University College

 • 2

இலங்கையில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி விபரம் உயர் கல்வி தொடரவிருக்கும் மாணவர்களுக்கு

 • பரவலாக தெரிந்த இந்த பெயர்தான் என்ன?
 • இது ஒரு கல்வி கூடம் என்று தெரிந்த பலருக்கு எப்படியான கல்வி வழங்கப்படுகிறது என்ற அறிவு உள்ளதா?
 • இதன் பெறுமதிதான் என்ன?
 • இது ஏன் மக்களிடம் பரவலாக செல்லவில்லை? அவர்களது அறியாமையின் காரணம் என்ன?
 • மூன்று வருடத்தில் எவ்வாறு Higher National Diploma சான்றிதலை எமக்கு தருகிறது?

பதில் தறுகிறேன் ஆரம்ப கட்டமைப்பிலேயே தொடங்குகிறது இதன் பிரச்சனை “University College ” இந்த வார்தை பெறும்பாலானோர் அறிந்திறுப்பார்கள் “ஒரு தொழிநுட்ப கல்லூரி” என்றும், வேறு Private Institution என்றும் ஏனெனில் இதன் முடிவு இரண்டு பெயர் சேர்ந்து என்று இருப்பதனால் என்னவோ ஆனால் அதன் உண்மையான தெளிவான விளக்கத்தை தருகிறேன்.

“University College ” என்பது University vocational Technology (Univotec) இதன் கீழ் இயங்கும் ஒரு Higher National Diploma சான்றிதலை மூன்று வருட பூர்த்தியின் பின்னர் வழங்குகிறது. எதிர்காலத்தில் Degree வழங்கவும் உயர் கல்வி அமைச்சு அனுமதி கொடுக்க உள்ளது. ஆம் இது ஒரு பல்கலைகழக கல்லூரி. அதுவும் இலங்கைக்கு என்றே உரித்தான அதிகளவான தொழிநுட்ப பாடங்கள், முகாமைத்துவ பாடங்கள் எல்லாம் உள்ளடங்கிய ஒரு பல்கலைகழக கல்லூரி என்பதில் மிகையாகாது. அனைத்து பல்கலைகழகங்களை போன்று இல்லாமல் ஒரு சில வசதிகள் குறைந்த அரசாங்கத்தினுடைய பல்கலைகழகம் தான் இது. இதன் புகழ், பெறுமதி தெரியாமல் இருக்க காரணம் இதன் குறைகள் இல்லை. இதன் தனித்துவமே தலையான காரணம். அவற்றை வரிசைப்படுத்துகிறேன் பாருங்கள்.

 1. இது அமைந்திருப்பது தனி அமைச்சின் கீழ் (Ministry of Skill development and Vocational training) என்ற தனித்துவம் வாய்ந்த , வேறு பல்கலைகழகங்கள் உள்வாங்கப்படாத தனியானதொரு அமைச்சின் கீழ் இருப்பதானால் இதன் பெறுமதி மக்களிடம் சேரவில்லை என்பது மிக முக்கியமானதொரு விடயமாகும்.
 2. இந்த பல்கலைகழக பட்டமானது (Higher National Diploma ) மற்றைய உயர் கல்வி நிலையங்களில் விட முற்றிலும் மாறுபட்டதொரு Higher National Diploma வாக உள்ளது என்பதும் இதன் பெயர் தெரியாதிருக்க காரணமாகும். எதிர்காலத்தில் Degree வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 3. இது அனேகமானவர்களால் ஒரு பல்கலைகழகம் என தெரியாமல் போக காரணம் இங்கு A/L எனும் Advance Level மாணவர்களை உள்வாங்குவதுடன் NVQ 4 (Diploma – National Vocational Qualification) முடித்த மாணவர்களையும் இது உள்வாங்குவதனாலேயே இது ஒரு பல்கலைகழகம் என்ற உண்மைதன்மை மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு தடையாக அமைகிறது.

காரணம் “மக்களின் அறியாமை , எம்நாட்டின் வழக்கம்” A/level இல் சிறந்த பெறுபேறுகளை பெற்ற பெற்றவர்களால் மாத்திரம்தான் பல்கலைகழகம் செல்ல முடியும் என்ற அறியாமையே முதல். இந்த அறியாமையில் இருந்த நீங்க முயற்சி செய்ய வேண்டும். A/L மூன்று பாட சித்தி கொண்ட அனைத்து பிரிவு ( All Stream ) மாணவர்களுக்கும் கல்வி பயில்வதற்கு வாய்ப்புகளை வழங்குகிறது. A/level எனும் கல்விதரத்தில் மூன்று பாட சித்தி கொண்ட மாணவர்கள் இவ் கற்கை நெறிக்கு விண்ணப்பித்து பூர்த்தி செய்ய முடியும் என்பது யாவரும் அறிந்திடாத உண்மையாகும்.

அப்படிப்பட்ட திறமையானவர்களுக்காக ஆரம்பித்த பல்கலைகழக கல்லூரி Advance level (குறைந்த கல்வி தகமை A/L மூன்று பாட சித்தி ) மாணவர்களுடன் NVQ 4 மாணவர்களையும் உள்வாங்குகிறது என்பது சந்தோசமானதொரு விடயமாகும்.

அதுமட்டுமல்ல இக் கற்கை நெறிகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு Univotec இன் கீழ் இயங்கும் இவ் பல்கலைக்கழக கல்லூரியானது இலங்கையின் ஆறு இடங்களில் பின்வரும் கல்வியை வழங்குகிறது.

கற்கை நெறிகள்

 1. Mechatronics Technology
 2. Manufacturing Technology
 3. Building Services Technology
 4. Construction Technology
 5. Automobile Technology
 6. Drafting Technology
 7. Electrical Technology
 8. Electronic Technology
 9. Farm Machinery Technology
 10. Fashion Design Technology
 11. Food Technology
 12. Post Harvest Technology
 13. Production Technology
 14. Television Post Production Technology
 15. Television Programme Production Technology
 16. Telecommunication Technology
 17. Refirigrational & Air conditioning Technology
 18. Quantify Surveying
 19. Travel and Tour Management
 20. Hospitality Management
 21. Maritime and Logistics Management
 22. Event Management
 23. Cosmetology

எனும் கற்கைநெறிகளாகும். ஏனைய கற்கைநெறிகள் முற்றிலும் வித்தியாசமான பெயர்களுடன் உலக சந்தைக்கு ஏற்ப பெறுமதிவாய்ந்த கற்கைநெறிகளை கொண்ட இது பல சிறப்புகளை கொண்ட பல்கலைகழக கல்லூரி என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை.

University of vocational technology கீழ் இயங்கும் University College உங்கள் பாசையில் Technical College.

பல்கலைகழக கல்லூரியானது 3 மூன்று வருட கல்வியில் ஒரு வருட பூர்த்தியின் பிற்பாடு (NVQ 5 முடிந்ததும் ) 6 மாதங்கள் வரை Training கட்டாயம் செல்ல வேண்டும் பின்னர் மீண்டும் NVQ 6 கல்வி நடவடிக்கையை தொடர்ந்து NVQ 6 கல்வி நடவடிக்கை முடித்ததன் பிற்பாடு 3 மாதங்கள் Training செல்ல வேண்டும். அதன் பிற்பாடு Higher National Diploma Convocation நடைபெற்று சான்றிதல் உடனே குறுகிய காலத்திலேயே வழங்கப்படும்.

இவ்வளவு சிறப்புக்கள் இருந்தும் இது ஏன் மக்களிடம் போய் சேரவில்லை எனும் கேள்வி உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் அதிக தடவைகள் எழுந்துள்ளது. காரணம்

அறகுறையாக இதை தெரிந்து கொண்டு மக்களிடம் சரியான உண்மையை கொண்டு போய் சேர்க்க தவறிய கல்வி ஜீவன்கள்.

இது பற்றிய அடிப்படை அறிமுகமும் அறிவும் இல்லாத புகழ்வாய்ந்த பாடசாலைகள்.

இது ஆரம்பித்து தற்போதுதான் 4 ஆவது ஆண்டை பூர்த்தி செய்த புதியதொரு பல்கலைகழகம் என்பதனால்

இது அமைந்துள்ள இடங்கள் UGC இன் கீழ் இயங்கும் பல்கலைகழகங்கள் அமைந்துள்ள இடப்பரப்பில் இருப்பதனால் இதை தனித்துவப்படுத்துவது சிரமமாக இருப்பதனால்.

இப்படிப்பட்ட ஒரு பல்கலைகழக கல்லூரி இலங்கையில் 6 இடங்களில் இருப்பது இதை வாசிக்கும் போதுதான் சிலர் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். எனவே நாமும் எமது சமூகத்தில் பட்டதாரிகளினது எண்ணிக்கையை அதிகரிக்க இச்செய்தியினை அதிகம் அதிகம் பகிருவோம். பலரது வாழ்கை ? கேள்விக்குறியாக அமைய எம் சமூகத்தின் அறியாமை மிக மிக முக்கியமானதொரு காரணமாக இருப்பதனால் இதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.

வேறு ஏதாவது தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் :
சவ்பாத்
+94776660984
நன்றி

இலங்கையில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி விபரம் உயர் கல்வி தொடரவிருக்கும் மாணவர்களுக்கு பரவலாக தெரிந்த இந்த பெயர்தான் என்ன? இது ஒரு கல்வி கூடம் என்று தெரிந்த பலருக்கு எப்படியான கல்வி வழங்கப்படுகிறது என்ற…

இலங்கையில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி விபரம் உயர் கல்வி தொடரவிருக்கும் மாணவர்களுக்கு பரவலாக தெரிந்த இந்த பெயர்தான் என்ன? இது ஒரு கல்வி கூடம் என்று தெரிந்த பலருக்கு எப்படியான கல்வி வழங்கப்படுகிறது என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: