காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 91

  • 17

ஒருகணம் இந்த அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து போனாலும். கொஞ்சம் கூட நடந்ததை ஏற்றுகொள்ள முடியாத ஜெனி கோபத்தில் என்கிடுவை தள்ளிவிட்டாள்.

“லீஸா! மன்னிச்சிடு என்னோட காதலை எப்படி வெளிப்படுத்துற என்று தெரியாம…”

என்று அவன் நடந்து கொண்டதற்காக வெட்கப்பட,

“நிறுத்துங்க….”

என்று கத்தினாள் ஜெனி. இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.

“நான் லீஸா இல்ல ஜெனி!..”

என்றவள் யாரையும் பார்க்காமல் தன்னுடைய கலர் ஹெயார் விக்கை தூக்கி தூர வீசிவிட்டு அருகில் சிங்கங்கள் குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீர் கோப்பையை தூக்கி தனது தலையில் ஊற்றி கொண்டாள். மொத்த வேஷமும் கலைந்தது. என்கிடு மட்டுமல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“உண்மையை உனக்கு புரியவைக்கிறதற்காக நாங்க எவ்வளவோ கஷ்டப்பட்டோம். ஆனா அதெல்லாம் புரிஞ்சிக்காம ரெண்டு நாள் பழகின என்மேல உன்னோட காதலை வளர்த்து கொண்டிருக்கே. நானும் ஒரு மனுஷி தான் என்னோட காதலுக்காக எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் போகலாம் என்று நினைச்சேன். ஆனா நீ இப்படி பண்ணுவே என்று எதிர்பார்க்கல. இப்போ சொல்லுறேன். இத்தனை நாளா நான் சொல்லாம மூடி மறைச்ச ஒரு விஷயத்தை இப்போ சொல்லுறேன். நான் கில்கமேஷை தான் காதலிக்கிறேன். அவனை மட்டும் தான் யெஸ் ஐ லவ் கில்கமேஷ்.”

என்றாள் ஆவேசமாக. இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத என்கிடு நரம்புகள் புடைக்க கோபத்தில் அவளை பார்த்தான். சர்கஸுக்கு வந்தவர்கள் எல்லோரும் இவர்களை வேடிக்கை பார்க்க கேமராக்களும் இவர்கள் பக்கம் திரும்பி விடவே அங்கு, தன்னை ஏமாற்றி அவளை காதலிக்கும் படி செய்து விட்ட கில்கமேஷை எண்ணி அவனுக்கு இன்னும் கோபம் அதிகரித்தது. லீஸா என்ற போர்வையில் தன்னை அவள் வலையில் விழவைத்த ஜெனியை பார்க்க பார்க்க கொன்றுவிட அவன் மனது துடித்தது. ஆவேசத்தில் எதை எதையோ சொல்லிவிட்டோம் என்பதை உணர்ந்து அமைதியாகி என்கிடுவுக்கு இப்போதாவது எடுத்து சொல்லலாம். என்றெண்ணி ஜெனி அடியெடுத்து வைத்தாள். எல்லோரும் பதறிப்போய் பார்க்க கோபத்தில் என்கிடு ஜெனியை கழுத்தை பிடித்து தூக்கினான்.

கில்கமேஷுக்கு இதை பார்த்த பிறகும் அமைதியாக ஒதுங்கி இருப்பது நல்லதென தோன்றவில்லை. உடனே கூட்டத்தை பிளந்து கொண்டு வந்து ஜெனியை விடுவிக்க முயன்றான். அவளோ கழுத்து நெறிபட வலியால் துடித்தாள். கூட்டத்தில் இருந்த பெண்கள் சிலர் இதைக்கண்டு கத்திக்கொண்டு சர்கஸை விட்டே ஓடிவிட்டனர்.

“என்கிடு.. அவளை விட்டுடு.” என்றான் கில்கமேஷ்.

“ஒஹ்ஹ்… எல்லாம் உன்னோட திட்டம் தானா… இவ்வளவு நேரம் மறைஞ்சி இருந்து வேடிக்கை பார்த்தியா…. பாரு உன்னோட காதலியை நான் என்ன பண்ணுறேன்னு…”

என்று கூறி இன்னும் அழுத்தமாக நெறிக்க கில்கமேஷ் அவள் வேதனையை தாங்க முடியாமல் என்கிடுவை தாக்கினான். அந்த அடியில் ஜெனி மீதிருந்த கை விடுபட்டு அவள் கீழே விழ அவளை மீராவும் ராபர்ட்டும் சென்று தூக்கி நிறுத்தி தாங்கி கொண்டனர்.

கில்கமேஷுக்கும் என்கிடுவுக்கும் சண்டை ஆரம்பித்தது. அவன் நண்பன் என்பதையும் மறந்து ஜெனியை கொல்ல துணிந்த கோபத்தில் கில்கமேஷும் சளைக்காமல் அடித்தான். அப்போது விக்டர் டிடானியாவுக்கு சைகை காட்ட அவள் இவர்கள் சண்டை போட்டு விழுந்து எழும் இடமெல்லாம் கர்ச்சிப்பை தூக்கி கொண்டு பின்னாடியே ஓடினாள். ஆளுக்காள் முகத்தில் குத்து விட்டனர்.

அப்போது திடீரென மித்ரத் ஆட்கள் ஒரு நான்கைந்து பேர் நுழைந்தனர். அதில் ஒருவன் மயக்க ஊசியை என்கிடுவுக்கு தூர நின்று சுட்டான். மற்றவர்கள் ஓடிப்போய் அவனை தூக்கி கொண்டு வெளியேற முனைந்தனர். அவர்களை அடித்து போட்டு விட்டு அப்படியே என்கிடுவை கைப்பற்றலாம் என எண்ணி அவர்களை நோக்கி கில்கமேஷ் செல்ல விக்டர் அவனை தடுத்தான்.

“அவங்கள அப்பறம் பார்த்துக்கலாம்… அங்க பாரு ஜெனி க்கு ஏதோ ஆச்சு..”

என்றான். அங்கு பார்த்தால் ஜெனி நிற்கமுடியாமல் மயங்கி விழுந்தாள். வேறு வழியின்றி மித்ரத் ஆட்கள் என்கிடுவை கொண்டுபோக விட்டுவிட்டு எல்லோரும் ஜெனியை நோக்கி ஓடி வந்தனர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ஒருகணம் இந்த அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து போனாலும். கொஞ்சம் கூட நடந்ததை ஏற்றுகொள்ள முடியாத ஜெனி கோபத்தில் என்கிடுவை தள்ளிவிட்டாள். “லீஸா! மன்னிச்சிடு என்னோட காதலை எப்படி வெளிப்படுத்துற என்று தெரியாம…” என்று அவன்…

ஒருகணம் இந்த அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து போனாலும். கொஞ்சம் கூட நடந்ததை ஏற்றுகொள்ள முடியாத ஜெனி கோபத்தில் என்கிடுவை தள்ளிவிட்டாள். “லீஸா! மன்னிச்சிடு என்னோட காதலை எப்படி வெளிப்படுத்துற என்று தெரியாம…” என்று அவன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *