குண்டு வெடிப்பில் சிந்திக்க சில துளிகள்

  • 14

இன்றைய எனது பதிவு தற்போதைய கலநிலவரம் பற்றி அலசுவதாகும். இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குண்டுமழை பொழிந்துள்ளது. என்றாலும் கடந்த ஐந்து ஆண்டு வரலாற்றை அவதானிக்கையில் இது எதிர்பார்க்கப்(பட்ட)(படாத)தொன்றாகும்.

இந்த கலவர சூழ்நிலையில் சமூக வளைத்தளங்களை முடக்கியது வரவேற்கத்தக்கதாகும். ஆனால் நியுஸ்லாந்தின் செயற்பாட்டிற்கும் நமது செயற்பாட்டிற்கும் பாரிய வித்தியாசமுள்ளது. அவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அனுதாபங்களை ஊடக அறிக்கையுடன் மாத்திரம் சுருக்காமல் தலைவர்கள் களத்திற்கு சென்றே ஆறுதல் தெரிவித்தனர். ஆனால் இங்கு ஈஸ்டர் ஞாயிறு கொண்டாடிக் கொண்டிருந்த கிறிஸ்தவ மக்களுடன் அரசியல் தலைவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பது மீள் பரிசீளிக்க வேண்டியதாகும்.

அங்கு பள்ளிவாசல் முற்றவெளியில் கிறிஸ்தவ மக்களால் மலரஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறே இலங்கையிலும் 23.04.2019 (நாளை) திகதி துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நியுஸ்லாந்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக வெள்ளிக்கிழமையை ஒதுக்கி தொலைக்காட்சியில் அதான் ஒளிபரப்பியமை, பாராளுமன்றத்தில் அல் குர்ஆன் பாராயனம் செய்தமை போன்று நாளைய தினம் (23.04.2019) கூடவுள்ள பாராளமன்ற அமர்வில் பைபிள் பாராயனம் செய்து, அடுத்த கட்டமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27.04.2019) அரச அணுசரனையுடன் தேவாலயங்களில் விஷட பூஜைகளை ஏற்பாடு செய்து கிறிஸ்தவ சமுகத்தை அரசினால் ஆறுதல்படுத்த முடியும்.

குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மக்களை ஆறுதல் படுத்தாமல் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்களை வைப்பதற்கான ஊடக அறிக்கைகளே அதிகம் வெளிவந்த வண்ணமுள்ளமை கவலைக்குறியதாகும்.

ஆனால் இரத்த வங்கிகள் நிரம்பிவழியும் வண்ணம் இரத்த்தானம் வழங்க முஸ்லிம் சமூகத்தினர் முன்வந்தமை. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இறுதியறிக்கையின் படி உடல், பொருள், நிதி என்பவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளமை என்பன இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயங்களாகும்.

நாடாளாவிய ரீதியில் பதற்ற நிலமை பரவாமல் இருக்க சமூக வளைத்தளங்களை முடக்கினாலும் அரசு, பாதுகாப்பு தரப்பின் ஊடக அறிக்கையை அவதானிக்கையில் இலங்கையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவுள்ளது. அதாவது கிடைக்கின்ற தகவல்களை உரிய முறையில் விசாரிக்காமல் பொடுபோக்கு காட்டுவதை குண்டுவெடிப்பின் பின்னரான அறிக்கைகள் உணர்த்துகின்றது. மேலும் தற்போது குற்றவாளியை தேடுவதை விட்டுவிட்டு அரசியல்வாதிகள் தங்களுக்குள் பரஸ்பரம் குற்றாஞ்சாட்டிய வண்ணமுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் இடம் பெறுகின்ற அனைத்து தாக்குதல்களும் தீவிரவாதிகளாலே நிகழ்த்தப்படுகின்றது. ஆனால் அவர்கள் தமக்கான பெயரை முஸ்லிமாக அல்லது கிறிஸ்தவமாக வைத்துக் கொள்கின்றனர். அதற்காக தீவிரவாதியின் பெயரை அடையாளப்படுத்தும் மதத்தை குற்றவாளிக் கூண்டில் வைக்காமல் தீவிரவாதம் என்ற புதிய மதமொன்றின் கீழே அவர்கள் இனங்கான வேண்டும்.

நாட்டின் இரு முனைகளான மேற்கு, கிழக்கு பகுதியில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட இத் தொடர் குண்டுத்தாக்குதல் தேசிய தௌஹீத் ஜமாத் சார்ந்த அமைப்பினரின் செயற்பாடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும் இது உறுதியாகவில்லை. மேலும் இதற்காக வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கள் அல்லது ஆயுத விற்பனையாளர்களின் உதவி பெற்றிருக்கலாம்.

உலக அரங்கில் அமேரிக்காவின் வெளியுறவுக் கொள்கை “பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆற்றும்” அரசியலாகும். குண்டு வெடிப்பின் பின்னர் அமேரிக்காவின் ஊடக அறிக்கைகள் அவ்வாறுதான் உள்ளது. எனவே இதன் ஊடாக இலங்கையில் ஆயுத விற்பனைக்கு அல்லது கனிய எண்ணெய் சுரண்டலுக்கு இலங்கையில் அமேரிக்கா கால் பதிக்கலாம். முஸ்லிம்களை குற்றவாளியாகவும், இலங்கையின் பாதுகாப்புத்துறையை பலவீனப்படுத்திய அறிக்கைகளும் இதற்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளன.

இந்நிலையில் அரசியல்வாதிகள் தங்களுக்குள் பரஸ்பரம் குற்றஞ்சாட்டமல் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். நாட்டு மக்களும் இளைஞர்களும் மற்றவர்களை மதம்சார்ந்த கோணத்தில் பார்த்து பகைமை பராட்டாமல் இலங்கையன் என்ற வகையில் ஒன்றினைய வேண்டும்.

தற்போது வெளிநாட்டு போதைப்பொருள் கம்பனிகளின் கையில் நாடுள்ளது. அடுத்தகட்டமாக ஆயுதக்கம்பனிகளின் கையில் மீண்டும் நாட்டை தாரைவார்க்காமல், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கம்பனிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுப்போம்.

Ibnuasad

இன்றைய எனது பதிவு தற்போதைய கலநிலவரம் பற்றி அலசுவதாகும். இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குண்டுமழை பொழிந்துள்ளது. என்றாலும் கடந்த ஐந்து ஆண்டு வரலாற்றை அவதானிக்கையில் இது எதிர்பார்க்கப்(பட்ட)(படாத)தொன்றாகும். இந்த கலவர…

இன்றைய எனது பதிவு தற்போதைய கலநிலவரம் பற்றி அலசுவதாகும். இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குண்டுமழை பொழிந்துள்ளது. என்றாலும் கடந்த ஐந்து ஆண்டு வரலாற்றை அவதானிக்கையில் இது எதிர்பார்க்கப்(பட்ட)(படாத)தொன்றாகும். இந்த கலவர…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *