தரித்திர வாழ்வு

  • 10

செத்து செத்து வாழ்வதெல்லாம்
ஒரு வாழ்க்கையா..?
மரணத்திற்கு முன்னர்
எத்தனை முறைதான் இறப்பது..?

விரும்பாத பல நிகழ்வுகளால்
உயிரோடு புதைக்கப்படுவதை
எம் மரத்த நிலை
உணர்த்தி விடாமலா போகும்..?

கவலைகளாலும் மனஅழுத்தங்களாலும்
பிரச்சினைகளாலும் நாம் வாழ்வை
வாழாமல் விடுகின்றோம்.

நடக்கின்ற ஒவ்வொரு வழியிலுமுள்ள
பல புதை குழியில்
வீழ்ந்து எழுவது தலைவிதியாகி விட்டது.

வாழ்வின் நியாய தர்மங்களை
ஏற்காமல் சிதைந்து போகிறோம்.
வாழ்வின் பிரச்சினைகளை
சமாளிக்கத் தெரியாமல் அல்லது
அவற்றிற்கு முகம் கொடுக்க முடியாமல்
முகவரிகளை இழந்து நிற்கிறோம்.

வாழ்வின் போராட்டம
எம்மை பலப்படுத்தாமல்
பலவீனப்படுத்தி விடுகிறது.

வாழ்வின் யதார்த்தத்தை
புறக்கணிக்க முடியுமா என்ன..?
அதனை விட்டும் தப்பித்து
விரண்டோட முடியுமா என்ன..?

நம்பிக்கைகளேடும்
நேர்மறை எண்ணங்களோடும்
புத்தாக்க சிந்தனைகளோடும்
வாழ்வின் சவால்களை
எதிர் கொள்ளவோம்.

அதற்கான திறன்களைப் பெறாது
வாழ்வைக் குற்றம் காணுவதும்
தரித்திர வாழ்வு என்ற
எண்ணுவதும் நியாயமானதா?

எம். ரிஸான் ஸெய்ன்

செத்து செத்து வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா..? மரணத்திற்கு முன்னர் எத்தனை முறைதான் இறப்பது..? விரும்பாத பல நிகழ்வுகளால் உயிரோடு புதைக்கப்படுவதை எம் மரத்த நிலை உணர்த்தி விடாமலா போகும்..? கவலைகளாலும் மனஅழுத்தங்களாலும் பிரச்சினைகளாலும் நாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *