Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வல்லோனே வல்லமை தாராயோ 

வல்லோனே வல்லமை தாராயோ

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இரக்கமற்ற அரக்கர்களினால்
உறக்கம் தொலையும் இரவுகளில்
வருத்தமான நினைவுகளால்
இறுகிப் போனதா உன் இதயம்

துப்பாக்கி வேட்டுக்களுடன்
துர்ப்பாக்கிய உன் நிலைமை
விடியாத இரவுகளுடன்
முடியாமல் தொடர்கதையா

கல்லே ஆயுதமாய்
கரமேந்தும் வாலிபரின்
கல்பின் வீரமது
கரை யெட்டும் நாளெதுவோ

இரும்புத் தொப்பியும்
இறுகப்பற்றிய துப்பாக்கியுமாய்
இஸ்ரேலியப் படைகளின்
இரத்தவேட்டை தொடர்கின்றதோ

சூரியோதயம் தொலைத்து உன் தேசம்
சூன்யமான மாயமென்ன
சூழ்ச்சிகள் பல செய்தே இஸ்ரேல்
சூடிக்கொண்ட நாமம் என்ன

ரோஜாவின் அழகு கொண்ட
மென்சிட்டு ராஜாக்கள்
தெருவோரப் புழுதியிலே
புரண்டு விழும் நியாயம் என்ன

நேச நாடுகள் இருந்துமென்ன
வேசம்தான் எல்லாமே
நாசம் நடக்கின்ற போதும் அந்த
தேசம் பார்க்காத கண்களும் ஏனோ

எல்லாம் வல்ல
அல்லாஹ்விடம் கேட்கின்றோம்
பிராத்தனைகளில்
உங்களை இணைக்கின்றோம்
வல்லமை தந்து விடட்டும்
வல்ல ரஹ்மான்.

மக்கொனையூராள்

இரக்கமற்ற அரக்கர்களினால் உறக்கம் தொலையும் இரவுகளில் வருத்தமான நினைவுகளால் இறுகிப் போனதா உன் இதயம் துப்பாக்கி வேட்டுக்களுடன் துர்ப்பாக்கிய உன் நிலைமை விடியாத இரவுகளுடன் முடியாமல் தொடர்கதையா கல்லே ஆயுதமாய் கரமேந்தும் வாலிபரின் கல்பின்…

இரக்கமற்ற அரக்கர்களினால் உறக்கம் தொலையும் இரவுகளில் வருத்தமான நினைவுகளால் இறுகிப் போனதா உன் இதயம் துப்பாக்கி வேட்டுக்களுடன் துர்ப்பாக்கிய உன் நிலைமை விடியாத இரவுகளுடன் முடியாமல் தொடர்கதையா கல்லே ஆயுதமாய் கரமேந்தும் வாலிபரின் கல்பின்…