இலங்கைக்கு சீனா கொடுத்த பல்லாயிரம் கோடி கடன்: ஆதிக்கம் செலுத்தவா? உதவி செய்யவா?

சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவொன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இலங்கையின் கோரிக்கைக்கு அமையவே இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ள அதே வேளையில், வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தவே கடன் வாங்கப்பட்டுள்ளது என்று …

ஆப்கான் குறித்து அலெக்ஸாண்டரின் அனுபவம்

சுமார் 20 வருடங்களாக நீடித்து வந்த யுத்தத்தின் பின் அமெரிக்கா செப்டம்பர் 11ம் திகதிக்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்த தனது படைகளை முற்றாக விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றது. இதன் தொடராக தாலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணத் தலைநகரங்களை கைப்பற்றி தமது கட்டப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வந்த நிலையில் அவர்கள் தற்போது தலைநகர் காபூலையும் கைப்பற்றி ஜனாதிபதி மாளிகையையும் தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டனர். ஆப்கானிஸ்தான் …

தலிபான் ஆட்சி எவ்வாறு அமையும்?

எம்.எஸ்.எம். ஐயூப் தலிபான் கிளர்ச்சிக் குழுவினர், திங்கட்கிழமை (17) முழு ஆப்கானிஸ்தானையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தூர பிரதேசங்களில், வேறு சில குழுக்கள் செயற்பட்டு வந்த போதிலும், அது, தலிபான்களின் நிர்வாகத்தை எவ்வகையிலும் இப்போதைக்குப் பாதிக்கப் போவதில்லை. தலிபான்கள், இவ்வளவு விரைவாக முழு நாட்டையும் கைப்பற்றிக் கொள்வார்கள் என, அமெரிக்கத் தலைவர்கள் நினைக்கவில்லை போலும்! கடந்த புதன்கிழமை (11) ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்த கருத்துகளால் அது விளங்குகிறது. அவர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, …

ரிஷாத்தை தொடரும் அரசியல் நெருக்கடிகள்

எம்.எஸ்.தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இலங்கையில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்கொள்ளாத நெருடிக்கடியில் உள்ளார். இவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியானது அரசியல் பின்னணியைக் கொண்டதாகும். முஸ்லிம் காங்கிரஸிற்கு பலத்த போட்டிக் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வளர்ந்து கொண்டு வந்த நிலையில், ரிஷாத் பதியுதீன் ஆட்சியாளர்களை தீர்மானிக்கின்றதொரு அரசியல் சக்தியாகவும் மாற்றமடைந்தார். ரிஷாத் பதியுதீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை பௌத்த மதம் சார்ந்த கடும்போக்காளர்கள் முன்வைத்திருந்தார்கள். …

போலந்து கல்வி முறைமை

ஒவ்வொரு காலகட்டத்தின் தேவைக்கேற்ப கல்வியின் நோக்கம் மாறிக்கொண்டே செல்கின்றது ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் கல்வியின் நிலை மிக மோசமான நிலையிலுள்ளது. கல்வியினுடைய உண்மையான நோக்கம் நம்பிக்கை ஊட்டுவது, சக மனிதன் மீதான பிரியத்தை தருவது, சமூகத்தில் பிரச்சினை நடக்கின்ற பொழுது எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை தரவேண்டும். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற உத்வேகத்தை தரவேண்டும். இப்படி இருக்க தற்போதைய கல்வி முறைமை எமக்கு இவற்றையா சொல்லித் தருகின்றது? பாடசாலை சமூகமும் …

மல்கம் ரஞ்சித் ஆண்டகை எழுப்பிய கேள்விகள் குறித்து முஸ்லிம் சமூகம் அக்கறை கொண்டுள்ளது

மல்கம் ரஞ்சித் ஆண்டகை எழுப்பிய கேள்விகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி மேலதிக அமைச்சரவையை கூட்டத்திற்கு அழைக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை (13.08.2021) உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் செயல்முறை சந்தேகத்திற்கிடமான விதத்தில் கையாளப்பட்டதாக தனது அச்சத்தையும் அதிருப்தியையும் மீண்டும் வலியுறுத்தினார். பொறுப்புக்கூறல் விதிமுறைகளுக்கு எதிராக ஆளும் கட்சியிலிருந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு …

இருத்தலுக்கான போட்டிகளுக்குள் மருத்துவத்துறையும் மாட்டிக்கொள்ளுமா?

சுஐப் எம்.காசிம் மருத்துவ உலகம் மதங்களின் மடியில் விழுந்து மன்றாடுமளவுக்கு கொரோனாவின் கொடூரம் தலைவிரித்தாடும் சூழலிது. அதற்காக மதங்களால் இந்தக் கொரோனாவை முடிக்க முடியும் என்ற முடிவுக்கு வர முடியாதுதான். முயன்று முடியாமல் போனால், ஆண்டவனின் தலையில் கட்டிவிட்டு நாம் ஆறுதலாக இருப்பதில்லையா? அப்படித்தானிது. எப்படியும் ஒழித்து விடுவோம் என்று வரிந்துகட்டி நின்ற விஞ்ஞானம், ஏற்கனவே அது வழங்கியிருந்த கால எல்லையையும் விஞ்சி நிற்கிறது இந்தக் கொரோனா. இனி எஞ்சப்போவது எதுவென்ற அச்சத்துடன் அஞ்சும் நிலைக்கு இதன் …

மக்களின் பசியோடு விளையாடும் ராஜபக்‌ஷர்கள்

புருஜோத்தமன் தங்கமயில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பழைய காணொளியொன்று, சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு, மூன்று நாள்களாகப் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில், “நாட்டு மக்களுக்கு சமையல் எரிவாயுவைக் கிரமமாக வழங்க முடியாத நல்லாட்சி அரசாங்கத்தினர், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவார்கள்?” என்று கேள்வியெழுப்புகின்றார். நல்லாட்சிக் காலத்தில், எதிரணி வரிசையில் இருந்த ராஜபக்‌ஷ(ர்கள்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்த தருணத்தில், ஆற்றப்பட்ட உரையின் காணொளி அது. அந்த உரை நிகழ்த்தப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளேயே, …

போராட்டங்களும் ஏமாற்றங்களும்

எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் நடைபெறும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும் போது, நாட்டை ஆள்வது ராஜபக்‌ஷர்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில், முன்னைய ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில், ஆர்ப்பாட்டங்கள் மிகக் கொடூரமாக அடக்கப்பட்ட போதிலும், இப்போது அந்தளவு கடுமையாக அடக்கப்படுவதில்லை. தெற்கே அதிபர்களும் ஆசிரியர்களும் ஆரம்பித்த போராட்டம், தற்போது வடபகுதிக்கும் பரவியுள்ளது. தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகவும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்த 2005 முதல் 2014 வரையிலான கால கட்டத்தில், பல …

ஒன்லைனில் திரு­மண ஒப்­பந்தம் செய்­ய­லாமா?

தற்­போது உல­க­ளா­விய ரீதியில் தொடர்ந்தும் ஏற்­பட்­டி­ருக்­கின்ற சிக்கல் நிலை கார­ண­மாக வெளி­நா­டு­களில் பணி­பு­ரி­கின்­ற­வர்கள் சொந்த நாடு­க­ளுக்கு திரும்­பு­வதில் நடை­முறைச் சிக்கல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக திரு­மணம் முடிப்­ப­தற்கு உத்­தே­சித்­தி­ருக்­கின்ற இளை­ஞர்கள் தமது நாட்­டிற்கு வந்து திரு­மணம் முடிக்க முடி­யாத அவல நிலை தோன்­றி­யுள்­ளது. அதனால் நவீன இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் மூலம் திரு­மண ஒப்­பந்­தங்­களை நடாத்த முடி­யுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. திரு­மணம் என­பது இறைத் தூதர்­க­ளது வழி­காட்­டல்­களில் ஒன்­றாகும். அதற்­கான நெறி­மு­றைகள் மற்றும் விதிகள் என­பன தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. …

ரிஷாட்டின் பாராளுமன்ற உரை – தொனித்த இரு விடயங்கள்

மொஹமட் பாதுஷா பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது முன்வைத்துக் கூறிய விடயங்கள், இரண்டு விதத்தில் முக்கியமானவை. ஒன்று, அவரது வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில், மரணித்த ஹிசாலினி தொடர்பாக, தன்பக்க நியாயங்களை முன்வைத்திருந்தார். இரண்டாவது, பயங்கரவாதத் …

சாணக்கிய தலைவர்களே வருங்கால முஸ்லிம் சமூகத்தை நாட்டில் வாழவிடுங்கள்

பேருவளை ஹில்மி இலங்கையின் அரசியலை பொருத்தவரை ஆரம்ப காலந்தொடக்கம் இந்த நாட்டில் பல்வேறுபட்ட சமூக மக்களுடன் ஒன்றிணைந்து அரசியல் விடயங்களில், தேசிய அரசியலில் கலந்து, அரசியல் செய்யும் ஒற்றுமையான ஒரு வழி முறையே காணப்பட்டது. நம் நாட்டைப் பொறுத்தவரையில், பல்வேறுபட்ட பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்ற வகையில், அவ்வப்போது சிறு சிறு கலவரங்கள் ஏற்படவே செய்தது, இருந்தாலும் இந்த நாட்டைப் பொறுத்தவரை முஸ்லிம்களுக்கு என, தனியான அரசியல் கட்சி அமைத்து, உரிமைகளுக்காக போராட வேண்டிய …

நடிக்காதீர்கள்: நடித்தாலும் அந்நடிப்பிற்கு தங்கமுலாம் பூசதீர்கள்

வை எல் எஸ் ஹமீட் கடந்த தேர்தலில் தனித்துவக்கட்சிகளில் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளும் (தமது தலைவர்களை விடுத்து) அரசுடன்தான் இருக்கிறார்கள். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகை: அவர்கள் அரசை ஆதரிப்பது சரியா? பிழையா? என்பது வேறுவிடயம். ஆனால் நேர்மையாக இதற்காகத்தான் நான் அரசை ஆதரிக்கிறேன்; என்று கூறிவிடுகிறார்கள். உதாரணமாக, எனக்கு ராஜாங்க அமைச்சுப்பதவி தருவதாக வாக்களித்திருக்கிறார்கள். அதனால் ஆதரவளிக்கிறேன். எனக்கூறுவது. இவர்களை ஓரளவு ஜீரணிக்கலாம். ஏனெனில் இவர்கள் செய்வது சரியோ! பிழையோ! தமது உள்ளத்தில் …

ஆசிரியர் போராட்டம் நியாயமானது ஆனால் பொருத்தமற்றது

பஸீம் இப்னு ரஸுல் அண்மைக்காலமாக இலங்கையில் போராட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் பஞ்சமில்லை.. இதில் கடந்த சில வாரங்களாக நம் அறிவுப் பொக்கிஷங்களான அதிபர் ஆசிரியர்களின் போராட்டங்களும் அடங்கும். உண்மையிலே ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. என்றாலும் ஒரு நடுநிலையாக சிந்திப்பவன் என்ற அடிப்படையில் சில விடயங்களை அன்பின் ஆசிரியர்களோடும் சில முகநூல் போராளிகளோடும் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இந்த பிரச்சினை தொடர்பாக நான் சற்று அதிகமாகவே அலசினேன். அமைதி காத்து தக்க சான்றுகளுடன் ஆதாரங்களை கைவசம் …

கொழும்பில் உள்ள மதிப்புமிக்க பண்டைய கட்டிடங்களுக்கு என்ன நடக்கும்?

இது என்ன செலாண்டியா? கொழும்பில் உள்ள மதிப்புமிக்க அரசாங்க நிலத்தை சீனா உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் இந்த நாள்களில் அதிக விவாதத்திற்கு உட்பட்டவை. கொழும்பு துறைமுக நகருக்கு அருகில் உள்ள இந்த மதிப்புமிக்க நிலங்கள் சீனாவுக்கு விற்கப்படுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த நிலங்களில் சில மற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஐந்து ஹெக்டேயர் நிலத்தை தெற்கு சர்வதேச கொள்கலன் முனையமாக …

இரண்டாவது பதவிக்காலத்துக்கு தயாராகும் கோட்டாபய

ஆர்.ஹரிஹரன் ‘நரகத்துக்கான பாதை நன்னோக்கத்துடனேயே வகுக்கப்படுகிறது’ என்ற மணிகொழி கோட்டாபய அரசாங்கம் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதாக உரிமை கோரிக்கொள்கின்ற போதிலும், அதன் மோசமான செயற்பாடுகளுக்கு பிரயோகிக்கப்படக் கூடியதாகும். ‘செயல்வீரர்’ என்றும் (புலிகள் இயக்கத்தை ஒழித்தமைக்காக)’ ஒழித்துக்கட்டுபவர்’ என்றும் புகழப்படுகின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலுக்கு முன்னதாக அவர் உறுதியளித்த ‘சுபீட்சமும் சீர்மையும் கொண்ட எதிர்காலத்தை’ நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதில் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார். ‘ஒழித்துக்கட்டுபவரின்’ முயற்சிகளில் பெருமளவானவற்றை தற்போது தொடருகின்ற கொவிட்-19 பெருந்தொற்று பாதித்துவிட்டது என்பது வெளிப்படையானது. இடையறாது …

வேதனையுடன் பகிர்கிறேன்.

ராகம வைத்தியசாலை, குருநாகல் வைத்தியசாலை, கராபிடிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை, கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை இன்னும் பல பிரதேச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு கட்டில் வசதி விட்டு கதிரை வசதி கூட இல்லை. நாமோ சிறுபிள்ளைத்தனமாக டொபிக்கும் அங்கர் பால்பக்கட்டுக்கும் மீம் செய்து பதிவிடுகிறோம். வேடிக்கை சமூகம். நாடு பூராகவும் பல உயிர்கள் கண்முன் துடிப்பதை கண்டும் காண்களிலும் வீடுகளிலும் சடலமாகவது தெரிந்தும் இன்னும் அற்ப இன்பங்களுக்கு ஆசைப்படும் அலட்சியமான சமூகம். இனியாவது சற்று சமூக …

முஸ்­லிம்­களை தலை­கு­னியச் செய்யும் பிர­தி­நி­தி­கள்

பேராசிரியர் ம்.எஸ்.எம். ஜலால்தீன் முன்னாள் பீடாதிபதி, தெ.கி. பல்கலைக்கழகம் இலங்கை ஆட்சி மன்றம், பாரா­ளு­மன்றம், அமைச்­ச­ரவை என்­பது முஸ்­லிம்­க­ளுக்கு புதிய விட­ய­மல்ல. இலங்­கையின் ஆட்­சி­மன்­றத்தில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் என்­பது இலங்­கையின் சுதந்­தி­ரத்­துக்கு முன்­பி­ருந்தே ஆரம்­ப­மா­கின்­றது. எம்.ஸி. அப்­துர்­ரஹ்மான் என்­பவர் 1889ஆம் ஆண்டில் இலங்­கையின் ஆட்சி மன்­றத்தில் (Legislative Council) முஸ்­லிம்­களின் ஏக­பி­ர­தி­நி­தி­யாக நிய­மனம் பெற்­ற­தி­லி­ருந்தே முஸ்­லிம்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான பிர­தி­நி­தித்­துவம் வர­லாற்றில் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றது. 1833ஆம் ஆண்­டி­லேயே சட்­ட­வாக்க சபை (Legislative Council) உரு­வாக்­கப்­பட்ட போதும் கூட, …

ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஸுஹதாக்கள் தினம்

ஏ.எல்.ஜுனைதீன் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 31 வருடங்களுக்கு முன்னர் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கொடூர தாக்குதல் சம்பவம் 3 ஆம் திகதி நினைவு கூறப்படுகின்றது. 1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் இரவு நேரம் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் …

முஸ்லிம் சமூகத்தின் நன்மதிப்பை இழக்கச் செய்யும் முஸ்லிம் கட்சிகள்

பேருவளை ஹில்மி இன்றைய அநியாயங்களுக்கும், சிறுபான்மை இனத்தின் உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கவும், வழி செய்த 20ஆம் திருத்தச் சட்டமூலம் சம்பந்தமாக கடந்த காலங்களில், முஸ்லிம் கட்சிகள் சம்பந்தமாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதி நேரத்தில் இது சம்பந்தமாக முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் இதை கைக்கொண்ட விதம் முஸ்லிம் சமூகத்தை அன்னிய சமூகங்களிடையே அரசியலில் ஒரு கேவலமான நிலைக்கு தள்ளியது. கடந்த 20 ஆம் திருத்தச் சட்ட மூலத்திற்கு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆதரவாக வாக்களித்த போது இதில் …

தலைவர்கள் சமூகத்தைக் கேவலப்படுத்த வேண்டாம்

வை எல் எஸ் ஹமீட் இந்நாட்டில் முஸ்லிம்கள் கௌவரமாக வாழ்ந்த ஒரு சமூகம். இன்று ஏளனமாகப் பார்க்கப்படுகின்ற, எள்ளிநகையாடப்படுகின்ற ஒரு சமூகமாக மாறியிருக்கிறது. அண்மையில் கம்மன்பில கூட, சில முஸ்லிம் தலைவர்களை அற்பப்பதர் போன்று தூக்கியெறிந்து பேசினார். இவர்கள் இவ்வாறு பேசுவது இதுதான் முதல் தடவையல்ல. இதற்கு முன்பும் இவ்வாறு கேவலப்படுத்திப்பேசிய நிகழ்வுகள் எத்தனையோ! முஸ்லிம் தலைவர்களை இவ்வாறு தூக்கியெறிந்து பேசுவதுபோல் தமிழ்த்தலைவர்களையோ, மலையகத் தலைவர்களையோ பேசமாட்டார்கள். அத்தலைவர்களும் தனித்துவ அரசியல்தான் செய்கிறார்கள். இவ்வாறு சமூகமும் தலைமைகளும் …

வவுனியா பல்க​லைக்கழகத்தில் நாட்டின் அபிவிருத்திக்கு பொருத்தமான பீடங்களை ஆரம்பிப்பதே திட்டம்

நேர்கண்டவர்: பாலநாதன் சதீஸ் வவுனியா  பல்கக்கான கல்வியை மென்மேலும்  மேம்படுத்துவதுடன் இங்கே  அனைத்து மதத்தவர்கள்  இனத்தவர்கள்  இருப்பதனால்  பல கலாச்சாரம் உள்ள பல்கலைக்கழகமாகவும்  அனைத்து  இனங்களையும்  கௌரவிக்கும் பல்கலைக்கழகமாகத்தான்  திகழும் என துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்வு – அதிவிசேட வர்த்தமானி வௌியீடு ஜனாதிபதி  கோட்டபாய  ராஜபக்‌ஷவினால்  வவுனியா  பல்கலைக்கழகத்திற்கு முதலாவது  துணைவேந்தராக  நியமிக்கப்பட்டுள்ள  கலாநிதி ரி.மங்களேஸ்வரன்  தினகரன்  பத்திரிகைக்கு  வழங்கிய  விஷேட  செவ்வியின் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.  புதிதாக  …

அந்தக் குண்டுதான் அலி உதுமான் சேரின் உயிரைக் குடித்தது

Siraj Mashoor ஓகஸ்ட் முதலாம் திகதி,  ஒரு பாரம் நெஞ்சை அழுத்திக் கொண்டே இருக்கும்; கண்கள் கசியும். ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் அலி உதுமான் சேரின் நினைவுகளைக் கடந்து செல்ல முடிவதில்லை. வட மாகாண மீன் வளத்தை சுரண்டும் தென்னிலங்கை மீனவர்கள் இந்த நாளில்தான் ஒரு துரோகியின் துப்பாக்கி ரவை, அவரது மூச்சை நிறுத்தியது. எங்களது வகுப்பிற்கு உயரமான ஒரு மனிதர் ஆங்கிலப் பாட ஆசிரியராக வந்தார். மெலிந்த தோற்றம் கொண்ட அவர் வகுப்பறையைக் கலகலப்பாகினார். …

வட மாகாண மீன் வளத்தை சுரண்டும் தென்னிலங்கை மீனவர்கள்

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு, நாயாறுப் பகுதி இயற்கை வளங்கள் நிறைந்ததாகும். குறிப்பாக, கடல் வளம், கடல் நீரேரி என்பன ஒருங்கே இணைந்த பகுதியாகக் காணப்படுகின்றது. குறிப்பாக, பெருங்கடலில் பாரம்பரிய கரைவலை, உள்ளிட்ட மீன்பிடித் தொழில் நடவடிக்கைகளில் நாயாற்றைப் பாரம்பரிய வாழ்விடமாகக் கொண்ட தமிழ் மக்கள் ஈடுபடுவதுடன், கடல் நீரேரியில் தூண்டில் தொழில், நண்டுபிடித்தல், வீச்சுத்தொழில் உள்ளிட்ட தொழில் நடவடிகைகளிலும் அவர்கள் ஈடுபட்டு, தன்னிறைவாகவும் நிம்மதியாகவும் தமது அன்றாட வாழ்வை  நகர்த்திச் சென்றிருந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் நீரேரிகளை …

வடக்கு செயலாளர் நியமனமும் ராஜபக்‌ஷர்களின் திட்டமும்

புருஜோத்தமன் தங்கமயில் வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக சமன் பந்துலசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே, வவுனியா மாவட்டத்தின் செயலாளராகப் பதவி வகித்தவர். ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக, முன்னாள் படைத்துறை அதிகாரிகளை நியமிப்பது வழக்கம். ஏற்கெனவே, ஜி.ஏ. சந்திரசிறி வடக்கு ஆளுநராக ஆறு வருடங்கள் அளவில் பதவி வகித்திருக்கின்றார். அப்படிப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலோடு, ராஜபக்‌ஷர்களின் மீள் வருகையின் போது, வடக்கு ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் …