தாயோடு பட்டதாரியாகினேன்

0 Comments

இன்று என் அன்னைக்கு பட்டமளிப்பு விழா இல்லையில்லை என் அன்னையோடு எனக்கும் பட்டமளிப்பு விரிவுரைக்கு தாயோடு சென்றேன் இல்லை தாய் என்னை கருவாக சுமந்து சென்றாள். மூன்றாண்டுப் பயணமிது கருவரையில் ஈரைந்து திங்கள் கற்றேன் மீதியை பல்கலை நண்பிகளோடு அமுதாக ஊட்டினாள் என் அன்னை. கருவரைக்கல்வி உன்னதமானதென்பதை உலகறியச் செய்துவிட்டாள் என் அன்னை Farisa Asadh

உம்மா யுனிவர்சிட்டிலதான் வேல

0 Comments

அவள் புன்னகை முகத்தழகி. குணத்துக்கேற்ற பெயர். நீங்களே பெயரை தீர்மானித்துவிட்டீர்களா? “தீனத்” தான் அவளது பெயர். கண்டவுடன் புன்னகைத்து ஸலாம் கூறி விடுவாள். பல்கலை தந்த உறவுகளில் அவளும் ஒருத்தி. அறைத்தோழியாய் அவளை அடையாவிட்டாலும் பல்கலைத்தோழியாய் கிட்டியது பாக்கியம் தான். Hostel வாழ்க்கை வாழ விரும்பியவளுக்கோ நடை தூரத்தில் இருக்கும் பல்கலை தான். ஒவ்வோரு நாளும் நடந்து வருவாள். கடற் காற்றை சுவாசித்தபடியே, ஏதேச்சையாக அன்று அவளுடன் நீண்ட நேரம் உரையாடினேன். இறுதியில் அவள் வீட்டுக்கு ஒரு […]

முஸ்லிம்கள் வளர்த்த நுண் கலை

0 Comments

இந்து சமுத்திரத்தின் முத்துஅதுவே ஈழத் திருநாடுபல்லினத்தவர் கூடி வாழும் நாடுநாலினத்தவருள்ஓரினத்தவர்நல்லோரான முஸ்லிம்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள்சிறுபான்மையாக வாழ்ந்தாலும்சிறுமையானதல்லநம் முன்னோரின்சிறப்பான சேவை வளர்த்த கலை பொற் கலைஅதிலே ஒன்று நுண்கலைஅழகும் கலையும்இன்பமும் இரசனையும்உண்மையும் நன்மையும்இணைந்த கலைகளேஇஸ்லாமிய கலைகள் இஸ்லாத்தின் வரையறையில்இலங்கை முஸ்லிம்கள்இசைக் கலையை வளர்த்தனரே!நாட்டாரிசையும்வானொலி இசையும்வான் முழங்க ஒலித்ததுவே! வியக்க வைக்கும் மாடங்களும்விசாலமிக்க குப்பாக்களும்விவேகமிக்க நம் முன்னோரின்விண்ணைத் தொடும்வேலைப்பாடுகள் பூவேலைப்பாட்டு ஜன்னல்களும்புதுமைமிகு நுட்பங்களும்பரவசமூட்டும் முகப்புக்களும்பார்க்க மெருகூட்டும் மிஹ்ராபும்பண்பாட்டு வடிவங்களே! அலங்காரத்தள விரிப்பும்அலங்காரப் பின்னல்களும்பன்னாலான பாய்களும்பாரம்பரியக் கலைகளே! சிலை சிற்பம் […]

இறையோனை நினைத்திடு!

0 Comments

உலகம் அது விளைநிலம் அகிலம் அது சோதனைக் களம் சோதனையக் கடந்து சாதனை புரியப் பிறந்த நீ சோகத்தை எண்ணிக் கவலைப் படாதே! நீ உன்னை அறிந்ததை விட உன் இறைவன் உன்னை அறிந்தவன் கல்பின் கவலை மறந்து கடைசி வரை வாழனுமா?? கண்ணியமானவனை கல்பில் நிறுத்தி கனிவோடு பிரார்த்தி! உள்ளம் அமைதியடைய இறையோனை நினைத்திடு! உன் கவலைக்கு மருந்து இறைவனிடமே Binthi Asadh

ஷஃரு ரமழான்

0 Comments

சத்திய மார்க்கமிது சத்தியவானின் மாதமிது ஷஃரு ரமழானது முப்பது நாட்களது முதற்பத்தில் இறையருளைப் பெற்றே நடுப்பத்தில் பாவக்கறை அகற்றி இறுதிப்பத்தில் சுடும் வேதனை அளிக்கும் நரக விடுதலை பெற்றிடு! இறுதிப்பத்தின் ஒற்றை இரவினிலே இருளகற்றி அருளளித்து இரு ஐநூறு திங்கள்கள் இறை தியானம் செய்திட்ட இறை கூலியை பெற்றுத்தரும் இறையருள் லைலத்துல்கத்ரிலே இறைவனை நின்று வணங்கி இரு ஐநூறு திங்கள்கள் இறைவனை நினைவுகூர்ந்த இறையருளைப் பெற்றிடு! ஒரு மாதம் பயிற்சி பெற்றே பதினொரு மாதம் சீர்திருத்தியே இறையச்சத்தை […]

கொரோனாவின் கோரம்

0 Comments

கொரோனா வந்த வேகம் தனியவில்லை இன்னும் அதன் கோரம் குறையவில்லை உலகை ஆட்டும் வல்லரசையும் உலுக்கி வைத்தது கொரோனா நெரிசலில் கிடந்த நகரையும் வெறிச்சொட வைத்தது கொரோனா உருவு க்கு உணர்வூட்டும் உயிரையும் உறிஞ்சிக் குடித்தது கொரோனா ஜாதி மதம் பார்த்தே எதிர்விணை செய்தோம் இன்று ஜாதி மதம் பார்க்காமல் எதிர்க்குதே கொரோனா ஓய்வின்றி உழைத்தனர் உறவுகளை மறந்தே ஓய்வெடுத்துக் கொண்டனர் கொரோனாவுக்குப் பயந்தே உலகம் என்றும் நிரந்தரமில்லை உயிரும் என்றும் நிலையில்லை உலகுக்கு உரைக்க வந்ததே […]

குண்டு வெடிப்பில் முடிந்த போர்வையின் தேசிய மீலாத் விழா

0 Comments

போர்வையின் 21ம் நூற்றாண்டின் வரலாற்றுப் பார்வை அன்று 2009.03.10 வாழ் நாளில் மறக்க முடியாத நாளாகும். குண்டு வெடித்தாலும் தனக்கான பொறுப்பை முறையாக நிறைவேற்றிய நாளகும். அன்றைய தினம் தேசிய மீலாத் தினத்திற்காக ஊரே கலைகட்டியிருந்தது. தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருநதது. காலையிலே பள்ளி முற்றவேளிக்கு சென்றிருந்த எல்லோரையும் பாதுகாப்பு பிரிவினர் பரிசோதனை செய்து உட்செல்ல அனுமதி அளித்தனர். அதிதிகள் வருகைதரும் நேரம் […]

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் சேவைகள்

0 Comments

இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாகும். இங்கு பெரும்பான்மையாக பௌத்தர்களும் சிறுபான்மையினர்களாக இந்துக்கள்¸ முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்ந்த போதும் அவர்கள் தாம் தேசத்திற்கு நல்கியுள்ள பங்களிப்புக்களை சிறுமையானவை என மதிப்பிடுவது தவறானதாகும். முஸ்லிம்கள் தாம் வாழும் நாட்டின் மீது பற்றுக்கொண்டு நாட்டு நலனுக்காக ஒத்துழைப்பது கடமையாகும். அந்த அடிப்படையில் வியாபாரிகளாக வருகை தந்து இங்கு குடியேறிய முஸ்லிம்களும் தாம் வாழும் நாட்டின் முன்னேற்றத்திற்காக தேசிய¸ கலாசார¸ பொருளாதார¸ அரசியல் பங்களிப்புக்களை வழங்கி […]

முஹர்ரத்தை வரவேற்போம்

0 Comments

முஸ்லிமின் முதல் மாதம் இங்கிலீஸி ஜனவரியல்ல இந்து தையுமல்ல முன்னோக்கும் முஹர்ரமே முஸ்லிமின் முதல் மாதம் மலர்கின்ற புத்தாண்டை மலர்ச்சியுடன் வரவேற்று கடந்தாண்டை கணிப்பீடு செய்து இவ்வாண்டுக்கு திட்டமிடு ஒருமுகத்துடன் – மறவாமல் போட்ட திட்டத்தை பொறுப்பாய் நிறைவேற்று திட்டமில்லா செயல்கள் நட்டத்தை ஏற்படுத்தும் விட்ட தவறு மிட்டி நடவாமல் பட்ட வேதனை வட்டமாகாமல் இட்ட திட்டத்தை சட்டப்படி நடத்து இஸ்லாமிய சரித்திரங்கள் பல படைத்த சத்திய மாதத்தில் சாதனைகள் பல புரிய சங்கற்பம் பூணுவோம் Banu […]