இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு, சலுகைகள், உரிமைகள் மற்றும் சுதந்திரம்

  • 15

ஓர் இளைஞன் புகைப்படத்தில் இருப்பதைப் போன்ற ஒரு பெண்ணை திருமணம் செய்தான். மணப்பெண்ணின் கண்களைத் தவிர அவளிடமிருந்து வேறொன்றும் விளங்காத அவளது கோலத்தைக் கண்டதும் சமூகமளித்தவர்கள் அவனை வெறுத்து குறைகூறினர்.

அவர்கள்: “மனிதா! இன்று அவளது சந்தோசமான நாள்” என்று வியப்பாக கேட்டனர்.
மணமகன்: அதில் என்ன குறையுள்ளது என்று கேட்டார்
அவர்கள்: ஏன் அவளை முழுமையாக மறைத்தாள், நீ பிற்போக்கானவன் என்று கூறினர்.
மணமகன்: அல்லாஹ் பெண்ணை கண்ணியப்படுத்தி வைத்துள்ளான் ஆனால் மனிதர்களோ தமக்கேற்பட்ட சிந்தனைத்தாக்குதலால் அவளை இழிவாக்கியுள்ளனர்.

மணமேடையில் அவளுக்கு இசையை ஆகுமாக்கினர். ஆனால் அவளது மிருது மற்றும் மென்மையை பாதுகாக்கும் பொருட்டு அவளுக்கு அதான் (பாங்கு) மற்றும் இகாமத்தை விலக்கினான்.

அவள் மணமேடையில் (எல்லோரும் பார்க்கும் வண்ணம்) வீற்றிருப்பதை ஆகுமாக்கினர். ஆனால் அல்லாஹ் அவளது மிருது மற்றும் மென்மையை பாதுகாக்கும் பொருட்டு மக்களோடு மக்களாக பள்ளிவாயல்களில் ஜும்ஆ நாள் குத்பா மற்றும் ஜமாஅத் தொழுகை என்பவற்றிற்கு சமூகமளிக்குமாறு வேண்டவில்லை.

அவளை போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளது வீராங்கனையாக மாற்றினர், ஆனால் அல்லாஹ் அவளது பத்தினித்தனம் மற்றும் வெட்கத்தை பாதுகாக்கும் பொருட்டு ஸபா மற்றும் மர்வாக்கிடையில் ஓடுவதை தடுத்துள்ளான்.

விசேட நிகழ்வுகள் மற்றும் தூரப் பிரயாணங்களுக்கு மஹ்ரமில்லாமல் அவளை வெளியே அனுப்பினர், ஆனால் அல்லாஹ் அவளது பத்தினித்தனம் மற்றும் வெட்கத்தை பாதுகாக்கும் பொருட்டு மஹ்ரம் இல்லாத சந்தர்ப்பத்தில் மார்க்கத்தின் மிக முக்கிய கடமையான ஹஜ்ஜை அவள் மீது கடமையாக்காது விட்டுள்ளான்.

விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளிப்பதற்காகவும், தேசிய அணிகளை ஊக்குவித்து ஆதரவளிப்பதற்காகவும் அவளை வெளியே அனுப்பினர், ஆனால் அல்லாஹ் அவளது பத்தினித்தனம் மற்றும் பெண்மையை பாதுகாக்கும் பொருட்டு புனிதப் போரில் கலந்துகொள்வது மற்றும் வெளியேறிச் சென்று மார்க்க விடயங்களுக்கு உதவுவதை கடமையாக்காது விட்டுள்ளான்.

மணம் பூசப்பட்டு, முகத்தில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் போன்று அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்ணாக அவளை வீட்டிலிலிருந்து வெளியேற்றினர், ஆனால் அல்லாஹ் அவளது மறைந்திருக்கும் அழகு விளங்காத வண்ணம் அவள் அணிந்திருக்கும் கால் சலங்கைகளது ஒலியைக்கூட தடைசெய்துள்ளான்.

அவளுடைய சுதந்திரத்தை அவர்கள் விரும்பவில்லை, மாறாக அவளை அடைவதற்கான சுதந்திரத்தை அவர்கள் விரும்பினர்

நிச்சயமாக நான், அவளை யாரும் பார்க்க தகுதியற்ற எனக்கான பெறுமதிமிக்க இரத்தினக்கல்லாக கருதுகிறேன். ஏனெனில் அவள் இறைவன் எனக்களித்த அன்பளிப்பு, இப்பெறுமதியான அன்பளிப்பு மற்றவருக்கு கொடுக்கவும் முடியாது, விற்பனை செய்யவும் முடியாது, கொள்வனவு செய்யவும் முடியாது.

இறைவா எமது பெண்களையும் முழு இஸ்லாமிய பெண்களையும் பித்னாக்களிலிருந்து பாதுகாத்தருள்வாயாக!

அரபு மொழியில்: أجمل ما قرأت في اللغة والأدب எனும் முகநூல் பக்கம்
தமிழாக்கம்: அஸ்(z)ஹான் ஹனீபா
வியூகம் வெளியீட்டு மையம்

ஓர் இளைஞன் புகைப்படத்தில் இருப்பதைப் போன்ற ஒரு பெண்ணை திருமணம் செய்தான். மணப்பெண்ணின் கண்களைத் தவிர அவளிடமிருந்து வேறொன்றும் விளங்காத அவளது கோலத்தைக் கண்டதும் சமூகமளித்தவர்கள் அவனை வெறுத்து குறைகூறினர். அவர்கள்: “மனிதா! இன்று…

ஓர் இளைஞன் புகைப்படத்தில் இருப்பதைப் போன்ற ஒரு பெண்ணை திருமணம் செய்தான். மணப்பெண்ணின் கண்களைத் தவிர அவளிடமிருந்து வேறொன்றும் விளங்காத அவளது கோலத்தைக் கண்டதும் சமூகமளித்தவர்கள் அவனை வெறுத்து குறைகூறினர். அவர்கள்: “மனிதா! இன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *