எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 32

  • 8

“எங்களால ஒன்னும் இப்போ சொல்ல முடியல்ல பெசன்ட் கொஞ்சம் சீரியஸ் கடவுள் கிட்ட பிராத்திங்க குழந்தையா தாயா என்ற மாதிரி இருக்கு ஒபேரஷன் பண்ண ரெடி ஆகுறம் என்று சொல்ல”

தலையில் கை வைத்து நிசாத் கத்த, பாத்திமாவின் கணவர் நிசாத்தை ஆறுதல் படுத்த,

“டொக்டேர் டொக்டேர்”

என்று இன்னும் ஒரு டொக்டேரின் சத்தம்.

“பெர்சென்டுக்கு டெலிவரி பெயின் பண்ணுது”

என்று சொல்ல அளவில்லா சந்தோசம் தலை தூக்கியது. டொக்டேர் வலி வந்திருக்கு நாங்க ஒபேரஷன் பண்ண இல்ல நோர்மல் றை பண்ணுவம் என்று முடிவில் டொக்டேர்மார் முயற்சியை கை கொண்டனர்.

“டொக்டேர் வலி முடில டொக்டேர் . ஹபிய உள்ளுக்கு என்னோட எடுங்க டொக்டேர்”

பிரைவேட் கொசுப்பிடலில் அதற்கான வாய்ப்பு இருப்பதால் நிசாத் உள்ளே எடுக்க பட்டான். தன் கணவனை காண வலி மறந்து கண் மட்டும் வலியால் துடித்தது. ருஷாவை கண்டதும் நிசாத் அவள் கையை இறுக்க பற்றி கொண்டான். வலி அதிகரிக்க ருஷாவின் துடிப்போடு ருஷாவை அமைதி படுத்த முடியாது அவனும் துடித்து கொண்டான். ஒரே ஒரு சத்தம்,

“அல்ஹம்துலில்லாஹ்!”

இரு மலர்களும் பூமியில் புது ஒளி வீச, ருஷா மயக்கம் கொண்டாள். நிசாத்திடம் இரத்தகறை கொண்டு குழந்தைகள் கொடுக்க பட அல்லாஹ்வின் வல்லமையையும் உயிர் கொடுத்து உயிர் காக்கும் தாய்மையையும் உணர்ந்தான். குழந்தைகள் சுத்தம் செய்ய பட்டன. சற்று நேரத்தில் எல்லாரும் பார்க்கலாம் என்ற அனுமதியுடன் சாரா பாத்திமா உள்ளுக்கு வர தன் மனைவி தலை கோரி நிசாத் இருக்க மெதுவாய் புது உலக உணர்வை உணர்ந்து கண் திறக்க,

“ஹபி”

என்று முதல் பேச்சு தன் மனைவி நெற்றியில் கண்ணீர் கண்ணீர் கொண்டி முத்தம் பதித்தான். திடீர் என்று இரு குழந்தைகளும் அழ,

“அப்பா பாரு ரெண்டு பிள்ளைகள்ட கோபத்த வாப்பா உம்மாக்கு கொஞ்ச நாங்களும் இருக்கம் என்று சத்தம் போட்டு காட்டு படுது,”

என்று பாத்திமா சொல்ல, தாதியின் கட்டளை படி தாய் பால் கொடுக்க சொல்ல அவளும் குழந்தையை எந்தினாள். நிசாத் டொக்டரை பார்க்க சென்றான்.

“டொக்டேர் வைப் என்ட் பேபிஸ்ட கொண்டிசேன் எப்படி டொக்டேர்.”

“நிசாத்… அவங்க ஹெல்தி நோர்மல் கவல பட தேவ இல்ல நீங்க கொஞ்ச லேட் ஆகி வீட்டுக்கு போகலாம்”

“ஓகே தங்கியு டொக்டேர்”

என்று சொல்லி விட்டு பில் செட்டில் பண்ண சென்றான் நிசாத். ஒரு சில மணித்தியாலங்களுக்கு பிறகு பாத்திமாவின் கணவரின் காரில் அனைவரும் வீட்டுக்கு சென்றனர்.

***********************************

குடும்பம் என்று நாளுக்கு நாள் வருகை தர, குழந்தைகளுக்கு பேரு வைக்கும் நாளும் அகீகா கொடுக்கும் நாளும் வர மார்க்க முறைப்படி இரண்டு வயது பூர்த்தியான ஆடு ஆண் பிள்ளைக்கு இரண்டு, பெண் பிள்ளைக்கு ஒன்று என்றும் அகீகா கொடுக்க பட்டது, பின்னர் ஆண் பிள்ளைக்கு ருஷாவின் முதல் எழுத்தில் பெயரும் பெண் பிள்ளைக்கு நிசாத்தின் முதல் எழுத்தில் பெயரும் சூட்ட பட்டது. குழந்தைகள் சத்தம், சந்தோஷங்கள் என்று வீடும் ஜொலித்தது, இவ்வாறு மூன்று மாதங்களும் கடந்து ஓடின.

நிசாத்தின் மலேசியா பயணத்துக்கும் நாள் வந்தது. அதனை கொண்டு ருஷாவின் மக்கா செல்லும் கனவும் நிறைவேற்ற பட சாரா, ருஷா, இரு குழந்தைகள், நிசாத் என்று மக்கா பயணத்தை தொடர்ந்து மலேசியா பயணமும் சந்தோசத்துடன் தொடர்ந்தது.

முற்றும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

“எங்களால ஒன்னும் இப்போ சொல்ல முடியல்ல பெசன்ட் கொஞ்சம் சீரியஸ் கடவுள் கிட்ட பிராத்திங்க குழந்தையா தாயா என்ற மாதிரி இருக்கு ஒபேரஷன் பண்ண ரெடி ஆகுறம் என்று சொல்ல” தலையில் கை வைத்து…

“எங்களால ஒன்னும் இப்போ சொல்ல முடியல்ல பெசன்ட் கொஞ்சம் சீரியஸ் கடவுள் கிட்ட பிராத்திங்க குழந்தையா தாயா என்ற மாதிரி இருக்கு ஒபேரஷன் பண்ண ரெடி ஆகுறம் என்று சொல்ல” தலையில் கை வைத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *