Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எச்சரிக்கை இது 

எச்சரிக்கை இது

  • 27

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஏவல்களும் விலக்கல்களும்
இறைவனிடம் இருந்து
வரமாய் வரைந்திருப்பது
வாழும் வாழ்வை
செவ்வனே சீரமைத்திட

ஆட்சியின் அதிபதி
அல்லாஹ்வால்
ஹராம் ஹலால்
இயம்பிட்ட அற்புத
இஸ்லாம் – இன்று
ஆராய்ச்சியின் பின்னே
மாட்சிமை மலர்கிறது

குருதியை குடித்து
கொன்றொழித்து குவித்து
கொரோனாவெனும் கொல்லை
அசைவத்தை சைவமாக்கி
சாவை சோ…வாக்கிட்டது

என்று மிருதனாய்
மனிதன் மாறினானோ
அன்றே அழிவையும்
தனக்குத் தானே
தலைவிதியாய்
எழுதிட்டான்

உணவு வலைக்குள்
உள்ளதையெல்லாம்
மனிதனே மாமிசமாக்கினால்
மிகுதியாய் மிகும்
மிருகம்
விசமாகாது
என்னவாகும்?

காற்றில் கடல் தாண்டும்
வைரஸ் வைரலாக
திரைக்குள் இருந்த
மறையோதிகள் தரையில்
தலைகாட்டிய காலம் மாறி
முகமூடியை தீர்ப்பாய்
எழுதிட்டான் இறைவன்
இதுவே தற்காப்பு என்று

கவிச்சாரல் சாரா
புத்தளம்

ஏவல்களும் விலக்கல்களும் இறைவனிடம் இருந்து வரமாய் வரைந்திருப்பது வாழும் வாழ்வை செவ்வனே சீரமைத்திட ஆட்சியின் அதிபதி அல்லாஹ்வால் ஹராம் ஹலால் இயம்பிட்ட அற்புத இஸ்லாம் – இன்று ஆராய்ச்சியின் பின்னே மாட்சிமை மலர்கிறது குருதியை…

ஏவல்களும் விலக்கல்களும் இறைவனிடம் இருந்து வரமாய் வரைந்திருப்பது வாழும் வாழ்வை செவ்வனே சீரமைத்திட ஆட்சியின் அதிபதி அல்லாஹ்வால் ஹராம் ஹலால் இயம்பிட்ட அற்புத இஸ்லாம் – இன்று ஆராய்ச்சியின் பின்னே மாட்சிமை மலர்கிறது குருதியை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *