Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கொரோனா காலம் 

கொரோனா காலம்

  • 17

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சீரழிஞ்சி காலம் இப்ப
என்னா பண்ணுறது?
சீரடஞ்சி போகும் எப்ப
ஒண்ணா வாழுறது?
பாரடங்கிப் போனதனால்
பாழடஞ்சி கிடக்குது இலக்கு
கூடடஞ்சி பார்க்க இந்தக்
குருவிக்கு விளக்கு

சீரழிஞ்சி காலம் இப்ப
என்னா பண்ணுறது?
சீரடஞ்சி போகும் எப்ப
ஒண்ணா வாழுறது?

வத்திக் குச்சிபோல வாழ்க்க
ஒத்துக்கிட்டன் கண்கள் பூக்க
கத்திக் கத்தி என்னத் தேத்தி
கத்துக்கிட்டன் நெஞ்ச ஆத்தி

நித்தம் திரியாய் உருகி
உள்ள அழுதிடும் மெழுகு
நின்று எரிந்து கருகி
தன்னை அழித்திடும் விறகு

வச்சி உணவிட வாரி அணைத்திட
கைகள் இல்லையோ
வந்து தழுவிட முத்த விதை நட
காலம் தொல்லையோ.

சீரழிஞ்சி காலம் இப்ப
என்னா பண்ணுறது?
சீரடஞ்சி போகும் எப்ப
ஒண்ணா வாழுறது?

பட்ட துயரினை விளக்க
பஞ்சம் பிணிகளும் மறக்க
நெஞ்சம் தவியென தவிக்க
அஞ்சி உயிர்கள் இறக்க.

யுத்த அரண்களில்
வெந்து தணிந்தது போலே
இன்று அணுக்களில்
செத்துப் பிழைக்குது வாழ்வே

அன்பைப் பகிர்ந்திட
அள்ளி முகர்ந்திட
யோகம் இல்லையோ
அன்னை உடல் தொட
காலம் தடையிட
பாவப் பிள்ளையோ

ரோஷான் ஏ.ஜிப்ரி

சீரழிஞ்சி காலம் இப்ப என்னா பண்ணுறது? சீரடஞ்சி போகும் எப்ப ஒண்ணா வாழுறது? பாரடங்கிப் போனதனால் பாழடஞ்சி கிடக்குது இலக்கு கூடடஞ்சி பார்க்க இந்தக் குருவிக்கு விளக்கு சீரழிஞ்சி காலம் இப்ப என்னா பண்ணுறது?…

சீரழிஞ்சி காலம் இப்ப என்னா பண்ணுறது? சீரடஞ்சி போகும் எப்ப ஒண்ணா வாழுறது? பாரடங்கிப் போனதனால் பாழடஞ்சி கிடக்குது இலக்கு கூடடஞ்சி பார்க்க இந்தக் குருவிக்கு விளக்கு சீரழிஞ்சி காலம் இப்ப என்னா பண்ணுறது?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *