திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 30

  • 19

“என்ன அப்பா

அது அது அதுவந்து, அதுவந்து…

சொல்லுங்கப்பா அவங்களுக்கு ஓகேயாமா?

அது என்னன்டா..

ஐயோ சொல்லுங்கப்பா” சுரேஷ் தந்தையை அதட்ட, காதுகளை இருக மூடிக் கொண்டாள் வாணி..

“இந்த விஷயம் சரிப் போகாது டா..

ஏன் பா?

எதுவும் கேக்காத சுரேஷ், எப்புடியும் சரிவரப் போறதில்ல..

அவங்க என்ன சொல்லுறாங்க, வாணிய விரும்பல்லயாமா?

சுரேஷ் பிலீஸ் என்கிட்ட ஒன்னும் கேக்காத” மகனுக்கும் தந்தைக்குமிடையிலான உறையாடல் கேட்டு கதறி அழுதாள் வாணி.

“நான் இப்புடியே இருந்துட்டு போறன் பா.. இனிமே என்ன பொண்ணு பார்க்க யாரும் வர வேண்டியது இல்ல” ஆத்திரம் ஆவேஷமாய் வெடிக்க, தன் விம்பத்தைக் கூட பார்க்க விரும்பாமல் அறையில் மாட்டியிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை தூக்கி வீசினாள். கட்டிலில் புதைந்து கொண்டு கவலை போக அழுதவளுக்கு எந்த ஆற்றுப் படுத்தல்களும் மருந்தாகவில்லை.

“பிலீஸ் இப்புடி அழாத அக்கா, பிலீஸ் கா.. நாங்க இருக்கோம்ல, என்ன இருந்தாலும் நமக்கு நீ வேணும் கா..” அக்காத் தம்பியின் கெஞ்சல் மீள் ஆரம்பமாக, எல்லோரும் உடைந்து போய் உட்கார்ந்து இருந்தனர்.

மறுபுறம் நிலைமையை அறிந்து கொள்ளும் அவாவில் வசீகராவிடமிருந்து அழைப்பு வந்தது சுரேஷுக்கு.

“இவள எப்புடி சமாளிக்கவோ?” நடப்புக்களால் நொந்து போனவன் வசீகராவின் வார்த்தைகளால் இன்னும் நொறுங்கித் தான் போனான்.

“சொல்லு வசீ

நீ தான் சொல்லனும் சுரேஷ், அக்கா விஷயம் என்ன ஆச்சு?

அதப் பேசி பலனில்ல வசீ

அப்போ நான் உன்கூட பேசியும் பலனில்ல தானே சுரேஷ்?

ஏன் வசீ இப்புடி பேசுற?

வேற என்ன சொல்ல, உனக்கு நான் முக்கியம்னா நம்ம விஷயத்த அவசரப்படுத்து, இல்லன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது..

வசீ எனக்கு எங்க அக்கா முக்கியம், அவளோட சந்தோஷம் முக்கியம். இதுக்கு மேல உனக்கு நான் வேணும்னா கொஞ்சக் காலம் பொறுமையா இரி, இல்ல உன் விருப்பம்…

நீ இப்புடி பேசுவாய்னு கனவுல சரி நம்பல்ல சுரேஷ். அப்போ உனக்கு நான் முக்கியமில்ல தானே? புரிஞ்சு போச்சி டா.. எங்க அப்பா சொன்னது சரியாத் தானிருக்கு..

வசீ ஐ யம் சொறி.. பிலீஸ் என்ன கொஞ்சம் அன்டஸ்டன்ட் பண்ணிக்க..

நோ நீட்… லெட்ஸ் பிரேகப், குட் பாய் சுரேஷ்” அழுது கொண்டே அழைப்பை துண்டித்தாள் வசீகரா.

“ஐயோ கடவுளே!” இருந்த ஆத்திரத்தில் கையில் கிடந்த மொபைலை உடைத்துப் போட்டவன் தோட்டத்தில் சிறிது நேரம் அழுதுவிட்டு, தன்னை சுதாகரித்துக் கொண்டு உள்ளே சென்றான்.. அப்பொழுது தான் தாயும், தந்தையும் முன் ஹோலில் கதைத்துக் கொண்டிருந்தது அவன் செவிகளுக்குக் கேட்டன..

“இந்த விஷயத்த சுரேஷ் கிட்ட சொல்லாதிங்க” ராதா சொல்ல அழுது கொண்டே தாயிடம் ஓடி வந்தான் சுரேஷ்…

“ஏன்மா நான் உங்க புள்ள இல்லயா? அவள் என் அக்காம்மா, நான் இதக் கூட பண்ண மாட்டனா? எனக்காக நீங்க எவ்வளவோ செஞ்சிருக்கீங்க, உங்களுக்காக இந்த காரியத்த பண்ண மாட்டனா?
ராதா கல்லாய் நிற்க, சத்தம் கேட்டு வாணியும் ஹோலுக்கு வந்து சேர்ந்தாள்..

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“என்ன அப்பா அது அது அதுவந்து, அதுவந்து… சொல்லுங்கப்பா அவங்களுக்கு ஓகேயாமா? அது என்னன்டா.. ஐயோ சொல்லுங்கப்பா” சுரேஷ் தந்தையை அதட்ட, காதுகளை இருக மூடிக் கொண்டாள் வாணி.. “இந்த விஷயம் சரிப் போகாது…

“என்ன அப்பா அது அது அதுவந்து, அதுவந்து… சொல்லுங்கப்பா அவங்களுக்கு ஓகேயாமா? அது என்னன்டா.. ஐயோ சொல்லுங்கப்பா” சுரேஷ் தந்தையை அதட்ட, காதுகளை இருக மூடிக் கொண்டாள் வாணி.. “இந்த விஷயம் சரிப் போகாது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *