உறக்கத்தை கைது செய்து

  • 20

கண்களே உறக்கத்தை
கைது செய்துவிடுங்கள்.
என் காதலன் எனக்காக
காத்திருக்கின்றான்.

அவனது ஒவ்வொரு
தீண்டலிலும் என்னுள்
ஆயிரம் உணர்ச்சிகள்
அலை மோதுகின்றன.

அவனது தூண்டல்கள்
என்னை இமாலய
சிகரத்தை தொடும்
படிக்கல்லாகின்றன.

என் வாழ்வின்
அர்த்தத்திற்குரியவனே!
உன்னில் உச்சம் காண்பதே
என் லட்சியமாகி விட்டது.

பூவாக இருந்தவளை
செண்டாக மாற்றிய
உன் பணி உலகின்
ஒப்பற்ற சக்தியாகிறது.

கல்வி எனும் பெயர்
உனக்கு சிறிதாயினும்
உனது உன்னத சேவைகள்
இம் மண்ணில் அறிஞர்களை
விதையாக்கி விட்டது!

கற்கையால் நான்
என் கண்களை
கைது செய்து விட்டேன்!
உன்னில் உச்சம் காண்பதே
என் லட்சியம் ஆகியது.
உன்னை தேடும் நான்

Shima Harees
Puttalam

கண்களே உறக்கத்தை கைது செய்துவிடுங்கள். என் காதலன் எனக்காக காத்திருக்கின்றான். அவனது ஒவ்வொரு தீண்டலிலும் என்னுள் ஆயிரம் உணர்ச்சிகள் அலை மோதுகின்றன. அவனது தூண்டல்கள் என்னை இமாலய சிகரத்தை தொடும் படிக்கல்லாகின்றன. என் வாழ்வின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *