மரணித்து ஓய்வு பெற்றவர்களாகச் செல்வோம்; ஓய்வு அளித்தவர்களாகச் செல்லாதிருப்போம்!

  • 11

இவ்வுலகம் மறுமையின் விளைநிலம். மனிதர்கள் தமது செயல்களுக்கான பலன்களை அதில் வைத்தே அறுவடை செய்துகொள்வார்கள். அவர்கள் இவ்வுலகில் செய்தது நற்செயல்களாக இருப்பின் அதற்காக நற்கூலிகளையும், கெட்டதாக இருப்பின் தண்டனைகளையும் அதற்காக அங்கு பெற்றுக்கொள்வார்கள். உண்மையான கூலி வழங்கப்படுவது மறுமையில்தான். சுவர்க்கமாக இருந்தால் நிரந்தர நிம்மதியும், நரகமாக இருந்தால் களைப்பு, கஷ்டம், சிரமம், மூதேவித்தனம் ஆகியன கிடைக்கும்.

அபூ கத்தாதா இப்னு ரிப்ஈ அல்அன்சாரி (ரழியழ்ழாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள்: “இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள், ‘(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்’ என்றார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற மனிதர்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன’ என்றார்கள்”. ( நூல்: புகாரி – 6512)

மரணித்த ஒருவரின் ஜனாஸா (பிரேதம்) அடக்கம் செய்யப்படுவதற்காகக் கொண்டுசெல்லப்பட்ட வேளையில்தான் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம் அவர்கள், ‘இவர் ஓய்வு பெற்றவர்; அல்லது பிறருக்கு ஓய்வு அளித்தவர்’ எனும் இவ்வார்த்தையைக் கூறியதாக அபூகத்தாதா என்ற நபித்தோழர் எமக்கு இங்கு தெரிவிக்கின்றார்கள்.

உலகில் தமது வாழ்நாட்கள் முடிவடையும்போது மரணித்தவர்கள் சந்திக்கும் இருவேறு நிலைகள் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றன. மரணித்தவர் இறைவிசுவாசியாக இருந்தால் அவர் இவ்வுலகத்தின் கஷ்டம், தொல்லைகளிலிருந்து விடுதலைபெற்று அல்லாஹ்வின் அருள் மற்றும் அவனின் திருப்பொருத்தத்திற்குள் நுழைந்துகொள்கிறார். எனவே அவர், கஷ்டம் என்ற நிலையிலிருந்து நிம்மதி எனும் நிலைக்கு நிலைமாறிச் செல்கிறார்.

மரணித்தவன் ஒரு கெட்டனாக – அதாவது ஒரு பாவியாக, அல்லது இறைமறுப்பாளனாக இருந்தால் அவனின் கேடுகள், தீங்குகள், தொல்லைகளிலிருந்து மனிதர்களும், நாடு நகரங்களும், மரங்களும், கால்நடைகளும் நிம்மதி பெறுகின்றன. ஏனெனில், அவன் உயிர் வாழும் சந்தர்ப்பத்தில் அவனின் செயல்கள் மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கின்றன. கெட்டவர்கள் அதிகரிக்கும்போது அது அழிவுக்குக் காரணமாகி விடுகிறது. இதனால், நலவும் மழையும் எமக்குக் கிடைக்காதவாறு அவற்றை அல்லாஹ் தடுத்துவிடுகிறான். அப்போது மரங்கள், கால்நடைகள் உட்பட அனைத்தும் அழிந்துவிடுகின்றன.

இந்நபிமொழி விளக்கத்தின் மூலம் இன்னொரு செய்தியும் எமக்குப் படிப்பினையாகக் கிடைக்கிறது. அதாவது, முஸ்லிமான ஒருவர் தனக்கு முன்னால் தேர்ந்தெடுப்பு ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். தனக்காக தான் விரும்பும் ஒன்றை அவர் தேர்ந்தெடுத்து செயல்பட வேண்டும். மறுமையில் ஓய்வுபெற்றவராக இருப்பதற்கு இவ்வுலகில் அவர் பாடுபட்டு முயற்சிக்க வேண்டும்.

மரணத்தின் பின்னர் மனிதர்களின் நிலைமைகள் எப்படி இருக்கும் என்பது குறித்த விளக்கமும் இந்நபிமொழியில் இருக்கிறது. இதன்படி அவர்களில் சிலர் மூதேவிகளாகவும், சிலர் சீதேவிகளாகவும் மறுமையில் இருப்பார்கள். மேலும், கெட்ட செயல் மற்றும் பாவத்தின் பாதிப்பு கெட்டவனுடன் மட்டும் நிற்காமல் அவனையும் கடந்து மற்ற மனிதர்கள், மரங்கள், கால்நடைகள் வரைக்கும் கடந்து செல்லும் என்ற விளக்கமும் இந்நபிமொழியில் இருக்கிறது.

[ பின்வரும் முகநூலில்

أحاديث صحيح البخاري ومسلم ]

« الدُّنيا مزرعةُ الآخِرةِ يحصُد فيها الناسُ ثِمارَ أعمالِهمْ، إنْ خيرًا فخيرٌ وإنْ شرًّا فشرٌّ، وفي الآخِرةِ يكونُ الجزاءُ إمَّا إلى جنَّةٍ وفيها الراحةُ الأبدِيَّةُ، أو إِلى نارٍ وفيها التَّعبُ والنَّصَب والشَّقاءُ.
وفي هذا الحَديثِ يَحكي أبو قتادةَ الأنصاريُّ رضي الله عنه: “أنَّ رسولَ الله صلَّى الله عليه وسلَّم مُرَّ عليه بجَنازةٍ”، أي: مرَّت عليه جنازةُ ميِّتٍ محمولةٌ لتُدفَنَ، فقالَ: «مُستَريحٌ ومُستَراحٌ مِنهُ»، أي: إنَّ الجنائزِ والأمواتِ عندَ انتِهاءِ آجالِهِم بينَ حَالين: إمَّا أنْ يستَرِيحَ الميِّتُ، وإمَّا أن يستريحَ الناسُ من الميِّتِ. فقالَ الناسُ: “يا رسولَ الله، ما المُستَريحُ والمُستَراحُ مِنهُ؟ قالَ: العَبْدُ المؤْمِنُ يَسترِيحُ مِنْ نَصَبِ الدُّنيا وأذَاها إلى رَحْمَةِ اللهِ»، أي: يَستَريحُ العبدُ المؤمنُ بعدَ موْتِهِ منْ تَعبِ الدنيا وأذاها بدُخولِه في رحمةِ اللهِ ورِضْوانِه، فيَنْتَقِلُ من حالِ التعبِ إلى حالِ الراحةِ.
وأمَّا العبدُ الفاجرُ، وهوَ العاصي أو الكافرُ، فيَستَريحُ منهُ العِبادُ والبلادُ، والشجَرُ والدَّوابُّ أي: يَستَرِيحونَ من فُجُورِه وشُرورِه وأذاه، وهي أفعالٌ تضُرُّ بالعِبادِ، وتكونُ سببًا للهلاكِ لو كثُر الفُجَّارُ، فيَمنَعُ اللهُ الخيرَ والمطرَ فيَهلِكُ جميعُهُم بما فيهِم الشَّجرُ والدَّوابُّ.
وبهذا التَّبيِينِ والتَّوضيحِ النَّبوِيِّ فإنَّ المسلمَ قد وضَعَ أمامَه الاختِيارَ فليَخْترْ لنفْسِهِ ما أحبَّ، وليعملْ وليجْتَهدْ حتى يكونَ مُستَريحًا في الآخرةِ.
وفي الحديثِ: بيانُ أحوالِ الناسِ بعدَ الموتِ فمنهمْ شقيٌّ وسعيدٌ.
وفيه: بيانُ أنَّ ضررَ الفُجورِ والعِصيانِ يتَجاوَزُ شخصَ الفاجرِ إلى الناسِ والشَّجرِ والدَّوابِّ ».

[ فيس بوك: أحاديث صحيح البخاري ومسلم ]

அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்
(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்
வவுனியா.

இவ்வுலகம் மறுமையின் விளைநிலம். மனிதர்கள் தமது செயல்களுக்கான பலன்களை அதில் வைத்தே அறுவடை செய்துகொள்வார்கள். அவர்கள் இவ்வுலகில் செய்தது நற்செயல்களாக இருப்பின் அதற்காக நற்கூலிகளையும், கெட்டதாக இருப்பின் தண்டனைகளையும் அதற்காக அங்கு பெற்றுக்கொள்வார்கள். உண்மையான…

இவ்வுலகம் மறுமையின் விளைநிலம். மனிதர்கள் தமது செயல்களுக்கான பலன்களை அதில் வைத்தே அறுவடை செய்துகொள்வார்கள். அவர்கள் இவ்வுலகில் செய்தது நற்செயல்களாக இருப்பின் அதற்காக நற்கூலிகளையும், கெட்டதாக இருப்பின் தண்டனைகளையும் அதற்காக அங்கு பெற்றுக்கொள்வார்கள். உண்மையான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *