திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 28

  • 12

உனக்கு நான் முக்கியம்னா எங்க விஷயத்தப் பாரு, இல்லன்னா எங்க அப்பா அவ்வளவு காலம் என்ன வெச்சிக்க மாட்டாங்க. உன்ன பிடிக்கும்னு சம்மதம் வாங்க நான் எவ்வளவு எதிர்ப்புக்கள கடந்திருக்கன்னு உனக்கு தெரியாது சுரேஷ். இன்னும் என்ன கஷ்டத்துல போடாத.

அப்படி இல்ல வசீ.. நான் என்ன சொல்ல வாரன்னா..”

மறுமுனையில் அழைப்பு துண்டுக்கப் படுகின்றது..

என்ன செய்வதுன்று அறியாமல் குழம்பிப் போனான் சுரேஷ். தன்னவளுக்கு சாதகமாக பேச முடியாமலும், தன் தங்கையை விட்டுக் கொடுக்க முடியாமலும் தவியாய்த் தவித்தான்.

அன்றும் வழமை போல் ஒரு விடயம் வந்திருப்பதாய் தரகர் சொல்ல எந்த நம்பிக்கையும் இல்லாமல் தலையாட்டினார் சுந்தர். பெண் பார்க்க வரும் படலம் மீண்டும் ஆரம்பமாகவே எல்லோர் வதனங்களும் வாட்டமாய் தானிருந்தது. வாணியும் தன்னை முடிந்தளவு அழகுபடுத்திக் கொள்ள இதுவும் சாத்தியப்படும் என்பதில் அவளுக்கு துளியும் நம்பிக்கை இருக்கவில்லை.

“அக்கா… அக்கா எல்லாம் ஓகேயா?”

அறையில் கிடந்தவளை காண வந்தான் சுரேஷ். இவ்விடயமாவது சரி வர வேண்டும் என்பதே அவனின் உள்ளூர் பிராத்தனையாயிருந்தது.

“எனக்கு என்னமோ பயமா இருக்குடா..

எதுக்கு அக்கா?

என்ன விரும்புவாங்களா தம்பி?

கண்டிப்பா விரும்புவாங்க, மனச தைரியமா வெச்சிக்க, இப்படி சோர்ந்து போன வாரவங்க என்னமோ ஏதோன்னு நெனச்சிடுவாங்க, சிரிச்சிட்டு ஹெபியா இரு ஓகேயா?

ஹ்ம்ம் சரி டா

எங்க சிரி பார்ப்போம்..” அவளின் இதழ்கள் மெதுவாக மலர்ந்தது. பதிலுக்கு செயற்கையாய் சிரித்த சுரேஷ், அவள் தலையை வருடி விட்டு விடை பெற்றான்.

நேரம் நகர சுரேஷ் வீட்டினரின் உள்ளங்கள் பதறிப் போயின. “மாப்புள வீட்டினர இன்னமும் காணோம், ஒரு வேள வர மாட்டாங்களோ…” உள்ளம் அங்கலாய்க்க இடைக்கிடை கடிகாரத்தை பார்த்தான் சுந்தர்.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

உனக்கு நான் முக்கியம்னா எங்க விஷயத்தப் பாரு, இல்லன்னா எங்க அப்பா அவ்வளவு காலம் என்ன வெச்சிக்க மாட்டாங்க. உன்ன பிடிக்கும்னு சம்மதம் வாங்க நான் எவ்வளவு எதிர்ப்புக்கள கடந்திருக்கன்னு உனக்கு தெரியாது சுரேஷ்.…

உனக்கு நான் முக்கியம்னா எங்க விஷயத்தப் பாரு, இல்லன்னா எங்க அப்பா அவ்வளவு காலம் என்ன வெச்சிக்க மாட்டாங்க. உன்ன பிடிக்கும்னு சம்மதம் வாங்க நான் எவ்வளவு எதிர்ப்புக்கள கடந்திருக்கன்னு உனக்கு தெரியாது சுரேஷ்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *