விடியலை நோக்கி

  • 9

சில நொடிகள் மௌனித்துப் பார்
இப்பாரினிலே -நீ வசிக்கும் நாட்களை

உதட்டில் தேனாய் சொட்டும் வார்த்தைகள்
கண்களில் – அன்போடு கலந்த வஞ்சனை
உறவாடுவதில் வெள்ளையனை
மிஞ்சிடும் விருந்தோம்பல்

அத்துனையும் – சட்டென கலைந்திடும்
பணம் எனும் போர்வை
உனை விட்டு விலகையில்

பணத்திற்காக விற்கப்படும் – பாசங்களே
இங்கு அதிகம்
அதற்காக நீ கால்மார்க்ஸ் – ஆகி
வர்க்க முறை பேசி வாதிட வேண்டாம்

காத்திரு நாளைய விடியல் உனக்கானது
போராட்டம் நீளட்டும் உன் விடியலை நோக்கி

றஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான்
ஹுதாயிய்யா

மருதமுனை

சில நொடிகள் மௌனித்துப் பார் இப்பாரினிலே -நீ வசிக்கும் நாட்களை உதட்டில் தேனாய் சொட்டும் வார்த்தைகள் கண்களில் – அன்போடு கலந்த வஞ்சனை உறவாடுவதில் வெள்ளையனை மிஞ்சிடும் விருந்தோம்பல் அத்துனையும் – சட்டென கலைந்திடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *