கருகிப் போகும் விவசாயம்

  • 6

காலச் சக்கரத்தின்
கோரைப் பற்களில்
சிக்கிய படியே
மக்கிப் போகிறது
மக்களின் விவசாயம்

ஆலைப் பூதகிகள்
பாலைப் பூச்சுவதால்
அழுக்களின் இருப்பிடமாய்
ஆகிப் போனது ஆறுகள்

பூமித்தாயின் வயிற்றினிலே
தொற்றிக் கொண்ட
புற்றுநோயாம்
கட்டிடக் கட்டிகளும்
கணக்கின்றி பெருகிடுதே

தரிசுநிலங்களைத் தாய்மையாக்க
தவறுகின்ற சட்டங்களால்
வியாபாரங்கள் வியாபிக்க
விவசாயமும் முடங்கிடுமே

நாற்றினது வாசனையும் நாற்றமாகத் தெரிந்திடும்
நகர்ப்புற மனிதனுக்கு
சோற்றுக்கு வழியின்றி
சோர்ந்திடும்போதே அறிவான்

நாகரிக மனிதனோ
கிராமத்தை வெறுக்கிறான்
நகரம் தேடி விரைகிறான்
நரகம் நாடியே நகர்கின்றான்

உழவன் கணக்குப் பார்த்தால்
உழக்கும் மிஞ்சாது தான்
விதைகள் முளைக்க மறுத்தால்
வீணாகிடும் அவன் வாழ்வுதான்

உயிரையே உரமாக்கி
பயிருக்கு அழிப்பவனை
பூவுலகின் பொக்கிஷமாய்
போற்றுவது நம் கடமை!
போற்றுவது நம் கடமை!

நிலாக்கவி நதீரா முபீன்
புத்தளம்

காலச் சக்கரத்தின் கோரைப் பற்களில் சிக்கிய படியே மக்கிப் போகிறது மக்களின் விவசாயம் ஆலைப் பூதகிகள் பாலைப் பூச்சுவதால் அழுக்களின் இருப்பிடமாய் ஆகிப் போனது ஆறுகள் பூமித்தாயின் வயிற்றினிலே தொற்றிக் கொண்ட புற்றுநோயாம் கட்டிடக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *