குரங்கு மனசு பாகம் 53

  • 46

ஆனால் அங்கு அதீக் காத்திருப்பிற்கு ஏற்ப வந்தவள் சர்மியல்ல,

“மே ஐ கம் இன் சேர்”

“இயஸ்”

பார்க்க சற்று உயரமானவள், அரபிப் பெண்கள் போன்ற அழகு, மைதீட்டிய கருமையான நீண்ட கண்கள், அழகாக, ஆடம்பரமான உடையணிந்திருந்தாள்.

“என்ன சேர், நான் யாருன்னு தெரியாம குழப்பத்துல இருக்கீங்க போல?”

“ஓ இயஸ்… நீங்க…”

உங்க வைய்ப் சர்மீட பெஸ்ட் ஹஸ்பனோட செகன்ட் வைய்ப்

“ஓஹ் நீங்களா?” ஏதோ உறவுக்காரர் போல் வாய்பிளந்தான் அதீக்.

“ஆனா இவள் எதுக்கு வரனும்? அதுவும் என்னத் தேடி?” சிறிது தயக்கமாய் உணர, நேரடியாக விடயத்துக்குப் போனான்.

“தென்? வட் ஈஸ் த மெடர்?”

“சர்மி எப்புடி இருக்காங்க சேர்?”

“ஷீ ஈஸ் பைய்ன்” எடுத்த எடுப்புக்கே சொல்லி விட்டான்.

“என் ஹஸ்பன்ட் அவங்கள பத்தி ஒரே சொல்லுவாங்க, சர்மி ரொம்ப நல்ல பொண்ணு சேர், அவங்க உம்மா செஞ்ச தப்புக்கு எல்லாம் அவங்க தான் பழியா போயிட்டாங்க, என் ஹஸ்பன்ட் அவங்கள கஷ்டத்துல விட்டுட்டன்னு ஒரே பீல் பண்ணுவாரு. இப்போவெல்லாம் சர்மி ஞாபகமாவே இருக்குன்னு சொல்லுவாறு, எப்புடி இருந்தாலும் என்ன நம்பி வந்தவள அநாதரவா விட்டிருக்கக் கூடாதுன்னு சொல்லுவாறு. தனக்கு எந்த கஷ்டம் இருந்தாலும் சர்மி பேசாம வாய் மூடி தனிய அழுதுட்டு இருப்பாங்களாம்.”

“ஹ்ம்ம் இனி என்னா?”

“இல்ல சேர் அதுவந்து அவங்கள ஓல்வேஸ் ஹெபியா, கவனமா பார்த்துக் கோங்க, அவங்க இல்லாமப் போனா என்னோடவர் பீல் பன்ற போல இருக்கும்.”

“அதுசரி, இது எல்லாம் சொல்ல ரீசன் என்னா?”

“நோ சேர்.. என் புருஷன் தான் என்ன அனுப்பி வெச்சாரு, போய் உங்க கூட பேசிட்டு வர சொல்லி. சர்மியோட சந்தோஷம் இப்போ உங்க கையில தான் இருக்குன்னு சொல்லி, அவங்க செஞ்ச பாவத்துக்கு பிரதியா உங்ககிட்ட அவங்களப் பத்தி சொல்லிட்டு வர சொன்னாறு.”

“ஒரு நல்ல ஹஸ்பன்டா என் வைய்ப் பத்தி நல்லா தெரிஞ்சி வெச்சிருக்கன், அன்ட் ஹெபியா அவள பார்த்துட்டு இருக்கன், நீங்க யாரும் பீல் பண்ண அவசியமில்ல. இப்போ அவங்க என் சர்மி, நான் மத்தவங்க போல கஷ்டத்துல விட மாட்டன்” நக்கலாய் சொல்லி அதீக் சிரிக்க,

“தென் பைய்ன் சேர், குட் பாய்” ஹேன்ட் பேக் இனை மாட்டிக் கொண்டவளாக அவ்விடம் விட்டெழுந்து விடை பெற்றாளவள்.

“ச்சீ” ஏதோ சலித்துக் கொண்ட அதீக் தன் காரியங்களை மீள் கவனிக்க எத்தனிக்கையில் தான் அவனுக்கு தன்னவள் நினைப்பே வந்தது.

“சர்மி.. ஓஹ் கோட் காலையில போன் பண்ணினப்போ நான் கண்டபடி திட்டிட்டனே… நிச்சயமா நல்லா அழுதிருப்பா, ஐயோ! நானும் அந்த மோசக்காரன் போல ஆவிட்டனா? நோ.. நோ..” வேலைகளை அப்புறப் படுத்திவிட்டு குற்ற உணர்ச்சியோடே தன்னவளைக் காண வீட்டுக்கு விரைந்தான் அதீக்.

“சர்மி.. சர்மிம்மா”

கட்டிலில் சோர்ந்து கிடந்தவள் தன்னவன் குரலை வாங்கிக் கொண்டும், காதலோடு உறைந்து வந்த அவ்வொலி அவளுக்கு பிரமை போல் இருந்தது. பேசாமல் கண்களை இருக மூடிக் கொண்டவளை கட்டியணைத்தன அக் கரங்கள்.

“யாரு?” பதறித் துடித்து எழுந்து நின்ற சர்மி, பக்கத்தே தன்னவனைக் காண, ஏதோ ஏக்கத்தில் இருந்தவள் போல் கணவனை கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுதாள்.

“என்னவிட்டு எங்கயும் போயிடாதிங்க ஹபி பிலீஸ், என்னவிட்டு போயிடாதிங்க ஹபி. எனக்கு நீங்க வேணும் ஹபி. ஹபி எனக்கு நீங்க வேணும்” வீறிட்டு அழுதவளை கண்டு திணறிப் போனான்.

“ஐயோ சர்மிம்மா! என்னடா இது? நான் உன்னவிட்டு எங்க போகப் போறன்? என்ன சர்மிம்மா? இப்புடி அழாதிங்க தங்கம் பிலீஸ்” கணவனின் மார்பில் முகம் புதைத்தவளின் தலை உறுதியற்று சாய்ந்தது.

“சர்மி, சர்மி, ஹே சர்மிம்மா.. சர்மி” மயக்கத்தில் கிடந்த மனைவியைக் கண்டு மூச்சு நிற்கும் போல் இருந்தது அதீகிற்கு.

கதை தொடரும்…
Aathifa Ashraf

ஆனால் அங்கு அதீக் காத்திருப்பிற்கு ஏற்ப வந்தவள் சர்மியல்ல, “மே ஐ கம் இன் சேர்” “இயஸ்” பார்க்க சற்று உயரமானவள், அரபிப் பெண்கள் போன்ற அழகு, மைதீட்டிய கருமையான நீண்ட கண்கள், அழகாக,…

ஆனால் அங்கு அதீக் காத்திருப்பிற்கு ஏற்ப வந்தவள் சர்மியல்ல, “மே ஐ கம் இன் சேர்” “இயஸ்” பார்க்க சற்று உயரமானவள், அரபிப் பெண்கள் போன்ற அழகு, மைதீட்டிய கருமையான நீண்ட கண்கள், அழகாக,…

3 thoughts on “குரங்கு மனசு பாகம் 53

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *