Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நித்யா… அத்தியாயம் -9 

நித்யா… அத்தியாயம் -9

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

திரும்பிப் பார்த்தவள் சற்றுத் தடுமாறினாள்.

”ஹேய்…. லட்சுமி… வா..வா…” ஆர்வத்துடன் அழைத்தான். அவர்களை புன்முறுவலுடன் எதிர்கொண்டவள். ”பவித்ரா…. என்ன அப்டி பாக்ற? ஓகிட்ட நாளேக்கி தா வாரன்டு சொன்ன… ஆனா இவன் தா இப்போ வர சொன்னான்…. ஸொரிடா…..” பவித்ராவின் கன்னத்தை லேசாகக் கிள்ளி விட்டாள்.

”ஐயோ… அக்கா… அது பிரச்சினயில்ல… நீங்க திடீர்னு வந்தீங்களே அது தா பாத்தது…”

”ஆ… சரி நீ என்னமோ ஏ கிட்ட  கேக்க வந்தியே அத சொல்லு?” அவன் அவளைப் பார்த்துக் கூறியதும், அவள் தலையில் கை வைத்துக் கொண்டு

”ஓ…சிட்….. மறந்து போச்சு…”

”ஓகே… இப்போ எதுக்கு அவசரமா கூப்பிட்ட வினோத்…” லட்சுமியும் , பவித்ராவின் பக்கத்தில் அமர்ந்தாள். சுற்றுமுற்றும் நோட்டம் விட்டவன் அவர்களை நோக்கி,

”இங்க பாரு… இந்த விஷயம் கவனமாக கேக்க வேண்டியது… எனக்கு விக்னேஷ் மேல டௌட்டா இருக்கு….” அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். பவித்ராவுக்கோ எல்லாம் ஆச்சரியமாகவே பட்டது. அவள் யோசித்து வைத்த அனைத்தையும் வினோத் கூறக் கூற அவளுக்குள் இருந்த கோபம் பொங்கி எழுந்தது. திடீரென,

”அண்ணா… இந்த விசயம் எனக்கும் தெரியும். பிளீஸ் பொலீஸ்கு போவோமே”

”நோ…நோ… அவசரப்பட்டு காரியத்த குட்ட கொளப்றமாதிரி ஆக்கிடப் படாது… கொஞ்சம் பொறு… நா பாத்துக்கொள்ற…”

”ஆமா…அவன் சொல்றது சரி தா… இதுல நெறயபேரு நமக்கு தெரிஞ்சவங்க சம்பந்தப்பட்டிருக்காங்க… அதனால கவனம்…”

”ஓகே அக்கா… ஆனா என்னால இனிமே பொறுக்க முடியாது….”

அவளது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

”ஐயோ… பவித்ரா… எங்களுக்கும் தா மா… கவலப்படாத..”

”நீங்க லேசா சொல்லலாம்கா.. ஆனா வலி ஆறாது… இது நெஞ்ச பிச்சமாதிரி வலி…”

”ம்… அவ சொல்றதும் சரி தானே லட்சுமி…”

அவனை கோபமாகப் பார்த்தவள்.

”ஆமாடா.. ஒங்களுக்கு மட்டும் தானே வலி… எனக்கில்லயே?” அவளது தோளைத் தட்டி ”அடி… நா அப்டி சொல்லல்ல. இங்க பாரு..” வினோத் அவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருக்கும் போதே பவித்ராவின் மனதில் ஏதோ எண்ணம் உதிக்கவே திரும்பிப் பார்த்தாள். யாரோ புதருக்குள் இருந்து ஓடுவது தெளிவாக விளங்கியது.

”வினோத்.. அண்ணா… அங்க பாருங்க… யாரோ…” கூவினாள். அவளது குரலைக் கேட்டவன் ஒரே ஓட்டமாக பாய்ந்து ஓடினான். பதற்றத்துடன் மற்ற இருவரும் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். சிறிதுநேரத்தில் களைப்பு மிக தளர்வாக நடந்துவந்தவனை நோக்கி லட்சுமி ஓடினாள்.

”என்னாச்சு? யாரது? ” கேள்வி மேல் கேள்வி கேட்டவளை பார்த்து,

”இல்லடி… அவன் தப்பிச்சுட்டான்… யாரனு பாக்க மொதலே ஓடிட்டான்…”

”சீ… அப்போ யாரோ ஒட்டுகேட்டிருக்காங்க… அப்டிதானே? ” பவித்ரா கத்தினாள்.

”ஷ்… பவித்ரா கத்தாத… எனக்கென்னமோ ஒருத்தன் மேல சந்தேகமா இருக்கு… வா போலாம்..” காரை திறந்துவிட்டவன்.

”போ பவித்ரா…  அவசரமா…” அவள் ஏறியமர்ந்ததும் லட்சுமியை நோக்கி

”நீயும் வரியா?”

”நோ… நானும் காரில தா வந்ததே… இன்னிக்கு நைட் கண்டி பெரிய வீட்டுகு வந்துடு.. பேசணும்.  இப்ப போ… அவள கூட்டிகிட்டு… குட் பாய்..” இருவருக்கும் கையசைத்தவள் சென்றதும் காரில் வந்தமர்ந்தவனைப் பார்த்தவள்.

”அண்ணா…. யாரதுனு ஒங்களுக்கு தெரியுமா?” அவளது கேள்வியால் சற்று நேரம் மௌனமாகவே காரை ஓட்டினான்.

”பிளீஸ்.   சொல்லுங்களே?’  ‘   கெஞ்சும் குரலில் கேட்டாள். அவளைத் திரும்பிப் பார்த்தவன்

”பிளீஸ்.. இப்போ சொல்ல முடியாது… புரிஞ்சுக….” கறாராகக்கூறவும் வாயடைத்துப் போனாள். வேகமாகச் சென்றவன் கார்த்திக்கின் வீட்டுமுன்புறமாக நிறுத்தி விட்டு,

”பவித்ரா… எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க… கார்த்திக்  வீட்லயானு எனக்கு அப்றமா கோல் பண்ணி சொல்லமுடியுமா?”

அவனையே பார்த்தவள் ”என்ன கேக்றீங்க… கண்டிப்பா சொல்றன்…”

”அப்போ டோங்ஸ்… பாய்…”

அவன் சென்ற திசையையே யோசனையுடன் பார்த்தபடி நின்றவளை இரு கரங்கள் அணைத்ததும் ”அம்மா….” கூச்சலிட்டபடியே விளகினாள். பின்னே பார்த்தவளுக்கு கோபம் வந்தது.

”சின்னக்கா… ஏன் நீ பேய் மாதிரி… நா நல்லா பயந்தடீ..”

கண்களை அகல விரித்துக் கொண்டு அவள் சொல்வதை கேட்டவள் ”என்னடா… கோவிக்காத…. நீ இங்கயே பாத்துட்டு நின்னியே… அதான்…. என்னடி… வினோத்த பாத்து மயங்கிட்டியோனு….. ”

கண்ணடித்தவளை முறைத்து ”என்னக்கா .. நீயும் லூசுமாதிரி பேச பழகிட்ட…. இந்த மச்சானோட சேந்தியே. .. அது தா…” கூறியவளுக்கு ஏதோ ஞாபகம் வரவே விறுவிறுப்பாக வீட்டுக்குள் நுழைந்தாள். அவள் பின்னாலேயே வந்த கல்யாணி,

”அடி…கோவிச்சுகாத ஏ தங்க கட்டியே….”

கன்னத்தைக் வருடியவளின் கைகளைப் பிடித்து புன்முறுவலுடன்

”சரியக்கா… நா கோவிச்சுகல்ல.. ”

சுற்றுமுற்றும் பார்த்தபடி மீண்டும்  ”அக்கா… எங்க கார்த்திக் மச்சான்?”

”அவரா… நீங்க போயி ஒரு… இருபது நிமிஷதுகப்றமா எங்கோ வெளீல போயி வர்ரதா சொல்லிட்டு போனாரு. இன்னும் வரலடா…”

”ஏ கேகுற? நா இருக்கேன் தானே … வா உள்ள போலாம்…”

”சரியக்கா… நா டிரஸ் மாத்திட்டு வந்துடறன்”

”ஆ.. சீக்ரம் வா…இன்னிக்கு ராத்ரி ஸ்பெஷலா சமைக்கலாம்…”

”ஆ.. நீ போ… நா வந்துடறன்…” அறைக் கதவடைத்தவள் வினோத்தினது சொல்போனுக்கு தொடர்பு கொண்டாள்.

”ஹலோ… இங்க மச்சானில்ல……” மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தாள் . மறுமுனையில்

”ஓகே… இப்போ தா ஆரம்பம்… ”

”ஹலோ…ஹலோ…”

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

திரும்பிப் பார்த்தவள் சற்றுத் தடுமாறினாள். ”ஹேய்…. லட்சுமி… வா..வா…” ஆர்வத்துடன் அழைத்தான். அவர்களை புன்முறுவலுடன் எதிர்கொண்டவள். ”பவித்ரா…. என்ன அப்டி பாக்ற? ஓகிட்ட நாளேக்கி தா வாரன்டு சொன்ன… ஆனா இவன் தா இப்போ…

திரும்பிப் பார்த்தவள் சற்றுத் தடுமாறினாள். ”ஹேய்…. லட்சுமி… வா..வா…” ஆர்வத்துடன் அழைத்தான். அவர்களை புன்முறுவலுடன் எதிர்கொண்டவள். ”பவித்ரா…. என்ன அப்டி பாக்ற? ஓகிட்ட நாளேக்கி தா வாரன்டு சொன்ன… ஆனா இவன் தா இப்போ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *