நிறையும் குறையும்

  • 14

மைதீட்டிய மயக்கும் விழிகளை உடைய
மங்கையை விட கருமைப் படர்ந்த
கண்களில் கனவுகளை சுமக்கும் பெண்
எதில் குறைந்துப் போனாள்.

நிறம் பூசப்பட்ட நீண்ட நகங்களை
உடைய பெண்ணை விட
உடைந்த நகங்களுடன்
அடுப்பங்கரையில் போராடும் பெண்
எதில் குறைந்துப் போனாள்.

நொறுங்காத மடங்காத வண்ண
ஆடை அணியும் பெண்ணை விட
பழையதை பகட்டு இல்லாமல் அணியும் பெண்
எதில் குறைந்துப் போனாள்.

பணத்திமிரில் பண்பில்லாமல்
அலையும் பெண்ணை விட
ஏழ்மையிலும் பண்பாக பழகும் பெண்
எதில் குறைந்துப் போனாள்.

மணம் பூசி வலம் வரும் பெண்ணை விட
மனதிலே மணத்துடன் வலம் வரும் பெண்
எதில் குறைந்துப் போனாள்.

சுய நலம் கொண்ட பெண்ணை விட
அன்புடன் அரவணைக்கும் பெண்
எதில் குறைந்துப் போனாள்.

இல்லாதவர்களை இழிவாக எண்ணும்
பெண்ணை விட
எல்லோரோடும் இங்கிதம் பேணும் பெண்
எதில் குறைந்துப் போனாள்.

பார்த்ததும் மயக்கும்
பால்நிறப் பெண்ணை விட
கவர்ச்சி இல்லா கருப்புப் பெண்
எதில் குறைந்துப் போனாள்.

குறைகள் என்று எதுவும் இல்லை
அவன் படைப்பில்
பார்ப்பவர்களின் கண்களில் தான்
நிறையும் குறையும்!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

மைதீட்டிய மயக்கும் விழிகளை உடைய மங்கையை விட கருமைப் படர்ந்த கண்களில் கனவுகளை சுமக்கும் பெண் எதில் குறைந்துப் போனாள். நிறம் பூசப்பட்ட நீண்ட நகங்களை உடைய பெண்ணை விட உடைந்த நகங்களுடன் அடுப்பங்கரையில்…

மைதீட்டிய மயக்கும் விழிகளை உடைய மங்கையை விட கருமைப் படர்ந்த கண்களில் கனவுகளை சுமக்கும் பெண் எதில் குறைந்துப் போனாள். நிறம் பூசப்பட்ட நீண்ட நகங்களை உடைய பெண்ணை விட உடைந்த நகங்களுடன் அடுப்பங்கரையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *