எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 15

  • 13

விழியில் தோன்றிய அவளின் ஏதிர் பார்ப்பின் நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது.

அண்டி அண்டி…
ருஷா… ருஷா…
பொண்ணு பொண்ணு…

சிரித்த்துக்கொண்டு தாய் சுபைதா வர…

“அடியே வாங்க டி”

என்று ருஷா உள்ளே அழைக்க,

“விஸ் யுவர் ஹேப்பி மேர்ரீட் லைஃ ருஷா…”

என்று அனைவரும் ஓடி வந்து கட்டி அணைத்து அவர்களின் நட்பின் உச்சத்தை வெளிப்படுத்த அளவில்லா சந்தோஷத்தை உணர்ந்த ருஷா அழ ஆரம்பித்து விட்டாள்.

“அய்யோ ஏ ஏ ஏ… பொண்ணு அழுறாடி பாருங்க..”

என்று ரூமுக்குள் கூட்டி சென்றார்கள். அனைவரும் அஸர் தொழுது விட்டு ருஷாவை அலங்கரிக்க தொடங்கினார்கள். அழகான முறையில் ஆடை அணிவித்து அவளை அலங்கரித்து அவளை சோபாவில் அமர வைத்தார்கள். தாய் சுபைதா தன் மகளின் கல்யாண கோலம் கண்டு திகைத்து நின்றார்.

“என்ன மக்கள் இது ருஷாவ செஞ்சு வெச்சிருக்குற வேல. இதுகளுக்கு ருஷா எப்படி ஒத்துக்கிட்டாள்.”

நட்புக்களின் ஒருத்தி,

“அண்டி அதான் பிரன்ட்சிப் அண்டி.. நாங்க விட்டுடுவமா”

மற்றும் ஒருத்தி,

“அண்டி, மார்க்கம் அந்நிய ஆண்களுக்கு தானே தன் அலங்காரத்த காட்டிட தடை சொல்லுது…”

என்று சொல்லி கொண்டு இருக்கையில், அவர்களின் விளையாட்டு ஆரம்பம் ஆகியது. ருஷாவின் கை நிறைய மருதாணி போட்டு அலங்கரித்து கொண்டிருந்தார்கள். பழங்கள் நிறைந்த கூடை, மாஸ்மேலோ, கலர் வகை சோடா, பலூன், இன்னும் பல ஸ்வீட்கள் வைக்கப்பட்டு அந்த இடம் அலங்கரிக்க பட்டு இருந்தது. ஒவ்வொர்த்தராக அவர்களின் முறைப்படி தங்களின் கடமைகளை செய்து முடித்தனர். இதனை தாய் சுபைதாவும் பார்த்து கண் கலங்கி ருஷாவின் நட்புக்களை நினைத்து பெருமை கொண்டாள்.மஹ்ரிப் அதான் சொல்ல அமைதி காத்து இறுதியில் ருஷாவின் கையில் ஒரு மோதிரத்தை அவர்களின் நட்பின் வட்டம் சார்பாக போடப்பட்டது. இதை எதிர் பார்க்காத ருஷா… விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.

ஏய் ருஷா இதுக்கு ஏன் அழுறடி இது எங்கட கடமை நாளைக்கு எங்கட நியாபகமா இது உன் கையில இருக்கட்டும். நீ எங்களுக்கு படிப்பு நட்பு அட்வைஸ் அப்டின்னு நிறைய ஹெல்ப் ஆஹ் இருந்திருக்காய். உனக்கு இது கூட பண்ணலனா என்னடி…

இதை கண்ட சுபைதா மகளை விட அழ ஆரம்பிக்க,

“அண்டி நீங்க வேற ஏன் அழுரிங்க.”

என்று ஆறுதல் சொல்லி விட்டு மீண்டும் அந்த நட்புக்களோடு சந்தோசம் பொங்கியது. கதைகள் சிறிய சிற்றுண்டிகள் முடிந்ததும் நட்புகளின் பிரியாவிடை நேரம் நெருங்கியது.

“ருஷா ஓட்டோ அங்கிள் கோள் பண்ணுறாரு”

என்று சொல்லி கொண்டிருக்கும் போது,

பீப்… பீப்…

“ஆஹ் அந்தா ஓட்டோ வந்துடு… நாங்க போய் வாரம்.. அண்டி, ருஷா வாரம் டி…”

“அல்லாஹ் உனக்கும் உன் நல்ல குணத்துக்கும் நல்ல லைப் தந்திருக்கான். நீ நல்ல இருப்ப”

என்று சொல்லி ருஷாவை கட்டி அணைத்து முத்தமிட்டு எல்லோரும் ஓட்டோவில் ஏறினர்.

“போய் வாரம் ருஷா…”

“ஆஹ்…. பீ அமானில்லாஹ் டியேர்ஸ்…”

என்று ருஷா வழியனுப்பி விட்டு, தாயும் ருஷாவும் வீட்டுக்குள் வந்தனர்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

விழியில் தோன்றிய அவளின் ஏதிர் பார்ப்பின் நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. அண்டி அண்டி… ருஷா… ருஷா… பொண்ணு பொண்ணு… சிரித்த்துக்கொண்டு தாய் சுபைதா வர… “அடியே வாங்க டி” என்று ருஷா உள்ளே…

விழியில் தோன்றிய அவளின் ஏதிர் பார்ப்பின் நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. அண்டி அண்டி… ருஷா… ருஷா… பொண்ணு பொண்ணு… சிரித்த்துக்கொண்டு தாய் சுபைதா வர… “அடியே வாங்க டி” என்று ருஷா உள்ளே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *