Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இல்லங்களை இறை இல்லங்களாக மாற்றுவோம் 

இல்லங்களை இறை இல்லங்களாக மாற்றுவோம்

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர் நோக்கிய பிரச்சினைகள்

  1. அதிக நுகர்வுக் கலாச்சாரம்
  2. குடும்ப விவகாரங்களை கவனிக்க நேரமின்மை
  3. போதைப் பொருள் பாவனை
  4. இளைஞர்கள் அதிகமாக ஊர் சுற்றுகின்றமை
  5. கணவன் மனைவிக்கு மத்தியில் குறைவான புறிந்துணர்வு
  6. குர் ஆன், திக்ர்கள் செய்யப்படாத (பரகத் குறைந்த) வீட்டுச் சூழல்
  7. மற்றவர்களது கஸ்டங்களை புறிந்து கொள்ளாத சமூகக் கட்டமைப்பு
  8. கள்ளத் தொடர்புகள்
  9. குறுகிய சிந்தனைப் பாங்கு
  10. நேரந்தவறிய வணக்கங்கள்
  11. குறுகிய அரசியல் அபிலாஷைகள்
  12. பெற்றொர்களுக்கு கட்டுப்படாத மாணவர்கள்
  13. அல்குர் ஆனை விட்டும் தூரமாகிய குடும்பக் கட்டமைப்பு
  14. தாம் வாழும் சுற்றுப் புறச் சூழல் பற்றிய கவனமின்மை

இதை விடவும் கூடுதலான பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் முஸ்லீம் சமூகம் தத்தளித்துக் கொண்டிருந்தது. இவைகளை இல்லாதொழிப்பதற்கான பல வழிகாட்டல்கள் குத்பாக்களுக்கூடாகவும்பல ரேடியோ நிகழ்ச்சிகளுக்கூடாகவும் வழங்கப்பட்டும் அவை சமூகத்தை விட்டும் ஒழிந்த் பாடில்லை. இவைகளை தீர்ப்பதற்கு பல பிரயத்தனங்களை சமூக ரிதியில் செலவிட்டும் தீர்க்க முடியவில்லை. ஆனால் அல்லாஹ்வின் நாட்டத்தின் பிரகாரம் இப் பிரச்சினைகளை ஓரளவுக்கு தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இந்த கொரோனா வைரஸுடைய காலத்தை தந்திருக்கின்றான். எம்மை தனிப்பட்ட ரீதியில் குடும்ப ரீதியில் சமூக ரீதியில் நாடளாவிய ரீதியில் ஒழுங்குபடுத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்குரிய காலமாக இந்த காலத்தைபயன்படுத்துவது சாலச்சிறந்ததாகும்.

முஸ்லீம் சமூக அனைத்து விடயங்களையும் எதிர்மறையான பார்வையில் அனுகுவதை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை.

وَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْئًا وَّهُوَ خَيْرٌ لَّـکُمْ‌ۚ وَعَسٰۤى اَنْ تُحِبُّوْا شَيْئًا وَّهُوَ شَرٌّ لَّـكُمْؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏

நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (சூறதுல் பகரா 216)

எமது பார்வைக்கு கெடுதியாக தோன்றுகின்றவை அனைத்தும் மோசமானவை என்ற நிலைப்பாட்டிற்கு நாம் வந்து விடக் கூடாது. மாற்றமாக அந்த விடயத்தினூடாக அல்லாஹ் மற்றொரு படிப்பினையை எமக்கு கற்றுத் தர நாடி இருக்கலாம். எனவே தால் அல்குர் ஆன் அல்லாஹ்வின் புறத்தால் இருந்து வருகின்ற அனைத்து நலவுகளையும் கெடுதிகளையும் சோதனைகள் என்ற சொற்பிரயோகத்தினூடாகவே எமக்கு அடையாளப்படுத்துவதிப் பார்க்கலாம்.

ஆகவே இந்த கொரோனா விடுமுறைக் காலத்தில் சமூகமாக ஒன்றிணைந்து கீழ்வருகின்ற விடயங்களில் கவனம் செலுத்துவோம்

  1. எம்மையும் எமது குடும்ப அங்கத்தவர்களையும் ஆன்மீக ரீதியில் பக்குவப்படுத்திக் கொள்ளல்
  2. எமது குடும்ப உறவுகளின் நிலமைகளை கருத்திற்கொண்டு அவர்களுக்கு உதவ முன்வருதல்
  3. பிள்ளைகளின் ஒழுக்க மற்றும் அவர்களது கல்வி விடயங்களில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்தல்
  4. அல்லாஹ்வின் அருள்களை எண்ணி அவற்றுக்காக நன்றி கூறுதல்
  5. தேவையான விடயங்களை நுகர்கின்ற கலாச்சாரத்தை குடும்ப ரீதியில் உண்டாக்குதல்
  6. எம்மையும் எமது சுற்றுப் புறச் சூழலையும் சுத்தமாக வைத்திருத்தல்
  7. தேவையுள்ள மனிதர்களுக்கு உதவுதல்

இத்தகைய விடயங்களை எமது வாழ்வில் கொண்டு வருவதற்குரிய காலமாக இந்த காலத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாறாக வீண்பேச்சுக்கள், வீண் கூத்துக்களில் ஈடுபடுவதை விட்டும் எம்மைப் பாதுகாக்கின்ற அதேநேரம் தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைக்காமல் இருக்கவும் வேண்டும். அத்துடன் இந்த காலத்தில் ஓய்வு நேரம் கூடுதலாக இருக்கின்றது என்பதற்காக சமூக வலைத்தளங்களில் அடுத்த மனிதர்களை காயப்படுத்துகின்ற விடயங்களை பதிவிடுவதிலிருந்தும் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எமது தூய்மையான எண்ணங்களுக்கு கூலி தருவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்

அஷ்ஷெய்க் MIM நுபைல் (நளீமி)

முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர் நோக்கிய பிரச்சினைகள் அதிக நுகர்வுக் கலாச்சாரம் குடும்ப விவகாரங்களை கவனிக்க நேரமின்மை போதைப் பொருள் பாவனை இளைஞர்கள் அதிகமாக ஊர் சுற்றுகின்றமை கணவன் மனைவிக்கு மத்தியில் குறைவான புறிந்துணர்வு…

முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர் நோக்கிய பிரச்சினைகள் அதிக நுகர்வுக் கலாச்சாரம் குடும்ப விவகாரங்களை கவனிக்க நேரமின்மை போதைப் பொருள் பாவனை இளைஞர்கள் அதிகமாக ஊர் சுற்றுகின்றமை கணவன் மனைவிக்கு மத்தியில் குறைவான புறிந்துணர்வு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *