என் ஆசான்

  • 8

அறியாமை எனும் அரக்கனை
எனைவிட்டுத் துறத்து
அறிவு எனும் ஆயுதத்தை
தினம் எனக்குக் கொடுத்த
அன்பான ஆசான்

என்வாழ்வும் வண்ணமாக
காரணமும் அவர்தான்

அகிலத்தின் ஓருவோரத்தில்
ஒழிந்திருந்த என்னை
பள்ளிக்கூடமெனும்
பண்புகூடத்தில்
என்னப்பா சேர்த்துவிட
அன்பான அவர் என்னை
பிள்ளையாக ஏற்றுவிட
இரண்டாவது தாயின் பாசத்தை
இரண்டே நொடியில் உணர்ந்தேன்
என் ஆசிரிய அன்னையிடம்.

தடங்கள் தவறி
தடுமாற்றப்பாதையில்
தத்தளிக்கும் எனை
கனிவாக தண்டித்து
கரையேற்ற தெண்டித்தார்
என் ஆசிரிய அப்பா.
அவர்தான் என்னறிவிற்கும் அப்பா.

பாலரில் தொடங்கி
பன்னிரண்டு வரையிலும்
நான் ஆண்டு மாறமாற
என் அறிவு ஏறஏற
அவர்கள் ஆள்மாறும்போது கூட
அன்பில் வேறுபாடே தெரியவில்லை.
காரணம் தேடிப்பார்த்தால்
நான் அவர்களது வளர்ப்பு பிள்ளை.

அன்பெனும் சொல்லை
அனுபவித்து உணர்ந்தேன்
பெற்றெடுத்த அன்னையிடம்.
அதை அறிவால் அறிந்து
சிந்தித்து உணர்ந்தேன்
என் ஆசிரிய அன்னையிடம்.

தியாகமெனும் சொல்லை
கண்கண்டு அறிந்தேன்
விதி தந்த தந்தையிடம்.
என் தந்தையவர் தியாகத்தினதும்
பொருளை உணர்ந்தேன்
மதிதந்த தந்தையிடம்.

ஆண்டுகள் சென்றாலும்
அகிலங்கள் கடந்தாலும்
மாண்டுதான் போனாலும் நான்
மண்ணோடு மறைந்தாலும்
மறவாத உணர்வுகள்
மதிதந்த உறவுகள்
இனி அழுதாலும் புரண்டாலும்
கிடைக்காத உறவுகள்
மறுபடியும் கிடைக்குமா?
மனக்கண்ணீர் துடைக்குமா?
விடையின்றித் தவிக்கிறேன்
விழிபெறுக அழுகிறேன்.

Rustha Salam

அறியாமை எனும் அரக்கனை எனைவிட்டுத் துறத்து அறிவு எனும் ஆயுதத்தை தினம் எனக்குக் கொடுத்த அன்பான ஆசான் என்வாழ்வும் வண்ணமாக காரணமும் அவர்தான் அகிலத்தின் ஓருவோரத்தில் ஒழிந்திருந்த என்னை பள்ளிக்கூடமெனும் பண்புகூடத்தில் என்னப்பா சேர்த்துவிட…

அறியாமை எனும் அரக்கனை எனைவிட்டுத் துறத்து அறிவு எனும் ஆயுதத்தை தினம் எனக்குக் கொடுத்த அன்பான ஆசான் என்வாழ்வும் வண்ணமாக காரணமும் அவர்தான் அகிலத்தின் ஓருவோரத்தில் ஒழிந்திருந்த என்னை பள்ளிக்கூடமெனும் பண்புகூடத்தில் என்னப்பா சேர்த்துவிட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *