Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
என்றும் எப்போதும் அல்லாஹ்வே நமது உதவியாளன். அவனே நமக்குத் துணை 

என்றும் எப்போதும் அல்லாஹ்வே நமது உதவியாளன். அவனே நமக்குத் துணை

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அன்பின் சகோதர, சகோதரிகளே! அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ் வால் நாம் பரிபாலிக்கப்படுகின்றோம். அவனே நாம் நமது கஷ்ட நஷ்டங்களை நீக்குபவன். எனவே அவனிடமே நமது பிரச்சனைகளைப் பிரார்த்தனைகளாக முறைப்பாடு செய்ய வேண்டும். அவனே நமது துன்பங்களை அகற்றுபவன். இதற்கு பல நூறு சான்றுகள் நமக்குண்டு.

நபிமார்களான நூஹ், அயூப், யூனுஸ், ஸகரிய்யா (அலை) ஆகியோரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பாரிய துன்பங்களை அகற்றக் கோரி அல்லாஹ் விடம் அவர்கள் மன்றாடிய சரித்திரப் பதிவை நமக்கும் பாடமாக அல்லாஹ் குர்ஆனில் கற்றுத் தருகின்றான். நமது வழிகாட்டி புனித குர்ஆனாகும் . நீங்கள் அல்அன்பியா அத்தியாயத்தில் இது பற்றிய தெளிவைக் காணலாம்.

(وَنُوْحًا اِذْ نَادٰى مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ‌ۚ‏ (الأنبياء/٧٦

இன்னும், நூஹ் – அவர் முன்னதாகவே பிரார்த்தித்தபோது, (அவருடைய பிரார்த்தனைக்கு) நாம் பதில் அளித்தோம். இன்னும் அவரையும், அவரைச் சார்ந்தோரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் பாதுகாத்தோம். (21-66)

அல்அன்பியாவில் மீண்டும் பின் வரும் நபிமார்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டது பற்றி குர்ஆன் மீண்டும் குறிப்பிடுகின்றது. படியுங்கள்.

وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‌ ۖ‌ۚ‏● فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ‌ وَّاٰتَيْنٰهُ اَهْلَهٗ و مِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰى لِلْعٰبِدِيْنَ‏●

இன்னும், அய்யூப் தனது இரட்சகனிடம் “நிச்சயமாக (பாரிய நோய்த்) துன்பம் என்னை தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களில் எல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித் போது, ● நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் – இது நம்மிடத்திலிருந்துள்ள அருளாகவும் நல்லடியார்களுக்கு நினைவூட்டுதலுமாகும்.(21:83-84).

அவ்வாறு மீனின் வைத்தில் பல நாட்கள் நிர்க்கதியில் வாழ்ந்த நபி யூனுஸ் (அலை) அவர்கள் பற்றி பின் வருமாறு குறிப்பிடுகின்றது.

وَ ذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّـقْدِرَ عَلَيْهِ فَنَادٰى فِى الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ  اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ‌ۚ● فَاسْتَجَبْنَا لَهٗۙ وَنَجَّيْنٰهُ مِنَ الْـغَمِّ‌ؕ وَكَذٰلِكَ نُـنْجِى الْمُؤْمِنِيْنَ‏

இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் என்ற (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று அவர் எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து :

لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ‌ۚ‏

“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.

எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம். (21:87- 88)

வயோதிபத்தை அடைந்த ஸகரிய்யா (அலை) அவர்கள் குழந்தை வேண்டி அல்லாஹ்விடம் வேண்டியது பற்றி

وَزَكَرِيَّاۤ اِذْ نَادٰى رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِىْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏● فَاسْتَجَبْنَا لَهٗ وَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ‌ؕ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا ‌ؕ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ‏

இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) தனிமையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித்த போது, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; (21:89- 90)

இந்த பிரார்த்தனைகள் யாவும் நாம் யாரின் பொருட்டாலும் அல்லாஹ்வை நெருங்கி துஆ செய்ய வேண்டியதில்லை என்பதையும் நமக்கு அல்லாஹ்வே பதில் தருபவன் என்றும் கற்றுத் தருகின்றன.

இதனை 313 என்றோ, 60 லெட்சம் என்றோ, 2 கோடி என்றோ வகுத்து செய்ய அல்லாஹ்வோ அவனது தூதரோ கூறவில்லை. எனவே அவனிடம் நாம் நமது ஸதகா, நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்கி உறுதியாக அவனிடம் பிரார்த்தனை செய்தால் போதும் நிச்சயமாக அவன் பதில் தருவான். இப்படி பல நூறு சரித்திரம் நமக்கு இருந்தும் அல்லாஹ்வை நாம் ஏன் நெருங்கி பிரார்த்திப்பதில்லை. அவனிடம் பிரார்த்தனை செய்யாமல் இருப்பது நரகத்திற்கு இட்டுச் செல்லும் பெரும் பாவங்களில் ஒன்றாகும். அதற்காக கூட்டு திக்ர், துஆ மஜ்லிஸ் வைப்பது மார்க்க மாகாது . அது புது வழியாகும்.

ரிஸ்வான் மதனி

அன்பின் சகோதர, சகோதரிகளே! அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ் வால் நாம் பரிபாலிக்கப்படுகின்றோம். அவனே நாம் நமது கஷ்ட நஷ்டங்களை நீக்குபவன். எனவே அவனிடமே நமது பிரச்சனைகளைப் பிரார்த்தனைகளாக முறைப்பாடு செய்ய வேண்டும். அவனே நமது…

அன்பின் சகோதர, சகோதரிகளே! அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ் வால் நாம் பரிபாலிக்கப்படுகின்றோம். அவனே நாம் நமது கஷ்ட நஷ்டங்களை நீக்குபவன். எனவே அவனிடமே நமது பிரச்சனைகளைப் பிரார்த்தனைகளாக முறைப்பாடு செய்ய வேண்டும். அவனே நமது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *