திசை மாறிய தீர்ப்புக்கள்

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 01

  • 9

ட்ரீங் ட்ரீங் என்ற அழைப்பேசி சத்தம் கேட்ட சுந்தர் திடுக்கிட்டு எழுந்தான். இரவு இரண்டு மணி, ‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்?’ கழுத்தை இருகப் பிடித்திருந்த மழலை வாணியின் கரத்தை மெதுவாக எடுத்து விட்டு மொபைலை அழுத்துகின்றான். அதே குரல்…

“ஏங்க நாளக்கி SriLanka வர இருக்கன். ராத்திரி பன்னிரண்டு மணிக்கு பிலைட். நீங்க அயார்ப்போர்ட் வந்துருங்க சரியா?” அழைப்பு துண்டிக்கப்பட பதறிப் போனான் சுந்தர்.

“யாருங்க இந்த நேரத்துல போன்? என்றவாறே கண்ணை கசக்கிக் கொண்டு சுந்தர் அருகில் வந்தாள் மனைவி ராதா.

” அது யாரோ வேல வெட்டி இல்லாதவள் ராத்திரியில டிஸ்டர்ப் பன்றாள். நீ படு செல்லம்.” ராதாவின் தலையை தடவியவாறே கட்டிலில் சாய்கின்றான் சுந்தர். ஆனால் அவன் மனமோ சவூதியை நோக்கிப் பறந்தது.

“தான் இந்தளவு பெரிய காரியம் செய்து விட்டேனே? ஏன் சிந்திக்காது நடந்து கொண்டேனோ? என்னென்ன பிரச்சினைகள் வந்து முடியுமோ? ஒரு வேளை இந்த விடயம் வீட்டுக்குத் தெரிந்தாள்? உம்மா, உயிரான மனைவி… என்னை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ? நான் இப்படி ஒரு காரியம் செய்திருக்கக் கூடாது.” ஆயிரம் எண்ணலைகள் அடுக்கடுக்காய் எழ, தூக்கம் தொலைந்து வெருச்சோடிப் போய் அமர்ந்திருந்தான்.

நாளைய விடியல் அவனுக்கு என்னென்ன விடயங்களை ஏற்படுத்தப் போகின்றதோ?

காலையை காணும் வரை கண் தூங்காதவன், சூரிய உதயம் கண்டு இன்னும் நடுங்கிப் போனான்….

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ட்ரீங் ட்ரீங் என்ற அழைப்பேசி சத்தம் கேட்ட சுந்தர் திடுக்கிட்டு எழுந்தான். இரவு இரண்டு மணி, ‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்?’ கழுத்தை இருகப் பிடித்திருந்த மழலை வாணியின் கரத்தை மெதுவாக எடுத்து விட்டு…

ட்ரீங் ட்ரீங் என்ற அழைப்பேசி சத்தம் கேட்ட சுந்தர் திடுக்கிட்டு எழுந்தான். இரவு இரண்டு மணி, ‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்?’ கழுத்தை இருகப் பிடித்திருந்த மழலை வாணியின் கரத்தை மெதுவாக எடுத்து விட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *