Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நீதிச்சேவையின் சலுகைகள் கொவிட் பாதித்த மக்களுக்கு - Youth Ceylon

நீதிச்சேவையின் சலுகைகள் கொவிட் பாதித்த மக்களுக்கு

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நீதிச் சேவையின் சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே கொவிட் – 19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கொவிட் – 19 தற்காலிக ஏற்பாடுகள் தொடர்பிலான திருத்தச்சட்ட மூலத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொவிட்-19 சட்டமூலத்தின் அவசியம் பற்றி முதலில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்தான் கருத்துகளை முன்வைத்திருந்தது. அதன் முன்னாள் தலைவர் காலிங்க இந்ததிஸ்ச மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்ஜீவ ஜயவர்தன, இக்ரம் மொஹமட் ஆகியோர் இணைந்தே சட்டமூலத்தின் அவசியத்தை முன்மொழிந்தனர். இக்கருத்தின் பின்னர்தான் கொவிட் – 19 வைரஸ் நோய் தொடர்பிலான கொவிட – 19 தற்காலி ஏற்பாடு சட்டம் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஏனைய நாடுகளிலுள்ள காரணிகளின் பிரகாரமே இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பிட்ட கால எல்லைக்குள் குறித்ததொரு செயற்பாட்டை செய்யும் போது குறிப்பிட்ட கால எல்லையை எவ்வாறு நீடிப்பது, நீதிமன்ற தலையீடுகளிலுள்ள வழக்குகளை வேறு நீதிமன்றமொன்றத்துக்கு எவ்வாறு பெற்றுக்கொடுப்பது, கொவிட்19 காலத்தில் நீதிமன்றங்களை இணையத்தளத்தில் எவ்வாறு நடத்தி செல்லுதல், சில உடன்படிக்கைகளை சட்ட ரீதியாக செய்துக்கொள்ள முடியாது போகும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு மேலதிக காலத்தை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட நான்கு காரணிகளின் பிரகாரம்தான் இந்தச் செயற்பாடு இடம்பெற்றது.

மேற்கூறப்பட்ட நான்கு காரணிகளுக்கு அப்பால் இச்சட்டத்தில் வேறு எதுவும் இல்லை. அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும், துன்பங்களை எதிர்கொள்ளும் சாதாரண மக்களுக்கு சலுகையை பெற்றுக்கொடுப்பதே சட்டத்தின் நோக்கமாகும். எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அர்த்தமற்ற கருத்துகளை முன்வைக்கின்றனர். இதுதொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்கள் ஆங்கில மொழியில் மட்டும் அல்லாமல் மூன்று மொழிகளிலும் உள்ளன என்பதை குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கூற விரும்புகிறேன். நீதிமன்றின் தீர்ப்பைதான் ஆங்கிலத்தில் சமர்ப்பித்துள்ளோம். இந்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்த வேண்டுமென்றால் உயர்நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்.

மேற்முறையீடு ஒன்றை 42 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டுமென்பதுதான் சட்டம். ஆனால், கொவிட் தொற்றுக் காரணமாக 42 நாட்களுக்குள் மேன்முறையீடு ஒன்றை மேற்கொள்ள முடியாது போகின்றவர்களுக்கு இந்த வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது சட்டத்தின் முதல் நோக்கமாகும். அதேபோன்று கொவிட் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுபோன நீதிமன்றங்கள் இணையத்தளத்தின் ஊடாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்படுத்திக்கொடுத்தலாகும். இவ்வாறு ஏற்பாடு செய்தமையின் காரணமாக அரசியல் கைதிகளின் விவகாரத்தை இணையத்தளத்தின் ஊடாக கையாள முடிந்தது.

மூன்றாவது காரணியாக வழக்குகள் விசாரணையிலுள்ள நீதிமன்றங்களில் செயற்பாடுகள் இடம்பெறாவிடின் அருகில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்கு சென்று நடவடிக்கைகளை தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்துக்கொடுத்தலாகும். கொவிட் காரணமாக உடன்படிக்கைகளை செய்துக்கொள்ள முடியாது பாரிய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சலுகையை பெற்றுக்கொடுப்பதே நான்காவது காரணியாகும். தெரிவுசெய்யப்பட்ட 35 துறைகளுக்கு இந்த சலுகையை பெற்றுக்கொடுத்துள்ளோம். ஆகவே, கொவிட் – 19 சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோருகிறேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நீதிச் சேவையின் சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே கொவிட் – 19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர்…

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நீதிச் சேவையின் சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே கொவிட் – 19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர்…