காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 86

  • 10

திடீரென இவன் ஏன் இப்படி பேசுகிறான் என்று ஜெனிக்கோ மற்றவர்களுக்கோ புரியவில்லை. என்கிடுவோ கோபத்தின் விளிம்பில் இருந்தான். எந்நேரமும் வெளியே வந்து கில்கமேஷை கொல்லும் அளவு வெறியுடன்,

“என்ன பேசறே.. நீ?”

என கில்கமேஷ் மித்ரத்தை நோக்கி கேட்டதும், வாயில் இருந்து வடிந்த இரத்தத்தை துடைத்து விட்டு நிமிர்ந்த மித்ரத் மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“நீ எவ்வளவு முயற்சி பண்ணாலும் உன்னால என்கிடுவை மறுபடியும் கொல்ல முடியாது. இந்த 8000 வருடங்களும் எங்க குடும்பம் என்கிடு உடலை பாதுகாத்து வைத்து அவருக்கு மறுபடியும் உயிர் கொடுத்து இந்த உலகத்துக்கு கொண்டுவந்தா. இன்னும் உன்னோட பழிவாங்கும் எண்ணம் போகலயா அதுதான் அவரை ஒருமுறை கொன்று சிரஞ்சீவி ஆகிட்டியே இன்னும் என்ன?”

என்று புதிய கதை ஒன்றை உருவாக்கி சொன்னான். என்கிடுவுக்கு இந்த எட்டாயிரம் வருடங்கள் எப்படி உருண்டதென இப்போது மித்ரத் சொன்னதை வைத்து யூகித்து கொண்டான்.

“எவ்வளவு பெரிய பொய்யை என்கிட்ட சொல்லியிருக்கே!”

என்று லீஸாவை கோபமாக பார்த்தான்.

“அது வந்து… இவன் சொல்றத எல்லாம் நம்பாதே என்கிடு… நீ பார்த்து கொண்டிருக்கிறது தெரிஞ்சி அவன் உன்னை ஏமாத்துறான்.”

என்றாள்.

“இனியும் என்னை யாரும் ஏமாற்ற முடியாது. இப்பவே போய் அந்த கில்கமேஷை கொன்னுடுவேன்.”

என்று வேகமாக வெளியேறினான்.

“நில்லு… என்கிடு… நான் சொல்றத கேளு”

என்று அவளும் பின்னாடியே ஓடினாள்.

******************

ஜெனியை கொல்லப்போகும் திட்டம் அறிந்து பதற்றத்தில் டிடானியாவும் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு இங்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென அவளுக்கு ராபர்ட் கிட்ட இருந்து லோக்கல் கால் வந்தது. அதிர்ச்சியுடன் அந்த நம்பரை பார்த்து கொண்டிருந்தாள்.

“ராபர்ட் நம்பராச்சே….”

***************************

“இது என்ன கட்டுக்கதை இதெல்லாம் சொல்லி தான் என்கிடுவை உன் பக்கம் வெச்சிருக்கியா உன்னை.”

என்று கில்கமேஷ் மீண்டும் மித்ரத்தை தாக்கினான். அப்போது உள்ளிருந்து கடுங்கோபத்தில் என்கிடு வெளியே வந்து கில்கமேஷை தாக்கினான்.

“என்கி….”

என்னும் போதே ஒரு குத்து சற்று தள்ளிப்போய் விழுந்தான் கில்கமேஷ்.

பின்னாடியே ஜெனி கத்திக்கொண்டு வந்தாள். எல்லாவற்றையும் ஒரு ஒதுக்குப்புறமாக நின்று வேடிக்கை பார்த்து ரசித்தான் மித்ரத். தன் பிடியிலிருந்த மித்ரத்தின் ஆளுக்கு ஷாக் கொடுத்துவிட்டு,

“இந்த நிலை சரியில்லை… இப்படியே போனா என்கிடு கில்கமேஷை அடிச்சே கொன்னுடுவான்.”

என்றெண்ணிய விக்டர் உடனே புகைவெளியாக்கும் போலி குண்டை எடுத்து அங்கு வீசிவிட்டு உடனே போய் கில்கமேஷை எழுப்பி கொண்டான். ஒரே புகையாக இருந்ததால் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.

“எங்க ஓடி ஒளிஞ்சிக்கலாம் என்னு பார்த்தியா உன்னை இரு.”

என்று தன்கையால் புகையை விலக்கி கொண்டிருந்தான் என்கிடு. ஜெனியின் கையை அதற்குள் பிடித்து இழுத்தான் கில்கமேஷ்.

“ஹா..”

“நான் தான்… இந்த பக்கம் வா..”

என்று சொல்லி இழுக்க, மூவரும் வெளிக்கதவை நோக்கி ஓடும் போது என்கிடுவுக்கு ஜெனி கை பட்டுவிட்டது. உடனே அவன் இந்த கையை பிடித்து இழுத்தான்.

“ஆஹ்…”

“போகாதே அவங்க நல்லவங்க இல்லை. என்கூடயே இருந்துடு.”

என்று அவன் சொல்வதை கில்கமேஷும் கேட்டு அதிர்ந்தான். ஆனால் ஜெனி சாமர்த்தியமாக கையை உதறிவிட்டு நகர விக்டர் எல்லோரையும் இழுத்து கொண்டு உடனே வெளியேறி காரை எடுத்து தப்பித்தனர். என்கிடு கடைசியா பேசின வார்த்தைகளில் இருந்த உணர்வை கில்கமேஷ் புரிந்து கொண்டான். அதனால் ஒண்ணும் பேசாமலேயே வந்தான். அவன் முகத்தை பார்த்து விட்டு அவளால் பேச முடியவில்லை.

“விக்டர் என்னால ஸாரி.”

என்று ஜெனி முகத்தை தொங்க போட

“சும்மா வருத்தப்படாதே… வீட்ட போய் பேசிக்கலாம்…”

*****************

சற்று நேரத்தில் புகை எல்லாம் மறைந்துபோனதும். என்கிடு மெல்ல லீஸா…!!! என்று முணுமுணுத்து கொண்டதும் அடுத்த நொடி கில்கமேஷ் பெயரை கோபமாக சொன்னதும் மித்ரத்துக்கு கேட்டது. ஒருவழியாக மூவரும் தப்பித்து விக்டர் வீட்டுக்கு சென்றால் அங்கு ஏற்கனவே ராபர்ட், மீரா, ஆர்தர் மூவரும் அங்கிருந்தனர். உள்ளே சென்றவர்கள் மூவரும் இவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

திடீரென இவன் ஏன் இப்படி பேசுகிறான் என்று ஜெனிக்கோ மற்றவர்களுக்கோ புரியவில்லை. என்கிடுவோ கோபத்தின் விளிம்பில் இருந்தான். எந்நேரமும் வெளியே வந்து கில்கமேஷை கொல்லும் அளவு வெறியுடன், “என்ன பேசறே.. நீ?” என கில்கமேஷ்…

திடீரென இவன் ஏன் இப்படி பேசுகிறான் என்று ஜெனிக்கோ மற்றவர்களுக்கோ புரியவில்லை. என்கிடுவோ கோபத்தின் விளிம்பில் இருந்தான். எந்நேரமும் வெளியே வந்து கில்கமேஷை கொல்லும் அளவு வெறியுடன், “என்ன பேசறே.. நீ?” என கில்கமேஷ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *