Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எனக்கு நானே வேஷம் பூண்டு கொள்கிறேன் 

எனக்கு நானே வேஷம் பூண்டு கொள்கிறேன்

  • 41

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எனக்கு நானே வேஷம் பூண்டு கொள்கிறேன். இந்த வாழ்க்கையோட்டத்தில் நாம் பல சந்தர்ப்பங்களை விரும்பியும் வெறுத்தும் சந்தித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றோம். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்த அல்லது நிகழத்தக்க செயற்பாடுகள் குறித்து நிகழ்விற்கு முன்பாகவோ பிற்பாடாகவோ எண்ணங் கொள்வதுண்டு.

கண்ணாடியில் எனது பிம்பமே என்னைச் சுடுகிறது இதனை எண்ணிப் பார்க்கும் போதெல்லாம். கால ஓட்டத்தில் நான் விரும்பியோ வெறுத்தோ இல்லை நிகழ்ந்திருக்கவே கூடாது என என்மனம் ஏங்கும் ஓர் சூழ்நிலை.

பகலின் வெளிச்சத்தினை தன்னகத்தே திருடிக் கொண்ட அந்திமாலைப் பொழுது அது. மழையின் வருகைக்காய் தனது வாயல்களை திறக்கும் மேகங்களை கண்டு கொள்வது அவ்வளவு எளிதல்ல. என்றாலும் அவ்வாறானதொரு காட்சியை நான் அன்று என் கண்களினால் படம்பிடித்துக் கொண்டேன். இன்னும் அவை திறந்தே கிடக்கிறது மழைக்காக அல்ல என் ரசனைக்காய். இவ்வாறாக என் ரசனைப்பயணம் நீண்டு கொண்டிருக்க தந்தையின் குரலோசை என் காதினோரம் வந்தடைகிறது. மறுகணமே அதற்கு பதிலளிப்பதற்காய் விரைந்து சென்றேன். என்ன…?‌ என நான் வினவுதற்கு முதலே என் தந்தையிடமிருந்து எனக்கு விடை கிடைக்கப் பெறுகிறது. “அவசரமாக கடிதமொன்றை மற்றுமொரு லோயருக்கு அனுப்ப வேண்டும். ஆகவே இதனை ஸ்கேன் செய்து அவர்களுக்கு ஈமெயிலினூடாக அனுப்பி விடு என்று கூறியவராக” அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

மேகங்கள் என்னவோ மழைக்காக வேண்டி தமது வாயல்களை திறந்து கொண்டாலும் மழையொன்றும் எதிர்பார்த்த அளவிற்கு பெய்ய வில்லை. அதுவும் ஏதோ நலவு தான் என்றெண்ணிய வாரு கொம்னிகேஷனை நோக்கி பைக்கில் சென்றேன். இன்னும் லைசென்ஸ் எடுக்க வில்லை என்றாலும் ஏதோ ஒரு மிகைப்பு என்னை ஆட்கொண்டிருக்கிறது அவ்விடத்தில். பிடிபட்டால் தப்பிக் கொள்ளலாமே என்றெண்ணத்தில் நானும் எங்கு வேண்டுமானாலும் செல்ல தயங்குவதில்லை.

கிட்டத்தட்ட கொம்னிகேஷனை அண்மித்து விட்டேன். அங்கு தான் எனது நண்பனை கண்டேன். சுமாராக ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் என நீண்ட கால எல்லையை தன்னகத்தே கொண்ட நட்பு அது. அவனுடைய நடையை பார்த்தால் ஏதோவொரு ஹீரோயிசம் அவனை ஆட்கொண்டு விட்டது போல என்று தான் எண்ணங் கொள்ளத் தோன்றும் அப்படியானதொரு நடை. எடையில் என்னை மிகைத்தவன் ஆயினும் உயரத்தில் என்னைவிட குட்டை தான். இதுவெல்லாம் நட்பு எனும் வட்டத்திற்கு உள்ளும் புறமும் எவ்வித தாக்கமும் செலுத்தப் போவதில்லை என்பது நீங்களும் அறிந்ததே.

நட்பின் பரப்பில் காலம் நீட்சி பெற்றிருக்கலாம் ஆனால் பாடசாலை வாழ்க்கைக்கு பின் நாங்கள் சந்தித்து பேசினதெல்லாம் குறைவு. ஏறக்குறைய மூன்றரை வருடங்கள் நானும் அவனும் ஒன்றாய் படித்திருப்போம். அக்காலகட்டத்தில் நாங்கள் செய்யாத வேலைகளே அன்று என்று கூட கூறலாம் அந்தளவுக்கு பெரிய பிஸ்தாக்கல் நாங்க அப்ப. காலைலேயே பிரத்தியேக வகுப்பு இருக்குதுன்னு வீட்ல ஒரு கதைய போட்டுட்டு கிரவுண்ட்ல தும்பி பிடிக்கிறதுல இருந்து தான் எங்கட ஸ்கூல் டைம்டேபலே ஆரம்பிக்கும். அதேபோல கோவிலுக்கு நேவி விட்ட ஆடு மாடுகள பத்தியெல்லாம் கேள்விபட்டு இருப்பீங்க அதுபோல் தான் அடிவாங்குறத்துக்கு என்றே நேவி விடப்பட்டவங்க தான் நாங்க அப்ப. அருன்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி நாங்க எத செஞ்சாலும் மாற்றமா பார்க்குற கூட்டமும் இருந்தாங்க அப்போ.

அப்ப அன்றைக்கு நான் அவனை கண்டபோது பைக்க அப்படியே ஆளுக்கு பின்னால கொண்டு போய் மெதுவாக மோதினேன். பெரிதாக எந்தவொரு ஆரவாரமும் இன்றி சில நிமிடங்கள் இருளினுள் புதையுண்டு போனது. மீண்டும் சில நிமிடங்களில் ஏதோ புதிய தேசமொன்றை காண்பதை போல என்னை நோக்கி நோட்டமிட்டான் அவன். அதே நொடியில் வலியின் பிடியிலும் மாட்டிக்கொண்ட அவன் “ஐய்யோ அம்மா” என கதற…. ஏடா இந்த நடிப்பு என நானும் அவனை உற்று நோக்க….. தன் பலமெல்லாம் ஒன்று சேர்த்தவனாக “பெய்டு” என்றான். இருந்தாலும் நான் சரி…. சரி…. விடு என்றவாறு ஆள கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி எங்க போறாய் என வினவினேன். கொம்னிகேஷனுக்கு என பதிலளிக்க நானும் அங்க தான் போறேன் வா என்றவாறு இருவரும் இணைந்தே அங்கு சென்றோம்.

கொம்னிகேஷன் நாநாக்கு என்னய தெரியும் அதால அவரு என்ன கண்ட உடனே என்ன தம்பிண்டு கேக்க நானும் எனது வேலையை இலகுவாக முடித்துக் கொண்டேன். ஆனால் நண்பன் வந்த விஷயமோ வேற ஆளு கட வாசல்ல இருக்குற படிக்கட்டுள உக்காந்து கொண்டு வட திண்டு கொண்டு இருந்தான். சும்மாவே ஊதிப்பெருத்துப் போய் இருக்குற உனக்கு இதுவும் தேவையாண்டு கேட்டவாறே மச்சான் நான் போறேண்டா கொஞ்சம் அவசரமா இத அனுப்பனும் என்று கூறிக் கொண்டே பைக்க நெருங்கக் கொள்ள.

“அப்ப இருந்த மாதிரியே இப்பயும் இருங்கடா” என்ற நண்பனின் குரலோசை காதை எட்டியது. ஏறக்குறைய உடைந்து போய் விட்டேன். என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை அந்த நொடி. அவனையும் என்னையும் சூழ இருந்தவர்களெல்லாம் எங்கள் இருவரையும் பார்க்க “டேய் அப்படி இல்லடா மச்சான்…. கொஞ்சம் அவசரம்டா ” என்று சொல்லி அவ்விடத்தை விட்டும் நகர்ந்தேன்.

ஆனால் உள்ளத்தில் ஏதோவொரு தயக்கமும் குற்ற உணர்ச்சியும் என்னை ஆட்கொண்டது. தவறிலைத்து விட்டேனோ என என்னை நானே பல தடவைகள் வினவிக்கொண்டேன். நண்பனின் அந்த மறுதலிப்பு எதேச்சையாக அமைந்திருக்க முடியாது. அவன் ஏதோ என்னில் வித்தியாசமான நடத்தைக் கோலத்தை பார்த்திருக்க வேண்டும். அதுதான் அவனை அதுபோன்ற வார்த்தைப் பிரயோகத்தை புனைய வைத்திருக்கிறது…. என்பது தின்னம் என உள்ளத்தில் எண்ணிக் கொண்டேன்.

நாமெல்லாம் சராசரி மனிதர்கள். நிதர்சன உலகில் பல சந்தர்ப்பங்களில் பல செயற்பாடுகள் எம் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு இடம்பெறலாம். ஆனால் அவ்வாறு எமது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு இடம்பெறுகின்ற விடயங்களை மாத்திரம் கொண்டு ஒருவரைப் பற்றிய தீர்மானங்களை நாம் அமைத்துக்கொள்வதோ உள்ளத்தில் திடம் கொள்வதோ… நலமன்று.

ஹனீஸ் இப்றாஹீம்

எனக்கு நானே வேஷம் பூண்டு கொள்கிறேன். இந்த வாழ்க்கையோட்டத்தில் நாம் பல சந்தர்ப்பங்களை விரும்பியும் வெறுத்தும் சந்தித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றோம். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்த அல்லது நிகழத்தக்க செயற்பாடுகள் குறித்து நிகழ்விற்கு முன்பாகவோ…

எனக்கு நானே வேஷம் பூண்டு கொள்கிறேன். இந்த வாழ்க்கையோட்டத்தில் நாம் பல சந்தர்ப்பங்களை விரும்பியும் வெறுத்தும் சந்தித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றோம். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்த அல்லது நிகழத்தக்க செயற்பாடுகள் குறித்து நிகழ்விற்கு முன்பாகவோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *