என்னுயிர் இஸ்லாமிய தோழிகளே

  • 6

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு..

தற்காலத்தில் பாதுகாப்பு நிமித்தம் தடை செய்யப்பட்டுள்ள burqa, nikab சம்பந்தமாக உங்களுக்கு என்னால் முடியுமான ஒரு சிறு அறிவுரை:

சகோதர இன மத ஒரு பெண் அவருடைய கலாச்சார உடையுடன் முழுதும் முகத்தை மறைத்து உங்கள் அருகில் வந்தால் என்ன நினைப்பீர்கள்? பயப்படுவார்கள் தானே. இதே பயம் உங்களால் சகோதர இன மத சகோதரனுக்கு சகோதரிக்கு வரலாமா.? இல்லையா.?

நிச்சயம் வரும்.

      1. ஆகவே அவர்களின் உணர்வுகளை மதிக்கும் முகமாக இதனை அணிவதை தவிர்ந்து கொள்ளுங்கள்.

        இவ்வளவு நாளும் அணிந்தோமே.. எதுவும் பிரச்சினைகள் வரவில்லையே என்பீர்கள்.. ஆம். நீங்கள் சொல்வதும் உண்மை. ஆனால் இவ்வளவு நாள் அவர்கள் முஸ்லிம்கள், முஸ்லீம் பெண்கள் மீது ஒரு மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார்கள். ஆனால் இன்று தான் நாம் அதனை இழந்து விட்டோமே.. அதனால் தானே அன்று அவர்கள் தப்பாக பார்க்காத இதனை இன்று தப்பாக பயத்துடன் பார்க்கிறார்கள்…
        சகோதர மதத்தவர்கள் அணியும் ஆடைகளை அதிகமாக கொள்வனவு செய்ய முகத்திரையுடனேயே முஸ்லீம் பெண்களாக வந்து கொள்வனவு செய்து போலீசாரின் தேடுதலில் அக்கப்பட்டமையை நினைவு படுத்திக் கொள்கிறேன்.

      2. சகோதர இனத்தவர்களின் உணர்வுகளையும் தாண்டி சட்டத்தை மதிக்கும் ஒரு இலங்கையனாய் இதனை அணிவதை தவிர்ந்து கொள்ளுங்கள்.

        ஆம். Burqa, nikab உற்பட முகத்தை முழுதும் மறைக்கும் அனைத்துக்கும் தான் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை மதித்து நடப்போமே..

      3. எல்லாவற்றையும் தாண்டி.. அல்லாஹ் நம்மெல்லோரினதும் செயல்களை பொருட்படுத்துவதில்லையே.. மாறாக உள்ளத்தைத்தானே பார்க்கிறான். என்பதை மனதால் ஏற்றுக் கொண்டு இதனை அணிவதை தவிர்ப்போமே..

        ஒரு சிலர் முகத்திரை இல்லாமல் வெளிச்செல்லவே முடியாது என இருப்பதாகவும் அறிகிறேன். நோய் நொடிகள் என்றால் வைத்தியசாலைக்குக் கூட போக மாட்டேன் என்று இருப்பீர்களேயானால் நிச்சயம் நீங்கள் மிகப் பிழையாகவே சிந்திக்கிறீர்கள்.
        உங்களை அந்த மனநிலைக்கு கொண்டு சென்றதில் உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு சிலர் அல்லது சிலரது போதனைகள் காரணமாக இருக்கலாம். அவர்கள் இந்த சகோதரிகளுக்கு உண்மையை சரியாக புரிய வைத்து நெறிப்படுத்துவது அவர்களின் கடமை என்பதையும் நினைவூட்டிக் கொள்கிறேன்.

    மார்க்கத்தில் எங்கும் முகத்தை மறைப்பது கடமையாக்கப்படவில்லையே. அதனால் தானே இவ்வாறு சொல்கிறோம்.. மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட ஒன்றாயின் அதனை எங்கும் எப்போதும் விட்டுக்கொடுக்கவோ சமாளித்து நடக்கவோ எந்த ஒரு அவசியமும் இல்லை.

    இங்கு நான் அதிகமாக மார்க்கம் பேசவுமில்லை. மார்க்கம் பேச மார்க்க சட்ட திட்டங்கள் படித்தவனுமில்லை. என் அறிவிற்கு உட்பட்டதை சொன்னேன்.. ஆனால்..

    நான் பல்லின சமூக நண்பர்களுடன் பழகும் ஒருவன் என்ற வகையில் இது தொடர்பாக நிறையவே கேள்விகள் கேட்டார்கள். Then அவர்களுக்கு பயந்து தான் or அவர்களை சமாளிக்கத்தான் இதனை எழுதுவதாக எண்ண வேண்டாம். மாறாக அவர்களின் கேள்விகளில் நிச்சயமாக ஒரு நியாயத்தை நான் கண்டேன். அதனாலே சொல்கிறேன். தவிர்ந்து கொள்ளுங்கள். அவர்களின் உணர்வுகளை மதியுங்கள்.

    சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு சில இனவாதிகள் இந்த விடயத்தில் ஊளையிட்டதும் உண்மை. அதனையும் குறிப்பிடத்தான் வேண்டும். ஆனால் அவர்களுக்கு போட்டியாக விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தால் அங்கு நாமே பிழை. ஏன்.. நாம் எப்போதும் சரியானத்தையே நாட வேண்டும். இல்லையெனில் நமக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசமே இல்லையே..

    இன்றும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஒருவர் இருவர் என முகத்திரையுடன் பொது இடங்களில் கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் என செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. கவலை. மிகக் கவலை.

    சட்டத்திற்கு எதிராக செயற்பட்டு தண்டனை கொடுக்கப்படும் பட்சத்தில், துணையின்றி தனியாக வருடக்கணக்கு சிறையில் கழிக்க வேண்டிய நிலைமைகளும் ஏற்படலாம். ஏற்பட்டிருக்கிறது. இது நமக்கு வேண்டியதில்லையே..

    இனவாத ஊடகங்களுக்கு ஏசி ஏசி இன்னும் நாமே அநியாயமாக அவர்களுக்கு தீணி போட்டுக்கொண்டே இருக்க வேண்டாமே.. Please.. சிந்திப்போம்..

    நன்றி, வஸ்ஸலாம்.

    M. I. Firzy Yoosuf
    Weligama.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.. தற்காலத்தில் பாதுகாப்பு நிமித்தம் தடை செய்யப்பட்டுள்ள burqa, nikab சம்பந்தமாக உங்களுக்கு என்னால் முடியுமான ஒரு சிறு அறிவுரை: சகோதர இன மத ஒரு பெண் அவருடைய கலாச்சார…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.. தற்காலத்தில் பாதுகாப்பு நிமித்தம் தடை செய்யப்பட்டுள்ள burqa, nikab சம்பந்தமாக உங்களுக்கு என்னால் முடியுமான ஒரு சிறு அறிவுரை: சகோதர இன மத ஒரு பெண் அவருடைய கலாச்சார…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *