குரங்கு மனசு பாகம் 43

  • 8

“ஹபி உம்மாக்கிட்ட டீ போட சொல்லவா?”

“ஓகே பேபி, நான் வொஷ் ரூம் போய் வாரன். ஏன்ட புள்ள ரெடி ஆவி இரியுங்க, டாக்டர் கிட்ட போய் வந்துடலாம்.”

“ஹ்ம்ம் ஓகே ஹபி”

கணவனின் மார்பிலிருந்து எழுந்தவள், தாயிடம் தன்னவனுக்காக தேநீர் தயார் பண்ணச் சொல்லி விட்டு, தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள மும்முரமானாள்.

“சர்மி”

“என்னம்மா?”

“இங்க கொஞ்சம் வாங்களே புள்ள..”

“என்னம்மா சொல்லுங்க.”

“அதுவந்து புள்ள உன்கிட்ட பிரக்னன்சி டெஸ்ட் ஸ்ட்ரிப் இருக்கல்ல, டாக்டர் கிட்ட போவ முன்னால என்ன ஏதுன்னு சும்மா ஒரு வாட்டி பாத்துக இருந்திச்சே..

நானும் அதத்தான் நெனச்சன்மா, இரியுங்க எடுத்துட்டு வாரன்.” மகள் நடைகட்ட ஆர்வமாய் காத்திருந்தாள் ராபியா.

அறைக்குச் சென்ற சர்மி, அலுமாரியின் மேல் வைத்திருந்த டெஸ்ட் கார்ட்டை எடுத்து வந்தவள் பரிசோதிக்க முனைந்தாள்.

“உம்மா யூரின் எடுத்துட்டன், என்னான்டு பாக்கனும், பயமா இருக்கும்மா…”

“இதுல பயப்பட என்ன இருக்கு சர்மி? எதுவா இருந்தாலும் நல்லதுக்கு தான். இனி உன் வாழ்க்கையில உனக்கு எல்லாமே சந்தோஷமாத் தான் அமையும் புள்ள. சும்மா இல்லாம என்னான்டு பாருங்க” சரி என்று புன்னகையோடு தலையாட்டியவள் நினைத்தது நடந்து விட்டது.

“ஆம் சர்மி தாயாகப் போகிறாள்.” அவளது உள்ளம் ஆனந்தத்தால் நிறைந்து போக, மகளை கட்டியணைத்து வாழ்த்துச் சொன்னாள் ராபியா.

“சர்மி ரெடி ஆவிட்டீங்களா?”

அதற்குள் அறையில் இருந்து அதீக் கூவவே, தன்னவனை சந்தோஷப் படுத்தும் அவாவில் அறை நோக்கி விரைந்தாள் சர்மி. அங்கு மனைவியை வைத்தியரிம் கூட்டிச் செல்லும் பரபரப்பில் தயாராகிக் கொண்டிருந்தவன் பின்னால் சென்று நிற்க,

“என்னடா கண்ணு? இன்னம் ரெடி ஆவல்லயா?” பதிலுக்கு புன்னகைத்தாள் சர்மி.

“என்னம்மா சர்மி?”

“ஹபி இங்காள திரும்புங்களே கொஞ்சம்…”

“ஹ்ம்ம் சொல்லுங்கடா..” மனைவிக்கு நேராக முகத்தை திருப்பியவன் அவள் மலர்ந்த வதனம் கண்டு குளிர்ந்து போனான்.

“என் சர்மியோட பேஸ்(face) ல எப்பவும் இந்த சந்தோஷத்த மட்டும் தான் பார்க்கனும்” மனைவியின் கன்னத்தை மெதுவாய் வருட, கணவனின் கைகளைப் பிடித்து வயிற்றில் வைத்தாள்.

“ஹே என்னடா?”

“உங்க உயிர் என் வயித்துக்கு வந்துட்டு.”

“என்னா? என்ன சொல்ற சர்மி?”

“ஏன்ட புருஷா..! இன்னமுமா புரியல்ல, நீங்க வாப்பாவாகப் போறீங்க..”

“நா… நான் வாப்பா ஆவப் போறனா?” வார்த்தைகள் தடுமாற மனைவியின் வயிற்றை ஆசையாய் தடவிக் கொண்டான்.

“ஓம் ஹபி”

“வாவ் வாவ் வாவ், என்னால நம்ப முடியல்ல, ரியலி ஐ யம் சோ ஹெபி”

ஆனந்த உச்சத்தில் துள்ளிக் குதித்தவன், மனைவியை தூக்கி எடுத்து கட்டிலில் சாய்த்து நிறைய முத்தங்களால் அவள் வயிற்றை நனைத்தான். கணவனின் சந்தோஷம் கண்டு பூரித்துப் போன சர்மி அவன் தலையை வருடி விட, அப்படியே நிமிர்ந்து ஆசையோடு மனைவிக்கு நன்றி சொல்லி முத்தம் கொடுத்தான்.

“ஏன்ட சர்மி பேபி இனி ரொம்ப கவனமா இருக்கனும், ஓகேயாடா?”

“ஓகே ஹபி”

மீண்டும் மனைவியை வாரியணைத்துக் கொண்டவன், தன்னவள் வயிற்றில் வளரும் தன் வாரிசுக்காக தன்னை அர்ப்பணிக்கத் துவங்கி விட்டான்.

கதை தொடரும்
Aathifa Ashraf

“ஹபி உம்மாக்கிட்ட டீ போட சொல்லவா?” “ஓகே பேபி, நான் வொஷ் ரூம் போய் வாரன். ஏன்ட புள்ள ரெடி ஆவி இரியுங்க, டாக்டர் கிட்ட போய் வந்துடலாம்.” “ஹ்ம்ம் ஓகே ஹபி” கணவனின்…

“ஹபி உம்மாக்கிட்ட டீ போட சொல்லவா?” “ஓகே பேபி, நான் வொஷ் ரூம் போய் வாரன். ஏன்ட புள்ள ரெடி ஆவி இரியுங்க, டாக்டர் கிட்ட போய் வந்துடலாம்.” “ஹ்ம்ம் ஓகே ஹபி” கணவனின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *