அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 21

  • 85

அலைஸ் உடனே ஓடிப்போய் கோரினை கட்டியணைத்து கொண்டாள்.

“அக்கா….”

“என்னது அக்காவா…”

“பிரின்சஸ் கோரின்…”

“ஆமா… கோரின் தான் நீங்க ஊருக்குள்ள வந்ததுமே எனக்கு மனதில் தோன்றிவிட்டது. இந்த ரெண்டு நாளும் நான்னு நினைத்து மாயாகிட்ட மாட்டிக்கொண்டு இருப்பதும் உணர்ந்தேன், கண்டுபிடிச்சு காப்பாற்ற ரெண்டு நாளாகிச்சு…”

என்றாள் லேசான புன் முறுவலோடு. அதுவரை நடைபெற்ற அனைத்தையுமே ஆளுக்கொரு கோர்வையாக சொல்லி முடித்தனர்.

“நடந்தது நடந்து போச்சு, இனி நடக்க போவதை பற்றி பேசுவோம். அடுத்து நாம நயோமியை கண்டுபிடிக்கனும் இல்லியா” என்று கேட்டாள் கோரின்.

“இல்ல… அதுக்கு அவசியம் இல்லை…” என்றாள் அலைஸ்.

“என்ன சொல்றே…”

“என்னை மன்னிச்சிடுங்க… இனியும் என்னால உங்களுக்கு உதவ முடியும் என்னு எனக்கு தோணல… என் ஒருத்தியால எல்லோருமே கஷ்டங்களுக்கு ஆளாகுறீங்க. இனியும் இங்க இருக்குற யாருக்கும் நான் தொந்தரவா இருக்க விரும்பல.”

என்றவாறு எழுந்தாள் அலைஸ்.. ரியூகிக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.

“ஆனா… அலைஸ்…”

“போதும். நான் முடிவு பண்ணிட்டேன். யாரும் என்ன தேடிவரவேணாம்.”

“அப்படி எப்படி உன்னால சொல்ல முடியும்.” என்று ரியூகி கேட்டான்.

“நான் இந்த நாட்டோட இளவரசி என்பதை நீங்க நம்பினா. இது என்னோட கட்டளை ஆக கூட எடுத்துக்கலாம். அவ்வளவு தான்.” என்றவள் எல்லோரும் மரத்து போய் வாயடைத்து போய் நிற்க அலைஸ் தன் போக்கில் நடந்தாள். அவள் போனபின்னர்,

“என்ன நம்ம பிரின்சஸ் இப்படி பண்ணிட்டாங்க” என்று சோஃபி கவலையோடு சொன்னாள்.

“அவங்க இப்படி ஒரு முடிவுக்கு வர என்ன காரணமா இருக்கும்.” என்று கியோன் கேட்டான்.

“இதுக்கெல்லாம் நான் தான் காரணம்.” என்று ரியூகி தலையை தொங்க போட்டு கொண்டான்.

“என்ன நீயா.. என்ன பன்னடா நீ…” என்று கியோன் கேட்டான்.

“சே.. நான் அப்படி பேசி இருக்க கூடாது.. நான் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும்…”

“அப்படி என்னதான்ண்டா சொல்லி தொலைச்சே…” என்று சோஃபி கத்தினாள்.

“சரி ..இப்போது பேசி பயனில்லை. அவ எப்படியும் வந்துடுவா. விதிப்படி அவ நம்ம கூடத்தான் இருப்பா நாம இப்போ நயோமியை தேட கிளம்பலாம் வாங்க.” என்று இளவரசி சொல்ல மறுபேச்சு இன்றி எல்லோரும் கவலையுடன் நயோமியை தேடி புறப்பட்டனர்.

காட்டுப்பாதை ஒன்றில் தனியாக கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள் அலைஸ். அவ்வளவு நேரமும் வெற்று மனதுடன் எதையும் யோசிக்காமல் சென்றவள் திடீரென ரியூகி பற்றியும் அவன் அவளை காப்பாற்ற எடுத்த ஒவ்வொரு முயற்சிகள் பற்றியும் நினைக்க ஆரம்பித்தாள். அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு.

“சே… நான் எவ்வளவு பெரிய முட்டாள். அவங்க நானில்லாம எப்படி அரண்மனைக்கு போவாங்க யோசிக்காமல் முடிவெடுத்து வந்துட்டேன். எல்லோரும் வருத்தப்படுவங்க… ஆமா… அது தான் சரி ஈகோ பார்க்காமல் அங்க திரும்பி போயிடலாம்…”

என்றெண்ணி திரும்பினாள். அப்போது அவளுக்கு பின்னாடி நான்கு தடிமாடுகள் சூழ்ந்து கொண்டனர்.

“இந்த அடர்ந்த காட்டுக்குள் தனியா என்ன பண்ணுறே பெண்ணே? வேணும் என்னா நாங்க உன் கூட இருக்கட்டுமா.”

என்று அவளை சீண்டினர். ஆபத்தை உணர்ந்து கொண்ட மறுகணமே திரும்பி ஓட முயற்சித்தாள் அவர்களும் துரத்த பயத்தில்,

“என்னை காப்பாற்றுங்க…..”

என்று கத்தியபடியே அலைஸ் ஓடினாள். அப்போது கல் இடறி கீழே விழுந்தாள் .அவர்களும் அவளை சுற்றி வளைத்து விட்டனர்.

“ஆஹ்… மாட்டினியா… எப்படி முடியும் எங்க கிட்ட இருந்து தப்பிக்க.” என்றான் ஒருவன்.

அவர்கள் நால்வரும் கைகளை பிசைந்து கொண்டே அவளை நெருங்க அலைசுக்கு பயத்தில் முகம் வெளுத்து. ரியூகியை எண்ணி அவன் பெயர் சொல்லி கத்துவதற்குள் திடீரென அவர்களின் கால்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு தொப்பென்று விழுந்தனர். அதிர்ச்சியில் வாய் திறந்தவாறே அலைஸ் கிடக்க அவளுக்கு முன்னால் அவன் நின்று கொண்டிருந்தான். அவ்வளவு தான் அலைஸ் மயங்கி விழுந்தாள்.

தொடரும்……
ALF. Sanfara.

அலைஸ் உடனே ஓடிப்போய் கோரினை கட்டியணைத்து கொண்டாள். “அக்கா….” “என்னது அக்காவா…” “பிரின்சஸ் கோரின்…” “ஆமா… கோரின் தான் நீங்க ஊருக்குள்ள வந்ததுமே எனக்கு மனதில் தோன்றிவிட்டது. இந்த ரெண்டு நாளும் நான்னு நினைத்து…

அலைஸ் உடனே ஓடிப்போய் கோரினை கட்டியணைத்து கொண்டாள். “அக்கா….” “என்னது அக்காவா…” “பிரின்சஸ் கோரின்…” “ஆமா… கோரின் தான் நீங்க ஊருக்குள்ள வந்ததுமே எனக்கு மனதில் தோன்றிவிட்டது. இந்த ரெண்டு நாளும் நான்னு நினைத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *