Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
குரங்கு மனசு பாகம் 07 

குரங்கு மனசு பாகம் 07

  • 16

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தனது பரீட்சைக்கான இறுதிக்காலப் பகுதியில் சர்மியின் ஆட்டோ டிரைவராக குறித்த இளைஞர் இருக்க, களைப்பின்றி கல்வியைத் தொடர்ந்தாள் சர்மி. ஆரம்பத்தில் “பிரதர்” என்றழைத்துக் கொண்டிருந்தவள், இப்பொழுது உரிமையுடன் நாநா என்று சொல்லவே அவனும் அந்த உறவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்.


அன்றுகாலை  வழமைபோல் தன்னை தயார்படுத்திக் கொண்டு ஆட்டோவிற்காக காத்திருக்கிறாள் சர்மி. ஆயினும் நேரம் கடந்த நிலையிலும் அவன் வருவது போல் விளங்கவில்லை. அந்த சுடும் வெயிலில் தன் உயிர் நண்பி ஆசையுடன் வாங்கித் கொடுத்த, மஞ்சள் நிறத்தில் சிவப்புப் பூக்கள் படர்ந்த அழகுக் குடையை பிரித்துக் கொண்டவள், கதிரவனின் கதிர்சூட்டிலிருந்து தன் உடலை பாதுகாத்துக் கொண்டாள். அந்நேரம் தான்  பாதையை அளந்தளந்தே வீணாக நேரத்தைக் கடத்தும் அந்த இளைஞர் கூட்டம் வர, தலையை தாழ்த்திக் கொண்டாள் சர்மி.

“இங்க பாருடா! புள்ளக்கி வெக்கம் வந்து போல…”

“ஹஹ் பரவல்ல அழகாத் தான் இருக்காள்..” ஒருவர் மாறி ஒருவராய் கலாய்க்க, காய்ச்சல் பிடித்த உடம்பு போல் உடல் நடுங்கத் துவங்கி விட்டது சர்மிக்கு.

“ஹே! மஞ்சள் குட உன்ன தான்.” சர்மி தலையை தூக்கிப் பார்க்கவில்லை.

அப்பொழுது தான் “ஹே! மஞ்சள் குட உன்னத் தான், போவோமா?” அந்த இளைஞர்களின் வார்த்தைகளை வாங்கிக் கொண்டவனாக வந்து சேர்ந்தான் சர்மியின் ஆட்டோ டிரைவர். அவனைக் கண்டதும் அவளுக்கு கோவம் பொத்திக் கொண்டு வர, “சொன்ன டெய்ம்கு வர தெரியாதா?”

“இல்ல வீல் பன்ஷர் ஆவிட்டு அது தான் கொஞ்சம் லேட் சரி போவோம்” ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டவள் அமைதியாகவே பயணித்தாள்.

“என்னம்மா இன்னக்கி பேசாவிரதமோ?” வழமையாக கதைத்துக் கொண்டே வருபவள் அன்று வாய் மூடி வர, அவன் தான் முதலில் ஆரம்பித்து வைத்தான். ஆனால் சர்மியின் அமைதி களையவில்லை.

“ஹலோ சிஸ்டர்!”

சர்மி புறமிருந்து எந்தப் பதிலும் இல்லாதிருக்க, பயந்து போனவன் ஆட்டோவை ஒதுக்குப் புறமாக நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தான். அவள் வதனம் வாடிப் போயிருந்தது. இதழ்களில் புன்னகையை காணவில்லை.

“சிஸ்டர் ஆர் யூ ஓகே?

“பேசாம போங்க நாநா” எரிச்சலுடன் சர்மி திரும்பிக் கொள்ள, அவள் கண்களிலிருந்து சொட்டுக் கண்ணீர் எட்டிப் பார்க்கவே

“ஹே! இந்த சின்ன விஷயத்துக்கு போய் அழுவுறீங்களா?”

“இது சின்ன விஷயமா?”

“என்ன பொருத்தவர இது சின்ன விஷயம் தான்.”

“அப்போ நீங்களும் அவன்கள போலவா?”

“நோ நெவர், ஆனாலும் அவன்கள் எல்லா பொம்புள புள்ளகளயும் இப்புடி கலாய்க்க மாட்டான்கள்.”

“ஏன்? நான் என்னா?”

“ஏன்னா நீ அழகா இருக்க, அதோட உன் அழக எல்லோரும் பார்க்கனும்னு விரும்புற.”

“ஹலோ பிரதர் மைன்ட் யுவர் வேட்ஸ்…”

நான் உண்மய சொன்னன் சிஸ்டர். உன் டிரஸ்ஸ பாரு, பாக்குறவங்களுக்கு கவர்ச்சி வார போல போடுவீங்க. அப்புறம் அவன் அத சொன்ன, இவன் அத சொன்னன்னு சொல்லுவீங்க. நீங்ககள் ஒழுங்கா இருந்தா இப்புடியான சனியன்கள் ரோட்ல சுத்திட்டு திரிய மாட்டான்கள்

சர்மியின் உள்ளம் குற்றத்தாலும், வெக்கத்தாலும் நிலைகுனிய, பதிலுக்குப் பேசும் வார்த்தைகள் அவளிடம் இருக்கவில்லை.

“சரி சரி நான் ஏதோ ஆவேசத்துல சொல்லிட்டன், இது எல்லாம் மனசுல வெச்சிக வேணாம்” சொல்லிச் சிரித்தவன் தன் பாட்டில் ஆட்டோவை நகர்த்தினான். அன்றைய நாள் ஒர் முடிவுக்கு வந்த சர்மி,  அடுத்தநாள் தன் ஆட்டோ டிரைவருக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தாள்.

கதை தொடரும்…
Aathifa Ashra

தனது பரீட்சைக்கான இறுதிக்காலப் பகுதியில் சர்மியின் ஆட்டோ டிரைவராக குறித்த இளைஞர் இருக்க, களைப்பின்றி கல்வியைத் தொடர்ந்தாள் சர்மி. ஆரம்பத்தில் “பிரதர்” என்றழைத்துக் கொண்டிருந்தவள், இப்பொழுது உரிமையுடன் நாநா என்று சொல்லவே அவனும் அந்த…

தனது பரீட்சைக்கான இறுதிக்காலப் பகுதியில் சர்மியின் ஆட்டோ டிரைவராக குறித்த இளைஞர் இருக்க, களைப்பின்றி கல்வியைத் தொடர்ந்தாள் சர்மி. ஆரம்பத்தில் “பிரதர்” என்றழைத்துக் கொண்டிருந்தவள், இப்பொழுது உரிமையுடன் நாநா என்று சொல்லவே அவனும் அந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *