Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மாறுதல்களோடு பயணி 

மாறுதல்களோடு பயணி

  • 21

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஒரு பிரிவுக்கப்பால்
அந்த வலியை மறக்க நீ போராடுகிறாய்
உன் கண்ணீரைத் துடைக்க
யாரோ வரலாம் என எதிர்பார்க்கிறாய்

உன் விரல்களைப் பிடித்து நடக்க
உன் புன்னகையைப் பரிமாற
உனக்கொரு தோல் தார
உனக்கொரு துணையை எதிர்பார்க்கிறாய்
தொலைந்து போன அதே நபர்களிடம்

இன்னும் எத்தனை நாளைக்குத் தான்
இப்படியே பொய்யான
புன்னகையோடு வாழப் போகிறாய்…?
உன் காத்திருத்தல் மெல்ல மெல்லதாய்
கரைவதை நீ இன்னும்
உணரத் தொடங்கவில்லை

உன்னை விட்டு தொலைந்தவர்கள்
எப்போதோ உன்னை மறந்தும் இருப்பார்கள்
உன்னைப் பற்றி நினைப்பதற்கு கூட
அவர்களிடத்தில் நேரம்
இல்லாமலும் இருக்கலாம்

இன்னும் எத்தனை காலத்திற்கு தான்
நீ மட்டும் அதே இடத்திலேயே
அதே நபர்களுக்காக
நிற்கப் போகிறாய்….?

உலகம் வெறும் இவ்வளவுதான்….
ஒவ்வொருவரும் மாறிக் கொண்டே போவார்கள்
யாரும் நிலைத்திருப்பதற்கு உத்தரவாதம்
தரப் போவதில்லை

ஆதலால் நீயும் மாறுதல்களோடு
புதிய பாதையை நோக்கி
புதிய கனவுகளோடு தயாராகு

ஏரூர் நிலாத் தோழி

ஒரு பிரிவுக்கப்பால் அந்த வலியை மறக்க நீ போராடுகிறாய் உன் கண்ணீரைத் துடைக்க யாரோ வரலாம் என எதிர்பார்க்கிறாய் உன் விரல்களைப் பிடித்து நடக்க உன் புன்னகையைப் பரிமாற உனக்கொரு தோல் தார உனக்கொரு…

ஒரு பிரிவுக்கப்பால் அந்த வலியை மறக்க நீ போராடுகிறாய் உன் கண்ணீரைத் துடைக்க யாரோ வரலாம் என எதிர்பார்க்கிறாய் உன் விரல்களைப் பிடித்து நடக்க உன் புன்னகையைப் பரிமாற உனக்கொரு தோல் தார உனக்கொரு…

One thought on “மாறுதல்களோடு பயணி

  1. It’s in point of fact a great and useful piece of information. I am happy that you simply shared this useful information with us. Please keep us up to date like this. Thank you for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *