அன்பும் அதிகாரமும்

  • 10

உலகை இயக்கிக் கொண்டிருப்பது அதிகாரம் தான் ஆனாலும் உலகம் இயங்குவது அன்பால்தான் என்றால் அது பொய்யாகாது. சிறுகுழந்தை முதல் பாட்டி வரை அன்புக்காக ஏங்கிக் கொண்டும் ,அன்பால் உலகை அனுபவித்துக் கொண்டுமே இவ்வாழ்வு   எல்லோர்க்கும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

கைக்குழந்தையை வோக்கரில் போடாமல் தூக்கிக் கொஞ்சுகையில் பேசும் மழலைமொழி, பரீட்சையில் தோற்றவனை சமாதானப்படுத்துகையில் வெளிப்படுத்தும் புன்னகையென அத்தனையும் அன்பின் பின் பாரிய சக்தி உள்ளதென்பதை எடுத்துக்காட்டவல்லன.

ஆண்மகன் எவ்வளவு திடமாய் இருந்தாலும் அவன் வேலைமுடிந்து சோர்ந்து வருகையில்  அன்புசெலுத்தி உற்சாகப்படுத்தவே கடவுள் பெண்ணை துணையாகக் கொடுத்திருக்கிறான். இப்படி உலகில் ஒவ்வொன்றும் அன்பாலே அழகாய்  இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அன்பாய் சொல்லும் போது செய்யும் பிள்ளை அதிகாரத்துடன் சொல்லுகையில் தூக்கிவீசிவிடும்.அது போன்றே அன்பால் வழிப்படுத்தும் குடும்பம் நிலைத்து நிற்க அதிகாரம் கொண்டு வளர்க்கப்பட்ட குடும்பச் செல்வங்கள் மதுக்கும் காதலுக்கும் அடிமையாகின்றன.

காலையில் நாம் சந்திக்கும் வொட்ச்மன்  வேலைத்தள நபர்கள் கண்டீன் அம்மா என எம்மைச் சுற்றியுள்ள எல்லோரிடமும் சிறு புன்னகையைனும் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். பல நேரம் அது அவர்களுக்கு பெரும் சந்தோசத்தை கொடுக்க வல்லன.

அன்பை கொடுங்கள் அகமகிழ்வு  காண்பீர்

Binth Ameen
SEUSL

உலகை இயக்கிக் கொண்டிருப்பது அதிகாரம் தான் ஆனாலும் உலகம் இயங்குவது அன்பால்தான் என்றால் அது பொய்யாகாது. சிறுகுழந்தை முதல் பாட்டி வரை அன்புக்காக ஏங்கிக் கொண்டும் ,அன்பால் உலகை அனுபவித்துக் கொண்டுமே இவ்வாழ்வு   எல்லோர்க்கும்…

உலகை இயக்கிக் கொண்டிருப்பது அதிகாரம் தான் ஆனாலும் உலகம் இயங்குவது அன்பால்தான் என்றால் அது பொய்யாகாது. சிறுகுழந்தை முதல் பாட்டி வரை அன்புக்காக ஏங்கிக் கொண்டும் ,அன்பால் உலகை அனுபவித்துக் கொண்டுமே இவ்வாழ்வு   எல்லோர்க்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *