றார்.

“நீங்க தேடுற விதத்தை பார்த்தா உங்களுக்கு ரொம்பவும் முக்கியமான, பெறுமதியான பொருளை தொலைச்சிட்டு தேடுற மாதிரி இருக்கே. அதாவது பணம், வாச்ஜ், ச்சைன், இல்லேன்னா ரிங்” என்று தன்பங்கிற்கு சீண்டினாள் ஜெனி.

அவர் இன்னமும் தடுமாறி கொண்டே முகத்தில் இருந்த வியர்வையை துடைத்து கொண்டு “வண்டிய எடு ட்ரைவர்” என்று விட்டு முன்னாடி போய் அமர ஜெனியும் மீராவும் ஒருவருக்கு ஒருவர் கையடித்து கொண்டனர். ஆர்தருக்கோ ஒன்றும் புரியவில்லை.

*******

மொத்தமாக மாறிவிட்ட புது உலகில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் தன்னுடைய நாடு இருந்த இடத்தை தேடிக்கொண்டு இருந்தான் கில்கமேஷ். சூரியவெளிச்சத்தில் பயணிக்க பிடிக்காமல் காட்டு வழியாகவே 10 நாட்கள் தொடர்ந்து நடந்தான்… கண்ணில் பட்ட  நதிகளில் குதித்து நீந்தியே மறுகரை அடைந்தான்.

அவனுக்கு பசிக்க ஆரம்பித்தது… காட்டில் கிடைத்த கனிவர்க்கங்களை உண்டும் முயல் போன்ற விலங்குகளை பிடித்து உண்டும் பசியாற்றி கொண்டு  தன்னையும் அறியாமல் நாடுகள் தாண்டி பயணித்து விட்டான். எங்கு தேடியும் யூப்ரதேஸ் தைக்கிறீஸ் நதியை காணவில்லை. வித்தியாசமாக இருக்கும் மனிதர்கள் எல்லாம் வேறுநாட்டு மக்களாக இருக்க கூடும் என்றெண்ணி கொண்டான். அவனை நேரில் கண்ட பலர் காட்டுவாசி என்று கத்திகொண்டே ஓடிவிட்டனர். அத்தோடு அவன் பேசிய பாஷை கூட யாருக்கும் புரியவும் இல்லை.

உருக் நகரின் எல்லையை பார்த்தாலே போதும் அவனுக்கு தெரிந்துவிடும். அந்த எல்லையை தான் தேடுகிறான். எப்படியோ சிசிலி நகரின் காட்டுப்பகுதியை அடைந்துவிட்டான்.

**********

அதேபோல் ஜெனிபர் குழுவும் மியூசியம் வந்து சேர்ந்தது.

“இறங்குங்க?” என்ற லோரன்ஸ் அப்போதும் அவர் பஸ்ஸிற்குள் தேடுவதை விடவில்லை. ரொம்பவும் மூட் அவுட் ஆகி இருந்தார். நண்பிகள் இருவரும் இதனை நன்றாகவே ரசிக்க அவர்கள் பின்னாடி வந்து  ஆர்தர் பயங்காட்டினான்.

“”டேய் லூஸு… ப்ஹா…”

“ஏய் திருடிங்களா?  நீங்க ரெண்டுபேரும் எதையோ மறைக்குறீங்க.. ஒழுங்கா என்னன்னு சொல்லிடுங்க.” என்று மிரட்டினான்.

“அங்க பார்த்தியா நம்ம ப்ரொபோசரை…”என்று ஆரம்பித்து அத்தனையையும் சொல்லி முடித்தாள் மீரா.

“அடப்பாவி ப்ரொபெஸர் நீதான் இதை திருடினியா… இது எவ்வளவு வருஷம் பழமையானது தெரியுமா? 8000 வருஷம்… “

“டேய் அமுக்கி வாசி அந்த ஆளு வர்றார்…. அவரை கையும் களவுமா பிடிப்போம்.” என்றாள் ஜெனி. எல்லா மானவர்களையும் அழைத்து கொண்டு உள்ளே போனார் லோரன்ஸ்….

அங்கிருக்கும் செக்கூரிட்டியிடம் மியூசியத்தை சுற்றிப்பார்ப்பதற்காக அரச அனுமதி பாத்திரத்தை காட்டி அனுமதி பெற்றுக்கொண்டே அவர் அழைத்து சென்றார்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“இந்த மோதிரத்தை இதுக்கு முன்னாடி வேற எங்கயோ பார்த்து இருக்கேனே!” “என்னடி யோசிக்குறே?…ஆமா இதென்னெ ரிங் ஒன்னு?”என கேட்டாள் மீரா. “ப்ரொபெஸர் போகும் போது கீழே விழுந்திச்சி…”என்று சொன்னாள் ஜெனி. “எங்க காட்டு…”என்றவள் அதை…

“இந்த மோதிரத்தை இதுக்கு முன்னாடி வேற எங்கயோ பார்த்து இருக்கேனே!” “என்னடி யோசிக்குறே?…ஆமா இதென்னெ ரிங் ஒன்னு?”என கேட்டாள் மீரா. “ப்ரொபெஸர் போகும் போது கீழே விழுந்திச்சி…”என்று சொன்னாள் ஜெனி. “எங்க காட்டு…”என்றவள் அதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *