Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முஸ்லிம் தலைமைகள் விட்ட தவறினால் இன்று இனவாதத் தீயை அறுவடை செய்கின்றோம் 

முஸ்லிம் தலைமைகள் விட்ட தவறினால் இன்று இனவாதத் தீயை அறுவடை செய்கின்றோம்

  • 23

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
30 வருட கொடிய யுத்தத்தை முகங்கொடுத்து அதன் அவலத்தை கொண்டு எதிர்கால மனித திட்டங்களை வகுக்காமல் இன்று நாம் இனவாதக் குளத்தில் மூழ்கிக் கொண்டு கடுமையான இழப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இதற்கு பிரதான காரணமாக முஸ்லிம் அரசியல் தலைமை மற்றும் இயக்கங்களின் தலைமையை கூறிவிடலாம்.
முஸ்லிம் அரசியல் தலைமை எனும் போது நாம் பல குழுக்களாக பிரிந்து தனிப்பட்ட தேவைக்கான (கட்சி) தலைவனை தெரிவு செய்துகொண்டமைக்கான விளைவையே இன்று அறுவடை செய்கின்றோம். நாம் விட்ட பெரிய தவறு சமூகத்திற்கு தேவையான ஒரு தலைவரை உருவாக்க தவறியமையாகும். பற்றி எறியும் நெருப்பிலும் எனது கட்சிக்காரன் என்று பெருமை அடையும் முட்டாளகவே நாம் உள்ளோம்.
சமுகத் தலைவன் எனும்போது சமூகத்திற்கு தேவையான நீண்டகால உயர்மட்ட திட்டங்களை  வகுப்பதன் மூலம் எமக்கு தேவையான சமுக உறுதிப்பாட்டை அடையலாம். அரச நிர்வாகம், சுகாதாரத்துறை, விவசாயத்துறை, போக்குவரத்துறை மற்றும் ஏனைய அரசதுறைகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக் குறைந்ததன் விளைவையே நாம் அனுபவிக்கலாயிற்று.
இயக்கங்களின் தலைமைத்துவம் எனும்போது இஸ்லாமிய இயக்கங்களின் போட்டித்தன்மையை இங்கு கூறுகின்றேன். முஸ்லிம் இளைஞர்களின் O.L, A.L, Campus பரீட்சை முடிந்ததும் ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கமும் போட்டி போட்டுக்கொண்டு இளைஞர்களை நெருங்குவதை அவதானிக்கின்றோம். இதனை தவறு என்று கூறவில்லை. மாறாக அதிக போட்டித்தன்மையின் விளைவை எமக்குள் ஏற்பட்ட போட்டித்தன்மையால் போலிக்காரணங்கள் கூறி  ஒருவருக்கு ஒருவர் கைநீட்டி காட்டிக்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இதற்கு பிரதான காரணம் சமுக சூழலில் பன்முகத்தன்மை அறிவற்ற இயக்கங்களின் போட்டித்தன்மையாகும்.
இனியாவது நாம் விற்ற தவறை சரி செய்து அரசியல், பொருளாதார, சமுக மற்றும் இலத்திரனியல் யுகத்தில் உபாய மட்ட (Strategy level)  திட்டங்களை வகுத்து சிறந்த தலைமைத்துவத்தை தெரிவு செய்து நாம் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். நம்நாடு எவ் இனத்திற்கும் தனிமையான சொந்தமான நாடல்ல. இலங்கையருக்குள்ள ஒவ்வொருவரும் தமக்குரிய சம உரிமையுடன் வாழக்கூடிய நாடாகும். தாழ்வு மானப்பாங்கிலிருந்து விடுபட்டு நாம் ஒற்றுமை மூலம் எதிர்காலத்தை வெல்வோம்.
Weligama Amsal Hibishy

30 வருட கொடிய யுத்தத்தை முகங்கொடுத்து அதன் அவலத்தை கொண்டு எதிர்கால மனித திட்டங்களை வகுக்காமல் இன்று நாம் இனவாதக் குளத்தில் மூழ்கிக் கொண்டு கடுமையான இழப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இதற்கு பிரதான காரணமாக…

30 வருட கொடிய யுத்தத்தை முகங்கொடுத்து அதன் அவலத்தை கொண்டு எதிர்கால மனித திட்டங்களை வகுக்காமல் இன்று நாம் இனவாதக் குளத்தில் மூழ்கிக் கொண்டு கடுமையான இழப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இதற்கு பிரதான காரணமாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *